ஈசூனில் 2029ஆம் ஆண்டுக்குள் புதிய பேருந்து பணிமனை

ஈசூன் அவென்யூ 8ல் 2029ஆம் ஆண்டுக்குள் புதிய பேருந்து பணிமனை கட்டப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதும் புதுப்பிப்பதும் அதன் நோக்கம்.

பேருந்து பணிமனை கட்டுவதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிம்பாங் பகுதியில் கட்டப்படும் இந்த பலமாடி பணிமனை 5.6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைகிறது.

புதிய பேருந்து பணிமனையில் 500 பேருந்துகள் நிறுத்த வசதி இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

பணிமனை கட்டப்படும் இடம் அதற்கு முன்னர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியாக இருந்தது. அது 2019ஆம் ஆண்டு காலி செய்யப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ்விடத்தில் ஒரு பகுதியை போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

புதிய பணிமனை நான்கு மாடிக் கட்டடமாக இருக்கும் என்றும் மேலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்க பலமாடி தங்குமிடம் இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

பிரதான கட்டடத்தில் தினசரி பேருந்து செயல்பாடுகள், பேருந்து பழுது மற்றும் பராமரிப்பு, பேருந்து நிறுத்துமிடம், பேருந்துக்கான மின்னூட்ட நடவடிக்கைகள் இடம்பெறும். மேலும் கட்டடத்தின் கூரைகளில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.

கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிம்பாங் பேருந்து பணிமனைக் கட்டியபிறகு ஈசூனில் உள்ள பேருந்து பணிமனை ஒன்றுக்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது எந்த பணிமனை என்று ஆணையம் தகவல் வெளியிடவில்லை.

2029ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும் மூன்றாவது பேருந்து பணிமனை சிம்பாங் ஆகும். பாசிர் பாஞ்சாங் மற்றும் லோரோங் ஹாலுஸ் பகுதிகளில் பேருந்து பணிமனைகள் கட்டப்படுகின்றன. அதன் கட்டுமான பணிகளும் இந்த ஆண்டே தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!