விலங்கு உருவச் சிலைகளை அறிமுகப்படுத்தும் மண்டாய் வனவிலங்குக் குழுமம்

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு அதைக் கொண்டாடும் வகையில் மண்டாய் வனவிலங்குக் குழுமமும் ‘எக்ஸ்எம் ஸ்டுடியோ’ வும் இணைந்து ஆறு விலங்கு உருவச்சிலைகள் அடங்கிய வரிசைத் தொகுப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.

உலக வனவிலங்கு தினம் ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதுபோன்ற சேகரிக்கக்கூடிய விலங்கு உருவச்சிலைகளின் வரிசை தொகுப்பை மண்டாய் குழுமம் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.

அறிமுக விலையாக ஒவ்வொரு தொகுப்பும் $29க்கு வரும் ஜூன் 2ஆம் தேதி வரை விற்கப்படும். அதற்குப் பிறகு அத்தொகுப்பு $39க்கு விற்கப்படும்.

‘லசாடா’, ’ஷாப்பி’ உள்ளிட்ட இணைய வர்த்தகத் தளங்களில் இருக்கும் மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் இணையக் கடைகளிலும் மண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் இருக்கும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த விலங்கு உருவச்சிலைகளின் வரிசைத் தொகுப்புகளைப் பொதுமக்கள் வாங்கலாம்.

மேலும், 809, பிரெஞ்சு சாலையில் இருக்கும் ‘எக்ஸ்எம் ஸ்டுடியோ’விலும் இத்தொகுப்புகள் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விற்பனை வருவாயில் பாதி வட்டாரத்தின் வனவிலங்கு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!