2023ஆம் ஆண்டு அதிக பணிப்பெண்கள் மோசடிகளில் சிக்கினர்: கா சண்முகம்

அதிகமான வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் கடந்த ஆண்டு மோசடிகளில் சிக்கியதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் 500 இல்லப் பணிப்பெண்கள் மோசடிகளுக்கு ஆளானதாகவும் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் இது 18 விழுக்காடு அதிகம் என்றும் அவர் சொன்னார்.

2022ஆம் ஆண்டு 423 பணிப்பெண்கள் மோசடிகளில் சிக்கியதாக எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.

மோசடிகளுக்கு ஆளாகும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கையை உள்துறை அமைச்சு கண்காணிக்கிறதா என்று சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

மோசடிகள், வீடு புகுந்து திருடுதல், அத்துமீறி நுழைதல் போன்ற பொதுவான குற்றங்களைத் தடுப்பது எவ்வாறு என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்காக காவல்துறை நடத்துகிறது.

இல்லப் பணிப்பெண்கள் மோசடிகளில் சிக்குவது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் 2022ஆம் ஆண்டு விவரங்களை வெளியிட்டு இருந்தது.

2021ஆம் ஆண்டு 357 பணிப்பெண்கள் மோசடிகளுக்கு ஆளானதாகவும் அதற்கு முந்திய 2020ஆம் ஆண்டு 216 என்ற எண்ணிக்கையில் இருந்து அது அதிகரித்ததாகவும் அந்தச் செய்தி குறிப்பிட்டு இருந்தது.

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த மோசடிச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு 46,563 எனப் பதிவானதாக மோசடிச் சம்பவங்கள் தொடர்பான வருடாந்திர புள்ளிவிவரம் தெரிவித்தது.

அந்த ஆண்டு மோசடிகளில் சிக்கியோர் $651 மில்லியனை இழந்ததாகவும் 2019ஆம் ஆண்டு முதல் மோசடிகளில் பறிபோன தொகை $2.3 பில்லியனுக்கு மேல் என்றும் புள்ளிவிவர அறிக்கைக் குறிப்பிட்டு இருந்தது.

2021ஆம் ஆண்டு தகவல் திருட்டு, இணையக் காதல் மோசடி மற்றும் கடன் மோசடி ஆகியவற்றில் பணிப்பெண்கள் அதிகம் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

மனிதவள அமைச்சு நடத்தும் பாதுகாப்புத் தீர்வுக்கான கட்டாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மோசடிகளில் இருந்துத் தங்களைத் தாங்களே எவ்வாறு காத்துக்கொள்ளலாம் என்னென்ன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று சொல்லித்தரப்படுவதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!