சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாக கடந்தவருக்கு ஏற்பட்ட நிலை

பரபரப்பான சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாகக் கடந்த ஆடவர் ஒருவரை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதப் பார்த்தது. வேன் வருவதைக் கண்டு நிலைதடுமாறி அவர் சாலையில் பின்னோக்கி விழுந்தார்.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி, எஸ்ஜி ரோடு விஜிலாண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

சாலையின் இடது தடத்தில் டொயோட்டா ஹயஸ் வேன் செல்வது காணொளியில் தெரிந்தது. அப்போது ஆடவர் ஒருவர் கண்மூடித்தனமாக சாலையைக் கடப்பது தெரிந்தது.

வேன் வருவதைக் கண்ட அவர், தாம் சாலையைக் கடந்து கொண்டிருப்பதாகக் கையைத் தூக்கிக் காட்டினார்.

எனினும், வேன் நிற்காததைக் கண்ட அவர், அதைத் தவிர்க்க பின்னோக்கி நடந்ததில் நிலைதடுமாறி சாலையின் அடுத்த தடத்தில் விழுந்தார்.

கீழே விழுந்தவுடன் சாலையில் எழுந்து அமர்ந்த அவர், வேன் ஓட்டுநரைத் திட்டுவதுபோல வேனை நோக்கி கையைக் காட்டினார்.

அவருக்கு உதவிக்கரம் நீட்ட அங்கிருந்த ஆடவர் ஒருவர் முன்வந்தார். அங்கிருந்த மற்றவர்களும் பின்னர் அவருக்கு உதவ வந்தனர்.

இந்நிலையில், கண்மூடித்தனமாக சாலையைக் கடந்த அந்த ஆடவரை இணையவாசிகள் பலரும் விமர்சித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!