கூடைப்பந்து போட்டியின்போது எதிரணி வீரரைத் தாக்கிய இளையர்மீது குற்றச்சாட்டு

கூடைப்பந்து போட்டியின்போது எதிரணி வீரரைத் தாக்கிய இளையர்மீது குற்றச்சாட்டு

1 mins read
ed1055a1-8a73-4e3b-b958-ff63de7861d6
எதிரணி வீரரைத் தாக்கிய இளையருக்கான தண்டனை டிசம்பர் 23ஆம் தேதி விதிக்கப்படும். - ஷின்மின்
Google News Preferred Icon

ஜூரோங் வட்டாரத்தில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின்போது சக இளையரைத் தாக்கியதாக மற்றோர் இளையர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போட்டியின்போது எதிர் அணியில் விளையாடிய 15 வயது இளையரை 16 வயதிலிருந்த இளையர் ஒருவர் தள்ளியதுடன் முழங்கையை வைத்து மற்ற இளையரின் முகத்தில் அடித்தார்.

சம்பவம் காரணமாக 15 வயது இளையரின் கன்னத்தில் நிரந்தர காயம் ஏற்பட்டு அவருக்கு ஏழு நாள் மருத்துவமனை விடுப்பு கொடுக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தற்போது 17 வயதாகும் இளையர் மற்றோர் இளையருக்குக் காயம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இளையரின் பெயரை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி புளோக் 559 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் இச்சம்பவம் நடந்தது.

சம்பவத்தின்போதுதான் இளையர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

விளையாட்டின்போதும் தற்போது 17 வயதாகியிருக்கும் இளையர் மற்றோர் இளையரை அடிக்கடி தள்ளியதாகவும் கூறப்பட்டது.

டிசம்பர் 23ஆம் தேதி இளையருக்கான தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்