You are here

சிங்க‌ப்பூர்

போதைப்பொருள் குற்ற ஒழிப்பில் சிங்கப்பூர், ஐநா

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களையும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் குற்றங்களையும் எதிர்த்துப் போரிடுவதில் தங் களுக்கு இருக்கும் கடப்பாட்டை சிங்கப்பூரும் ஐநா அமைப்பும் மறு உறுதி செய்துள்ளன. தென்கிழக்கு ஆசிய வட்டாரத் தில் போதைப் பொருள் கட்டுப் பாடு, லஞ்சத்தடுப்பு போன்றவற் றில் ஆற்றலை அதிகரிக்க போதைப்பொருள், குற்றம் ஆகிய வற்றுக்கான ஐநா அலுவலகமும் சிங்கப்பூர் அரசும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் செயல்பாடு

வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் தானா மேரா கரை யோரச் சாலையில் அடுத்த திங்கட்கிழமை முதல் செயல்படத் தொடங்கும். வாகனம் செல்லும்போது குறிப்பிட்ட ஓரிடத்தில் அதன் வேகத்தைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, சாலையில் ஒரு குறிப் பிட்ட தூரத்திற்கு வாகனத்தின் சராசரி வேகத்தைக் கணிக்கும் வகையில் அந்தப் புகைப்படக் கண்காணிப்பு கருவிகள் செயல்ப டும்.

தானா மேரா கரையோரச் சாலையில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கண்காணிப்புக் கருவிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவரம்: epaper.tamilmurasu.com.sg

போலிசுக்கு குறும்புத்தன அழைப்புகள் விடுத்த ஆடவருக்கு சிறை

பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் பலமுறை குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு சிறைவாசம் சென்ற 59 வயது ஆடவர் ஒருவர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் போலிசுக்கு தொந்தரவு தரும் விதத்தில் 31 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். இந்தக் குற்றத்திற்காக பே கியாவ் கெங்கிற்கு 21 மாதச் சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. வேலை இல்லாதவரான அவர், வேண்டுமென்றே தொந்தரவு விளைவிக்கும் வண்ணம் அவசர தொலைபேசி எண்களை அழைத்ததாக தம் மீது சுமத்தப்பட்டிருந்த எட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பேயிக்கு தண்டனை விதிப்பதில் மற்ற 24 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

மனிதவள அமைச்சு: பணிப்பெண்ணுக்குப் போதுமான உணவு வழங்கப்பட வேண்டும்

பள்ளி விடுமுறை காலத்தில் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, இல்லப் பணிப்பெண்களைக் கொண்ட பெரும்பாலான முதலா ளிகள் அவர்களை வீடுகளில் விட்டுச் செல்வது வழக்கம். இவ்வேளையில், முதலாளிகள் உள்ளூரில் இல்லாதபோது தங்க ளுக்கு உண்ண போதுமான உணவு இருக்குமா என்பது குறித்து பணிப்பெண்கள் அக்கறை தெரிவித்துள்ளனர். பணிப்பெண் களுக்கு ஆலோசனையும் ஆதர வும் வழங்கும் அமைப்புகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் பணிப் பெண்கள் இது குறித்த தங்களது கருத்துகளைப் பதிவுசெய்து உள்ளனர்.

ஆய்வு: மதுப் பழக்கத்தால் அதிகமானோர் பாதிப்பு

சிங்கப்பூரில் மிதமிஞ்சிய மதுபானப் பழக்கம் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினை யாக இருந்தாலும், இத னால் பாதிக்கப்படுவோர் விரை வில் உதவி நாடுவதாக மனநல ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. 4.9 மில்லியன் வெள்ளி பொருட்செலவில் 2016ஆம் ஆண் டில் நடத்தப்பட்ட இரண்டாவது சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி, 24 பேரில் ஒருவர், அதாவது மக்கள்தொகையில் 4.1 விழுக்காட் டினர் தமது வாழ்நாளில் மிதமிஞ்சி ய மதுபானப் பழக்கத் தால் அவதி யுறுவதாகக் கண்டுபிடிக் கப்ப ட்டது. 2010ஆம் ஆண்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 32 பேரில் ஒருவர் மித மிஞ்சிய மதுப் பழக்கத்தால் பாதிக்க ப்பட்டதாக அப்போது தெரிய வந்தது.

வசதிகுறைந்த பிள்ளைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

‘சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ்’ (எஸ்பிஎச்) நிறுவனமும் சிறுவர் படையும் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஷேர் அ கிஃப்ட்’ ஆண்டிறுதி விழாவில் நேற்று சுமார் 160 வசதி குறைந்த சிறார் களுடன் அவர்களின் பராமரிப் பாளர்களும் கலந்துகொண்டனர். ‘எஸ்பிஎச் நியூஸ் சென்டர்’ அரங்கத்தில் பிற்பகல் நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 40 எஸ்பிஎச் ஊழியர்கள் பங்கேற்று வந்திருந்த சிறார் களுடன் தங்கள் பொழுதை இன் பமாகக் கழித்தனர். இந்நிகழ்வுக்கு எஸ்பிஎச் நிறு வனம் 13ஆவது ஆண்டாக ஆதரவு தந்து வருகிறது. குழு விளையாட்டுகள், புதையல் வேட்டை, அறுசுவை விருந்து என அரங்கமே கிறிஸ்மஸ் களை கட்டியிருந்தது.

இடிந்த மேம்பாலச் சாலை கட்டுமான பணி 2019ல் தொடங்கும்

தெம்பனிஸ் விரைவுச்சாலை-தீவு விரைவுச்சாலை சாங்கி மேம்பால சாலையைக் கட்டுவதற்கான மாற் றுக் குத்தகை ஹுவா செங் பில்டர் நிறுவனத்திற்கு $95.6 மில்லிய னுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மேம்பாலச் சாலை சென்ற ஆண்டு இடிந்துவிட்டது. நிலப்போக்குவரத்து ஆணை யம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களை அறிவித்தது. கட்டுமானப் பணி 2019 முத லாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு முற் பாதியில் அந்தச் சாலை கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக் கிறது. அந்தச் சாலை இரண்டாண் டுக்கு முன்னதாகவே முடிக்கப் பட்டு இருக்கும் என்று தொடக்கத் தில் எதிர்பார்க்கப்பட்டது.

டான் டோக் செங் பல் மருந்தகத்தில் நோயாளிகளுக்கு தூய்மையற்ற சாதனங்களுடன் சிகிச்சை;

டான் டோக் செங் மருத்துவமனை யின் பல் மருந்தகத்தில் நவம்பர் 28ஆம் தேதிக்கும் டிசம்பர் 8ஆம் தேதிக்கும் இடையில் முறையாக சுத்தப்படுத்தப்படாத தூய்மையற்ற சாதனங்களைக் கொண்டு எட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்று இதனை தெரிவித்தது. இதனிடையே, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், இத்தகைய சம் பவம் நிகழ்ந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையத்தில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற சம் பவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்பு முறை முழுவதும் பல அறிவுரைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

பேச்சுவார்த்தை விவரங்கள் ரகசியமாக இருப்பது நல்லது

சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்கும் விதிமுறைகள் பற் றிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவ ணங்களை சிங்கப்பூர் வெளியிட் டது என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு நேற்று மாலை ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

கடல் எல்லை விவகாரம்: மலேசியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது

சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் இருந்து மலேசிய அரசாங்கத்தின் கப்பல்களை மீட்டுக்கொண்டு, அக்டோபர் 25ஆம் தேதிக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற சிங்கப்பூரின் யோசனைக்கு மலேசியா இணங்க முடியாதது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது. எனினும், சிங்கப்பூருடன் கூடிய இப்போ தைய கடல் எல்லை சச்சரவை அமைதியான முறையில் தான் கையாளப்போவ- தாக மலேசியா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன் றில் அமைச்சு குறிப்பிட்டது.

Pages