You are here

சிங்க‌ப்பூர்

தரவுத்தள பாதுகாப்பு மேம்பாடு: பொதுமக்கள் கருத்துரைக்கலாம்

சிங்ஹெல்த் நோயாளிகள் கிட்டத் தட்ட 1.5 மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்கள் இணையம் வழியாகத் திருடப்பட்ட விவகாரம் குறித்து நான்கு உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழு இம்மாதம் 21ஆம் தேதி வெள்ளிக் கிழமை தனது விசாரணையைத் தொடங்கவிருக்கிறது. இரு வாரங்களுக்கு, அதாவது அக்டோபர் 5ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் ‘நீதிமன்றம் 5ஏ’ல் விசாரணை இடம்பெறும். தனிப்பட்ட முறையிலும் பொது மக்கள் பங்குகொள்ளும் விதத் திலும் இந்த விசாரணை இடம் பெறும்.

ஆண்டுக்கு 350 பேர் தேசிய சேவை கடமையை நிறைவேற்றுவதில்லை

கடந்த 10 ஆண்டுகளில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 350 பேர் தங்களது தேசிய சேவை கடமையை ஆற்றத் தவறியதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் நிகழ்ந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இது குறித்து ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆங் வெய் நெங் கேள்வி எழுப்பினார். தேசிய சேவையைப் புறக்கணித்தவர்களுக்கு தற்காப்பு அமைச்சு, அவர்கள் கடைசியாக தங்கியிருந்த வீட்டு முகவரிக்கு கடிதங்களை அனுப்புவதாக டாக்டர் இங் தெரிவித்தார்.

போலிசிடம் பொய்ப் புகார் அளித்த ஆடவர் மீது நடவடிக்கை

தன்னை சிலர் தாக்கி, கொள்ளையடித்ததாகப் போலிசாரிடம் பொய்யான புகாரை அளித்த 34 வயது ஆடவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். உட்லண்ட்ஸ் தொழிற்பூங்கா இ5ல் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர், செப்டம்பர் 5ஆம் தேதி கொடுத்த தமது புகாரில் குறிப்பிட்டார். ஆயினும், அவர் கூறியதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததை ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கவனித்தனர். இறுதியில் அந்த ஆடவர் பொய்யான தகவலை கொடுத்ததாக அதிகாரிகள் தீர்மானித்தனர். பொய்யான புகார்களை விசாரிப்பதற்குப் பதிலாக உண்மையிலேயே நடந்த குற்றங்களைக் கையாள்வதற்காக தங்களது வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலிசார் தெரிவித்தனர்.

‘பாண்டான் வேலி’ குடியிருப்பு: சாதனை விலைக்கு விற்க இலக்கு

சிங்கப்பூரின் முதல் கூட்டுரிமைக் குடியிருப்புகளில் ஒன்றான, மொத்தம் 623 வீடுகளைக் கொண்ட பாண்டான் வேலி பேட்டையை ஒட்டுமொத்தமாக $2.6 பில்லியனுக்கு விற்க இலக்கு கொண்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மொத்தம் 865,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ‘பாண்டான் வேலி’, அந்த விலைக்கு விற்கப்படும் பட்சத்தில், டாலர் அடிப்படையில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒட்டுமொத்த விற்பனையாக இருக்கும். 1970களில் கட்டப்பட்ட அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்புப் பேட்டையை 2011ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், அது வெற்றியடையவில்லை.

கோவில் உண்டியலில் திருட்டு

தேவாலய உண்டியலில் கைவைத் ததால் பிடிபட்டு 2009ல் சிறை சென்றும் மீண்டும் அதே குற்றச் செயலில் ஈடுபட்டதால் வோங் ஆ கியாங், 69, எனும் ஆட வருக்கு நான்காண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறுமுகம் ரோட்டில் உள்ள கிம் ஹோங் ஆலய உண்டியலில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒன்பது முறை $8 முதல் $25 வரை திருடியதாக நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது.

சொத்துச் சந்தை நிறுவனத்திற்கு அபராதம், ஓராண்டு தடை

வெளிநாடுகளில் சொத்து வாங் குவதில் உள்ள அபாயங்களை முதலீட்டாளர்களிடம் தெரிவிக் காத ‘எச்எஸ்ஆர் இன்டர்நேஷனல் ரியால்ட்டர்ஸ் பிரைவெட் லிமி டட்’ எனும் சொத்துச் சந்தை நிறுவனத்திற்கு $12,500 அபரா தம் விதிக்கப்பட்டது. அத்துடன், இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து இன்னும் ஓராண்டு காலத்திற்கு வெளிநாட்டுச் சொத்துகளைப் பரிவர்த்தனை செய்யவும் சந்தைப் படுத்தவும் அந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேங்காக்கில் அமையவிருந்த ‘மேன்ஹாட்டன் பார்க் பெனின் சுலர்’ எனும் கூட்டுரிமைக் குடி யிருப்புத் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதலீட்டாளர் கள் இருவர் ‘எச்எஸ்ஆர்’ நிறு வனம் மூலம் வீடு வாங்கினர்.

2021க்குள் புதிய பாதுகாப்பு தரநிலைக்கு உட்பட வேண்டும்

மின் ஸ்கூட்டர்கள் போன்ற இயந்திர வசதியுடன் கூடிய தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் 2021ஆம் ஆண்டிற்குள் தீப்பாது காப்பு தரநிலை ஒன்றுக்கு உட்பட வேண்டியிருக்கும். அந்தச் சாதனங்கள் தீப் பற்றிக்கொள்ளக்கூடிய அபாயமே அதற்குக் காரணம். இதன் தொடர்பில் முன்மொழி யப் பட்ட சட்டம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. அதன்படி, விற்பனை யாளர்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து UL2272 தர நிலைக்கு உட்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டும் விற்க அனுமதிக்கப்படுவர். அமெரிக்காவை சேர்ந்த சுயேட்சை சான்றிதழளிக்கும் நிறுவனம் ஒன்று இந்தத் தரநிலையை உருவாக்கியுள்ளது.

எரிவாயு சட்ட திருத்தம் பரிந்துரை

நாட்டின் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை அல்லது தடைகள் ஏற்படும் ஆபத்தைத் தவிர்ப்ப தற்கான பாதுகாப்பு நடவடிக்கை களை எரிசக்தி துறையிலுள்ள நிறுவனங்கள் மேற்கொள்வதை எரிசக்தி சந்தை ஆணையம் விரைவில் உறுதிப்படுத்த முடியும். எரிவாயு சட்டத்தில் செய்யப் பட வுள்ள பல திருத்தங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப் பில் இடம்பெற்றன. கடந்த 2001ல் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், இந்த தொழில் துறைக்கு போட்டித் தன்மையான சந்தைக் கட்டமைப்பை உருவாக்கியதுடன், எரிவாயுவை விற் பதற்கும் எடுத்துச்செல்வதற்கும் பாதுகாப்புகளை வழங்கியது.

புகை பிடித்தலைத் தடுத்தல்: அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புகை பிடிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட இடங்களில் விசாரணை ஆணை இல்லாமல் நுழைந்து சோதனையிட தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் அதிகாரம் பெற்றிருப்பர். அவர்களை ஆதாரங்கள் திரட்டுவதிலிருந்து தடுப்பதும் அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சட்ட விரோதமாகும். மேலும் அதிகாரிகளை வார்த்தைகளாலோ உடல் ரீதியாகவோ தாக்குவதுடன், தவறான தகவல் தெரி விப்பதும், அடையாளங்களை மறைப்பதும் சட்ட விரோதமாகி றது. புகை பிடித்தல் (குறிப்பிட்ட இடத்தில் தடை விதிக்கும்) சட்டத்தின் திருத்தங்களை சுகாதார மூத்த துணை அமைச் சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்

உச்ச நீதிமன்ற விதிமுறைத் தொகுப்பு திருத்தி அமைக்கப் பட்டால், போதிய அடிப்படைக் காரணங்கள் இல்லாத வழக்கு களை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை நீதிமன்றம் பெறும். மற்றவருக்கு தேவையில்லாத தொந்தரவு கொடுக்கும் வழக் குகளைக் கட்டுப்படுத்த உயர் நீதிமன்றத்துக்கும் மேல்முறை யீட்டு நீதிமன்றத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மாற் றங்கள், அதிகாரம் வழங்கும். இதன்மூலம் சிவில் வழக்கு களில் பல்வேறு தடுப்பு ஆணைகளை வழங்கலாம். உச்ச நீதிமன்ற விதிமுறைத் தொகுப்பு (திருத்த) சட்ட நகலை நேற்று சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Pages