You are here

சிங்க‌ப்பூர்

மாதர், சிறார்களை மேலும் பாதுகாக்க பல பரிந்துரைகள்

சிங்கப்பூரில் மாதர்களையும் சட்டப்படி வயது குறைந்த சிறார்களையும் எளிதில் பாதிக் கக்கூடிய நிலையில் இருப்போரையும் மேலும் பாதுகாக்க பரந்த அளவிலான யோசனைகளை குற்றவியல் தண்டனைச் சட்ட மறுபரிசீலனைக் குழு முன்வைத்து இருக்கிறது. அந்தப் பரிசீலனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் வன்செயல்கள், பாலியல் கொடுமைகளிலிருந்து இத்தகைய பிரிவினர் களுக்குச் சட்டப்படி அதிக பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்படும்.

நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும்

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ=வை ரத்துச் செய்வதா அதில் மாற்றம் செய்வதா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரி- வித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் முதன்முறையாக கருத்துரைத்ததை அடுத்து இத னைத் தெரிவித்தார். சட்ட வடிவைப் பொறுத்து, நாடாளுமன்றத்தில் பொதுக்- கொள்கை வகுப்பதில் பொது மக்களின் அபிப்பிராயத்தைப் பெறு- வது பொருத்தமாக இருக் கும் என்று அவர் கூறினார். குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ படி தற்போது ஓரினச் சேர்க்கை குற்றமாகிறது.

நுழைவுச் சீட்டு இணைய மோசடிகளின் தொடர்பில் ஆடவர் கைது

இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை விற்று மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், ‘யூனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூர்’, விமானச் சீட்டுகள் போன்றவற்றுக்காக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டோர் அவரிடம் பணம் செலுத்தியிருந்தனர். இவ்வாண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த மோசடி குறித்து போலிசிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. வங்கியில் பணம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனப் பாதிக்கப்பட்டோர் கூறியிருந்தனர். அந்த சந்தேக ஆடவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவசர மருத்துவ வாகனம்=-கார் மோதல்: காயமடைந்த நால்வர் மருத்துவமனையில்

நியூ பிரிட்ஜ் ரோட்டில் நேற்று முன்- தினம் மாலை அவசர மருத் துவ வாகனத்திற்கும் காருக்கும் இடை யே விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த மருத்துவ வாகனத்தில் இருந்த 69 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரும் மூன்று மருத்- துவ உதவியாளர்களும் இதில் காயமடைந்ததில் மருத்துவ- மனைக்கு கொண்டுசெல்லப்பட் டனர்.

சட்டவிரோத மீன்பிடிப்பு: பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை

மெர்லையன் பூங்காவில் இரு இளையர்கள் மீன்பிடிப்பதைக் காட்டும் காணொளி பரவியதைத் தொடரந்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது. Sure Boh Singapore என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான அந்தக் காணொளி சட்டவிரோ தமாக இருவர் மீன் பிடித்தலில் ஈடுபடுவதைக் காட்டியது. அந்த இருவரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. “இச்சம்பவம் தொடர்பில் நாங்கள் விசாரணை நடத்தி வரு கிறோம். இந்த இருவரைப் பற்றிய விவரம் தெரிந்தால் ‘பிரைவெட் மெஸேஜ்’ பகுதியில் தெரி விக்கலாம்,” என ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அறிக்கை வாயிலாக கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில்நுட்பத் தமிழுக்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள்

இன்றைய பன்மொழி பயன்பாட்டுச் சூழலில் தமிழ் மொழியை எவ்வாறு தக்கவைத்துப் பயன்படுத்துவது என்பது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அதற்கேற்ப நேற்று நடைபெற்ற மாநாட்டில் பொது அமர்வு ஒன்றும் பல தலைப்புகளை ஒட்டிய இணை அமர்வுகளும் இடம்பெற்றன. “உலகத்தின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி, இன்று உலகம் முழுவதுமே கற்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு,” என்றார் மாநாட்டின் முதல் பொது அமர்வில் பேசிய தலைவர் டாக்டர் மனோன்மணி சண்முகதாஸ்.

மோட்டார்சைக்கிள் - பந்தய கார் மோதிய விபத்தில் மூவர் காயம்

யூனோஸ் லிங்க் - காக்கி புக்கிட் அவென்யூ 1 சந்திப்பில் பந்தய கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டன. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பந்தய காரை ஓட்டிச் சென்ற 50 வயது ஆடவரும் 51 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்து சென்ற 43 வயதுப் பெண்ணும் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று போலிஸ் தெரிவித்தது.

உயிரைப் பறிக்கும் கனரக வாகன விபத்துகள் குறைந்தன

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனரக வாகனங் களால் ஏற்படும் உயிர் கொல்லி விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி யில் கனரக வாகனங்களால் 10 உயிர் கொல்லி விபத்துகள் ஏற்பட்டன.

Pages