You are here

சிங்க‌ப்பூர்

சூரிய எரிசக்தி ஒப்பந்தத்தில் ‘செம்ப்கார்ப்’ கையெழுத்து

சிங்கப்பூரின் உற்பத்தி ஆலைகள் இரண்டில் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தி பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் செம்ப்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று இந்நிறுவனம், சிங்கப்பூர் பங்குச்சந்தையில் நேற்று அறிவித்தது. சிங்கப்பூரில் ஒரே நிறுவ னத்திற்குச் சொந்தமான ஆகப் பெரிய சூரிய சக்தி வசதியாக இது அமையவிருக்கிறது. இது அதிகபட்சமாக 6.2 மெகாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடியது. ஆண்டுக்கு இது கிட்டத்தட்ட மணிக்கு 7,435 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் ஆற்றல் உடையது.

10 புதிய பட்டயப் பயிற்சி வாய்ப்புகள்

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பட்டதாரிகள் பட்டயப் படிப்பில் சேர அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அவை, வேலை பார்த்துக் கொண்டே படிக்க வகை செய்கின்றன. தொழில்நுட்பக் கல்விக் கழகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 10 புதிய தொழில்நுட்ப பட்டயப் படிப்புச் சான்றிதழ்களை வழங்கும். அந்தப் படிப்புகளில் சுமார் 350 பேர் சேரலாம். அவற்றில் சேர்வோர், படித்துக்கொண்டே தங்கள் பாடத்திட்ட நேரத்தில் 70 விழுக்காட்டை வேலையில் செலவிட்டு பயிற்சி பெறலாம். முதலாளிகளுடன் சேர்ந்து புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின் றன.

ஒரே இடத்தில் 14 மருந்தகங்கள்

சாங்கி பொது மருத்துவமனை, 14 நிபுணத்துவ மருந்தகங்களைக் கொண்ட புதிய மருத்துவ நிலையத்துடன் முதிய நோயாளி களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்றும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், மருத்துவ நிலையத்தின் அதிகார பூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நேற்று தெரிவித்தார். வெவ்வேறு திறன்களைக் கொண்ட மருத்துவ நிபுணத்துவ குழுக்களை இந்நிலையம் ஒருங் கிணைக்கிறது. சிக்கலான பிரச்சினைகளால் அவதிப்படும் நோயாளிகளைக் கவனிப்பதற் காகவே இந்த ஏற்பாடு செய்யப் பட்டதாக திரு கான் தெரிவித்தார். ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த புதிய நிலையம், சாங்கி பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய தூதுவர்களை நியமிக்கும் எரிசக்தி சந்தை ஆணையம்

ரிசக்தித் துறையில் முதன் முறையாக பத்து இளையர்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். வர்த்தக, தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் டாக்டர் டான் வூ மெங், அனைத்துலக எரிசக்தி வாரத்தை ஒட்டிய நிகழ்ச்சி ஒன்றில் 14 வயதுக்கும் 23 வயதுக்கும் இடை யிலான பத்து மாணவர்களைத் தூதுவர்களாக அறிவித்தார். எரிசக்தி சந்தை ஆணையம், தனது முயற்சிகள் இளையரைச் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் ‘எரிசக்தித் தூதுவர்’ திட்டத்தைத் தொடங்கியது.

புதிய மின்சார விநியோகத் திட்டங்கள்

‘எம்1’ தொலைத்தொடர்பு நிறுவ னமும் ‘கெப்பல் எலெக்ட்ரிக்’ மின்சார விநியோக நிறுவனமும் இணைந்து மின்சாரத்தை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளன. திறந்த மின்சார சந்தையை விரிவுபடுத்தும் நடவ டிக்கைகளில் புதிய முயற்சி அங்கம் வகிக்கிறது. இத்திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. மின்சாரம் வாங்குவதற்கான திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தி யேக சலுகைகள், விலைக்கழிவுகள் ஆகியவை வழங்கப்படும் என்று இந்த இரண்டு நிறுவனங்கள், தங்களது கூட்டு அறிக்கை ஒன்றில் கூறின.

‘ஸ்கில்ஸ்பியூச்சர்’: புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகள்

பெரியவர்களுக்கான கல்விப் பயிற்சிகளின் தரத்தை உயர்த்த புதிய ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டங் கள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பயிற்றுவிப்பாளர்கள் கற்றலுக் கான மேல்நிலை சான்றிதழ் திட்டத்தில் சேரலாம் என்று வர்த்தகத்திற்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருக்கிறார். திட்டத்தின்வழி பயிற்சிகளை வகுப்பறைகளில், வேலை இடங் களில் அல்லது இணையத்தின் வாயிலாக எப்படி நடத்துவது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி

கடந்த ஜூன் மாதம் சிங்ஹெல்த் கட்டமைப்பில் ஏற்பட்ட இணைய ஊடுருவலைத் தொடர்ந்து, சுகாதார பராமரிப்புத் துறையில் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளன. தகவல் கட்டமைப்பின் தொழில்நுட்ப விற்பனையாளர்களி டம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று, சந்தேகப்படும்படி யான தொழில்நுட்ப சம்பவங்கள் நேர்ந்தால் அதுபற்றி 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு சேவையாளர்களின் தகவல் தொழில்நுட்ப சேவைகளை இயக்கும் ‘இன்டிகிரெட்டடன் ஹெல்த் இன்ஃபர்மேஷன் சிஸ் டம்ஸ்’ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

‘மிரட்டல்களுக்கிடையே சிங்கப்பூரின் தற்காப்புக்கு தொழில்நுட்பம் முக்கியமானது’

தற்காப்பு, அறிவியல், தொழில் நுட்ப அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சிங்கப்பூரின் தற்காப்பு, பாதுகாப்பு, தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண உள்நாட்டு அமைப்புகளுடன் இணைய இருக் கின்றன. புது ஆய்வுக்கூடம் ஒன்று இவ்வாண்டின் இறுதிக்குள் இதற் கெனத் திறக்கப்படவுள்ளது. இது போன்ற ஆய்வுக்கூடம்வழி புத்தாக்கத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தலாம் என்று தற் காப்புத் தொழில்நுட்பச் சமூகம் நம்புகிறது. புதிய ஆய்வுக்கூடம் குறித்து நேற்று நடைபெற்ற தற்காப்பு தொழில்நுட்ப விருது நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அறிவித்தார்.

சிங்கப்பூர் வெள்ளி பலவீனமாகலாம்

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஆண்டு இறுதிக்குள் பலவீனம் அடையலாம் என்ற கணிப்பில் டிபிஎஸ் குழுமத்தின் ஆய்வாளர் கள் அதன் மதிப்பை குறைத்து உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலர் மதிப்பு 1.40 ஆகும் என்றும் அது அடுத் தாண்டுவரை அதே நிலையில் நீடிக்கும் என்றும் கணிப்பு நிலவி வருகிறது. சிங்கப்பூர் வெள்ளி சென்ற ஆண்டு இறுதியிலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகராக 3.5% பலவீனம் அடைந்துள்ளது.

வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நம்பிக்கை தரும் ‘கோ-ஜெக்’

இந்தோனீசிய தனியார் வாடகை வாகனச் சேவை நிறுவனமான ‘கோ-ஜெக்’, ஓட்டுநர்களைச் சேர்க்கத் தன் இணையத்தளம் வழி முன்பதிவு செய்து வருகிறது. அடுத்த மாதப் பிற்பகுதியில் சிங்கப்பூரில் கால்பதிக்க உள்ள இந்நிறுவனத்தில் இணைவதற் காகத் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் பெரும் எதிர்பார்ப்பு களுடன் பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, இணையத்தளம் இயங்கத் தொடங்கிய அதே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துவிட்டதாக நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். “நாங்கள் வருவதற்கு முன்னரே பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன,” என்றும் பேச்சாளர் நியூ பேப்பர் நாளிதழிடம் கூறினார்.

Pages