சமய நல்லிணக்கத் தொடர்புகளை வலுப்படுத்துதல்

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி இந்து அறக்கட்டளை வாரியத்தின் தேசிய பங்களிப்பை விளக்கும் சிறப்புக் கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை நான்காம் தேதி எங்கள் அச்சுப்பிரதியில் வெளிவந்த இந்தக் கட்டுரைகளைப் படிக்க தமிழ் முரசு செய்தி இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

வெவ்வெறு அரசாங்க அமைப்புகளின் பங்காளியான இந்து அறக்கட்டளை வாரியம் இதர சமய அமைப்புகளுடன் இணைந்து இன நல்லிணக்கத்தை வளர்த்து வருகிறது. அனைத்து சமய மன்றத்தின் நீண்ட கால உறுப்பினரான வாரியம், வெவ்வேறு சமயப் பின் னணியிலிருந்து வருபவர்களின் உறவை வலுவாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது.

இந்து சமூகத்தினரின் ஆன்மிக, நல்வாழ்வு தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் வாரியம் வெவ்வேறு இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க கடப்பாடு கொண்டுள்ளது.

மற்ற இனத்தவர்களின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் வகையில் வாரியம் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் மற்ற சமய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் மும்முரமாக ஈடுபடுகிறது. முதியோர் இல்லவாசிகளுக்காக ஸ்ரீ மாரியம்மன் கோயில் சீன புத்தாண்டு ஒன்றுகூடல் மதிய உணவு உபசரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழக்கம்

ரமலான் மாதத்தில் ‘இஃப்தார்’ எனும் நோன்பு திறப்பு நிகழ்வு, விசாக தின கொண்டாட்டங்கள், கிறிஸ்மஸ் ‘மாஸ்’ ஜெபம் ஆகியவற்றில் வாரிய உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இளையர்களிடையே நெருங்கிய பந்தத்தை வளர்க்க, வாரியம் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இவ்விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு சமய அமைப்புகள் ஏற்று நடத்துகின்றன. இதற்கு கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு ஆதரவளிக்கின்றது.

சமூக, பொதுநலத் திட்டங்களுக்கு பங்களிப்பு

சமூகக் கொண்டாட்டங்கள், கல்வி, மறுவாழ்வு சேவைகள், நிவாரணப் பணிகள் என பல்வேறு நற்செயல்களுக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் ஆதரவு நல்கி வருகிறது.

தேசிய அளவில், ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி ஒளியூட்டு விழாவை முன்னிட்டு அதிபர் சவாலுக்கு வாரியம் நன்கொடை வழங்கி வருகின்றது. திருமண வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும் எனும் நல்ல நோக்குடன் வாரியம் 2013ஆம் ஆண்டு முதல் இந்து நிலையத்துடன் இணைந்து திருமணத்திற்குத் தயாராகும் திட்டத்தை வழிநடத்தி வருகிறது.

கடந்த ஆண்டின் தீபாவளி ஒளியூட்டு விழாவின் போது ‘அதிபர் சவால்’ திட்டத்திற்கு வாரியமும் இதர இந்திய அமைப்புகளும் சேர்ந்து $100,000 நன்கொடை வழங்கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!