‘தரமே தாரக மந்திரம்‘- நன்மதிப்பை கட்டிக்காக்கும் கோமள விலாஸ்

தன்னிகரற்ற சிங்கையில் மிகவும் புகழ்பெற்ற இந்திய உணவுக்கடைகளுள் ஒன்று கோமள விலாஸ். உள்நாட்டவர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் விரும்பி வந்து உணவருந்தி மகிழும் உணவகமாகத் திகழ்ந்து வருகிறது. குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டு வரும் இந்த உணவகத்தை இப்போது நிர்வகித்து வருபவர் திரு ராஜு குணசேகரன்.

குடும்பப் பின்னணி

திரு ஓ.எம்.ராஜு (படம்) என பிறரால் அன்புடன் அழைக்கப்பட்ட இவரின் தந்தையார் திரு ஒக்கநாடு முருகையா ராஜு, கோமள விலாஸ் உணவகத்தைத் தோற்று
வித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திரு ஓ.எம்.ராஜு. எட்டுக் குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாக இவர் பிறந்தார். பெரிய குடும்பமாதலால் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்க முடியவில்லை. அந்த நாள்களில், அத்தகையதொரு சூழலில், கிராமத்தைவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று ஒரு வேலையைத் தேடிக்கொள்வதே வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வழியாக இருந்தது. அந்த எண்ணம் இவர்களின் குடும்பத்தையும் தொற்றியது. திரு ராஜுவின் தந்தை, அவரை வெளிநாட்டிற்குச் சென்று வேலை தேட ஊக்குவித்தார். அத்துடன், வெளிநாடு சென்று வேலை செய்வதில் திரு ராஜுவுக்கும் ஆர்வம் இருந்ததால் திரைகடலோடி திரவியம் தேட ஆயத்தமானார்.

கோமள விலாஸ் தொடக்கம்

1937ஆம் ஆண்டில், தமது 13வது வயதில் கப்பல் மூலம் சிங்கப்பூரை வந்தடைந்தார் திரு ராஜு. இங்கு உள்ள உணவகமொன்றில் அவ ருக்கு வேலை கிடைத்தது. உணவு சமைத்து பரிமாறுவதோடு பாத்திரமும் கழுவ வேண்டும்.உணவக உரிமையாளருடன் இணக்கமான உறவைக் கொண்டிருந்த அவர், பத்து ஆண்டுகாலம்
அங்கேயே வேலை செய்தார். வாழ்க்கையில் முன்னேற எக்கணமும் தேவை சிக்கனம் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர், சிறுகச் சிறுக 5,000 வெள்ளியைச் சேமித்தார்.
உணவகத் தொழிலைத் தொடர குடும்பத்தில் யாரும் இல்லாததால் உரிமையாளர்கள் அந்த உணவகத்தை விற்க முன்வந்தனர். தம் கையில் இருந்த ஐயாயிரம் வெள்ளியைக் கொடுத்து, அந்த உணவகத்தைத் தாமே வாங்கிக்கொண்டார் திரு ராஜு.சின்னக்கண்ணு, மெய்ய நாதன், நாராயணன் என்ற தமது மூன்று உடன்பிறப்புகளுடன் சேர்ந்து திரு ராஜு, 1947ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி கோமள விலாஸ் உணவகத்தைத் தொடங்கினார்.

ஒரு சிறிய பகுதியில் செயல்

பட்டு வந்த இந்த உணவகம் இன்று மிகப் பெரிய அளவில், பெரிய பரப்பளவில், குளிரூட்டி வசதிகளோடு விரிவுபடுத்தப் பட்டு அனைவரும் பிரமிக்கும் வண்ணம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. சுவையான பல வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகளுக்குப் பிரசித்தி பெற்ற உணவகமாக இது திகழ்கிறது.
தமது முப்பதாம் வயதில் மணமுடித்த திரு ராஜுவிற்கு மொத்தம் ஏழு குழந்தைகள். அவர்களுள் மூன்றாமவர்தான் திரு ராஜு குணசேகரன்.

குடும்பத் தொழிலானது

பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த திரு ராஜு குணசேகரன் தஞ்சாவூரிலும் திருச்சியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்று, பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1978ல் தமது 26வது வயதில் சிங்கப்பூர் வந்தார்.அதுவரை படிப்பு, விளையாட்டு என்றிருந்தவர் திடீரெனத் தொழி
லில் இறங்கியதால் தொடக்கத்தில் சற்று சிரமமாகவே இருந்தது. ஆயினும், மனந்தளராது சளைக்காமல் உழைத்து, தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றினார்.
ஈராண்டுகளுக்குப்பின் தமது திருமணத்திற்காக இந்தியா சென்ற இவர், அதன்பின் தம்மு|டைய மனைவி திருமதி கோமதியையும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். சிராங்கூன் சாலையில் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்து வந்தார்.

சகோதரர்களுக்கும் திருமணமாக, குடும்பம் பெரிதாகியது. இதையடுத்து, திரு ராஜு குணசேகரன், தம் மனைவி, பிள்ளைகளுடன் தனிக்குடித்தனம் சென்றார். இல்லத்தை நிர்வகித்ததோடு, உணவகத்திற்கு வந்து கணவருக்கும் உதவியாக இருந்தார் திருமதி கோமதி. இதைத் தொடர்ந்து 1995ல் 2வது கோமள விலாஸ் உணவகம் பஃப்ளோ சாலையில் திறக்கப்
பட்டது.தந்தையைப் போலவே ஒழுக்கமானவராகத் திகழும் திரு ராஜு குணசேகரன், தமது 40வது வயதில் தொழிலை எடுத்துக்கொண்டார். ஊழியர்கள் நலனிலும் மகிழ்ச்சியிலும் அக்கறை காட்டினால் வியாபாரம் செழித்தோங்கும் என்ற தம் தந்தையின் வழியையே இவரும் பின்பற்றினார். தொழிலில் அர்ப்பணிப்புடன் நடந்துகொண்டு ஊழியர்களின் நன்
மதிப்பையும் பெற்றார்.

எப்போதும் உணவு தரமாக, கட்டுப்படியான விலையில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பண்டிகை காலங்களுக்காக பிரபல இந்திய இனிப்புகள், தின்பண்டங்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் இவர் அறிமுகம் செய்தார். வாடிக்கையாளர்களுக்குத் தரமான, சுவையான உணவை வழங்கி, நன்மதிப்பைக் கட்டிக்
காக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் கோமள விலாஸ் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், நாகேஷ் போன்ற திரைப் பிரபலங்கள் கோமள விலாஸ் உணவை ருசித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வருகைபுரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் லீ சியன் லூங்குடன் இங்கு வந்து விருந்துண்டு சென்றது நினைவுகூரத்தக்கது.

சமூகப் பணிகளுக்கு ஆதரவு

தொழிலை இலாபகரமாக நடத்த வேண்டும் என்பதோடு சமூக சேவையிலும் திரு ராஜு குணசேகரன் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சமூகத்திற்கு நிறைய பங்களிப்புகளை வழங்கியுள்ள இவர், பள்ளிகள், திருமண மண்டபம், நன்கொடை எனப் பல வழிகளிலும் சமூகத்திற்குத் திருப்பித் தந்துள்ளார்.திரு ராஜு குணசேகரனின் தந்தையார் திரு ஓ.எம்.ராஜு 2005ஆம் ஆண்டில் தமது 83வது வயதில் காலமானார். தந்தையுடன் நெருங்கிப் பழகியதால் அவரிடம் இருந்த நற்பண்புகள் அனைத்தும் திரு ராஜு குணசேகரனிடமும் ஒட்டிக்கொண்டன. வெற்றுக் கொண்டாட்டங்களுக்குப் பதில் பிறருக்குப் பயன் தரும் நற்செயல்களையே இவர் விரும்புகிறார். கோமள விலாசின் 70வது ஆண்டு கொண்டாட்டத்திற்குப் பதிலாக SIET கல்வி நிலையத்திற்கு $70,000 நன்கொடை வழங்கினார். கல்வியால் தலைமுறையே மாறும் என்பது இவரது திடமான நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!