தீபாவளி குதூகலம் தொடங்கிவிட்டது

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் ஒருவருக்கொருவர் ‘வாட்ஸ்அப்’ மூலமும் ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டாலும் இன்னும் வாழ்த்து அட்டைகளுக்கான வரவேற்பு குறையவில்லை.

கடந்த 23 ஆண்டுகளாக தீபாவளி சந்தையில் வாழ்த்து அட்டைகளை விற்றுவரும் அப்துல் ஹாதி, தீபாவளி வாழ்த்து அட்டைகள் விற்பனை குறையவில்லை என்றார்.

ஒரு காலத்தில் பல கடைகளில் காணக் கிடைத்த இந்த வாழ்த்து அட்டைகள் தற்போது ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன. வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்தைப் பரிமாறிக்கொண்டால்தான் திருப்தியாக உள்ளது என்றார் அட்டைகளை வாங்க வந்த 58 வயது திருவாட்டி மகேஸ்வரி.

அதைப் போல வீட்டு அலங்காரப் பொருட்களும் ஆண்டுக்காண்டு புதிதாக வந்தாலும் இன்னும் பாரம்பரிய விளக்குகளை விரும்புவோர் பலர் என்றார் ‘ஜெயராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகி, திரு ஜெயராம்.

ஹேஸ்டிங்ஸ் சாலையில் இந்த ஆண்டு தீபாவளிச் சந்தை இல்லாததால் கேம்பல் லேன் சந்தை இந்திய மரபுடைமை நிலையத்திற்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது. புது வகையான சுவர் கடிகாரங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், விளக்குகள், தோரணங்கள் என கேம்பல் லேன் சந்தையில் பல புதிய பொருட்கள் விற்கப்படுகின்றன.

“இங்கு வந்தாலே மக்களுக்கு கொண்டாட்ட உணர்வு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தீபாவளிக்கு வேண்டிய அனைத்தையும் விற்க கடைக்காரர்கள் முயற்சி எடுத்துள்ளனர்,” என்றார் சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ள லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவரான ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை உரிமையாளர் திரு ராஜ்குமார் சந்திரா.

கிண்டா சாலை சந்தையில் அணிகலன்கள், காலணிகள், மருதாணி போடும் கூடங்கள், ஆடைகளுடன் நாவிற்குச் சுவையூட்டும் உணவு வகைகளும் உள்ளன.

பெண்களுக்கு ‘ஸ்லிட்’ பாவாடை சட்டை, ஆண்களுக்கு ‘சீமராஜா 2’ ஜிப்பா, சிறாருக்கு ‘ஸ்வரொவ்ஸ்கி’ கல் உடைகள்

தீபாவளிக்குத் தீபாவளி புதிய பாணியில் உடைகளை அறிமுகப் படுத்துவது விற்பனையாளர்களின் வழக்கம். அதிலும் தனித்துவமிக்க உடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கடைக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு வெவ்வேறு டிசைன்களை அறிமுகப்படுத்துவர்.
இந்த ஆண்டு பெண்களுக்கு ‘ஸ்லிட்’ பாவாடை சட்டை வந்துள்ளது. பட்டுடன் டிஷு சேர்ந்த சேலைகளும் வந்துள்ளன.
பெண்களுக்கான உடைகள், சேலைகளில் அந்தக் காலத்தின் கட்டங்கள் இப்போது மீண்டும் பிரபலமாகியுள்ளது. பொடி கட்டங்களிலிருந்து பெரிய கட்டங்கள் வரை அவரவர் உருவத்திற்கு ஏற்ப பல வண்ணங்களில் கிடைக்கின்றன.
ஆண்களுக்கான உடைகளில் சென்ற ஆண்டு அறிமுகமான ‘சீமராஜா’ ஜிப்பாவின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இவ்வாண்டு புதிதாக விற்கப்படுகிறது.

சிறார்களுக்கு ‘ஸ்வரொவ்ஸ்கி’ கல் பதித்த உடைகள் கடைகளில் பளிச்சிடுகின்றன.

தீபாவளிச் சந்தை கடைகளுடன் தேக்கா நிலையத்தின் மேல்தளக் கடைகளிலும் ஏனைய கடைகளிலும் தீபாவளிக்கென சிறப்பு புத்தாடைகள் வந்து குவிந்துள்ளன. இந்தியப் பாரம்பரிய உடைகளுக்குப் பொருத்தமான காலணிகளை அணிய பலரும் விரும்புவதால் ஆண்கள், பெண்களுக்கான அலங்காரக் காலணிக் கடைகளும் நிறைந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!