ஊழியர்களுக்கு கைகொடுத்த தமிழ்ப் பட்டக்கல்வி

இல்­லத்­த­ர­சி­யாக இருந்து தம் குடும்­பத்­தைக் கிட்­டத்­தட்ட பதி­னைந்து ஆண்­டு­க­ளா­கப் பரா ­ம­ரித்து வந்த பத்­மினி புரு­ஷோத்­த­மன், 42, சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்கழ­கத்­தில் (எஸ்­யு­எஸ்­எஸ்) இளங்­க­லைத் தமிழ்­மொழி, இலக்­கி­யப் பட்­டப்­ப­டிப்பை முடித்­துக்­கொண்டு ஊழி­ய­ரணி யில் மீண்­டும் சேர்ந்­தி­ருக்­கி­றார்.

பட்­டக்­கல்­வி­யில் 2019ஆம் ஆண்­டுக்­கான வெள்ளி விருதை வென்று உள்ள இந்த வருங்­கால ஆசி­ரி­யர், எதைச் செய்­தா­லும் சிறப்­பா­கச் செய்­ய­வேண்­டும் என்­ப­தில் உறுதி கொண்­டி­ருப்பதாகக் கூறி­னார்.

சேலம் மாவட்­டத்­தில் பிறந்த அவர், சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 1998ல் கணி­னித்­து­றை­யில் இளநிலை அறி­வி­யல் பட்­டம் பெற்று அதன்பின்­னர் 2001ல் பெரி­யார் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முது­நி­லைப்­பட்­டம் பெற்றார். இருந்­த­போதும் பட்­டம் பெற்ற ஆறு மாதங்­களில் திரு­ம­ண­மாகி இல்­லத்­த­ரசியாக ஆன­தால் இத்­து­றை­யில் வேலை அனு­ப­வம் பெற முடியாமல் போன­தா­கத் திரு­மதி பத்­மினி தெரி­வித்­தார்.

மகன் உயர்­நி­லைப் பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது நேரம் கிடைத்­த­தால் மீண்­டும் வேலைக்கு போவது பற்­றிய எண்­ணம் வந்­த­தா­கத் தெரி­வித்த திரு­மதி பத்­மினி, தமிழ்முரசு இத­ழில் எஸ்­யு­எஸ்­எஸ் பல்­க­லை­யின் தமிழ்ப்­பட்­டம் பற்றி வெளி­வந்த விளம்­ப­ரம் மூல­மா­க­வும் அங்­கு படித்த தமிழ் ஆசி­ரி­யர்­கள் சிலர் வாயி­லா­க­வும் கேள்­விப்­பட்­டார்.

அது­வ­ரை­யில் தமது ஓய்வு நேரங்­களில் மக­னுக்­குத் தமிழ் கற்­றுத்­தந்த திரு­மதி பத்­மினிக்கு தமி­ழா­சி­ரி­யர் ஆகும் எண்­ணம் அப்­போது தோன்­றி­ய­தா­கக் கூறி­னார்.

கணி­னித் துறையில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போதே அடிப்­படை அள­வி­லான சில தமிழ்ப்­பா­டங்­க­ளைக் கற்­றி­ருந்த அவர், தமக்கு ஆர்­வம் இருந்­த­தால் எஸ்­யு­எஸ்­எஸ்­சின் தமிழ்ப் பட்­டப்­ப­டிப்­பில் சேர முடிவு செய்­த­தா­கத் தெரி­வித்­தார்.

“நான் மீண்­டும் கணி­னித் துறை­யை எடுத்­துப் படிப்­பதா அல்­லது தமிழ்த்­து­றை­யில் சேர்­வதா என்­பது பற்­றி சற்று யோசித்­தேன். கணி­னித்­து­றை­யைப் பொறுத்­த­வரை நான் அப்­போது படித்­தது வேறு, இப்­போது இருப்பது வேறு. ஆயி­னும், என் ஆர்­வம் தமி­ழில் இருந்ததால் அத­னைத் தேர்ந்தெ­டுப்­பது சிறப்­பாக இருக்­கும் என எண்­ணி­னேன்,” என்று அவர்­ கூ­றி­னார்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் படிப்­பைத் தொடங்கி மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் முடித்த திரு­மதி பத்­மினி தற்­போது தேசிய கல்விக் கழ­கத்­தில் பயிற்சி பெறு­கி­றார்.

தனது குடும்­பத்­தி­ன­ரைக் கண்­ணும் கருத்­து­மா­கப் பரா­ம­ரிப்­ப­தில் மட்­டுமே பல ஆண்­டு­களைக் கழித்த அவ­ருக்­குப் படிப்­பின் கார­ண­மாக குடும்­பத்­திற்­கா­க செலவு செய்­யும் நேரம் குறைந்து­போ­னது சற்று சவா­லாக இருந்­த­தா­கக் கூறி­னார்.

“ஆயி­னும் என் கண­வர் எனக்கு மிக­வும் ஆத­ர­வாக இருந்­தார். வீட்­டுப் பொறுப்­பு­க­ளைக் கூடு­த­லாக எடுத்­துக்­கொண்டு என் மக­னைப் பார்த்­துக்­கொள்­ள­வும் அவர் உத­வி­னார்,” என்றார்.

வீட்­டில் படித்­துக்­கொண்­டி­ருந்­தா­ல் வேலை­கள் எல்­லாப் பக்­கத்­தி­லி­ருந்தும் வரும் என்­ற­போ­தும் தமது கண­வ­ரும் மக­னும் புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொண்­ட­தா­கத் திரு­மதி பத்­மினி கூறி­னார்.

பல்­க­லைக்­க­ழ­க வகுப்­பு­க­ளுக்­குப் போகமுடி­யாத சூழ­லில் பல்­க­லை­யின் இணை­யக் கற்­றல் வழி­யாக வகுப்­பின் காணொ­ளிக­ளைப் பார்த்து பாடங்­ க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

வகுப்­ப­றைச் சூழ­லில் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னும் மாண­வர்­க­ளு­ட­னும் உரை­யா­டு­வ­தன் மூலம் கற்­றல் மேலும் சிறப்­பாக இருப்­ப­தால் கூடு­மா­ன­வரை வகுப்­பு­க­ளுக்­குச் செல்ல விரும்புவதா­கத் திரு­மதி பத்­மினி தெரி­வித்­தார்.

எஸ்­யு­எஸ்­எஸ் பல்­க­லை­யின் வகுப்­பில் சக மாண­வர்­கள் முன்­னி­லை­யி­லும் ஆசி­ரி­யர் முன்­னி­லை­யி­லும் வாய்­மொ­ழிப் படைப்­பு­க­ளைச் செய்­தது தமது இளம்­பருவ கல்­லூரி வாழ்க்­கை­யில் இல்­லாத புதிய அம்­சமாக இருந்த தாகக் கூறிய அவர், இத­னால் தமது தொடர்­புத்­தி­றன் வளர்ந்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

“இளம் மாண­வர்­கள், நடுத்­தர வய­தி­னர், சிங்­கப்­பூ­ரில் பிறந்து வளர்ந்­த­வர்­கள், தமி­ழ­கத்­தைச் சேர்ந்­தோர் என பலதரப்பட்ட மாண­வர்­க­ளு­டனும் உற­வா­டு­வ­தன் மூலம் வகுப்­புச் சூழல் சுவா­ரசி­ய­மா­க­வும் ஆர்­வ­மூட்­டு­வ­தா­க­வும் இருந்­தது. பலரின் நட்­பையும் நான் இங்கு பெற்றுள்ளேன்,” என்­றார் அவர்.

ஆசி­ரி­யர் மதிப்­பீட்­டுக் கட்­டுரை, தேர்வு ஆகி­ய­வற்­றுக்­கா­க­வும் தம்­மைத் தயார் செய்ய வேண்­டி­யிருந்­த­தா­கக் கூறிய அவர், கற்­பிக்­கப்­படும் பாடங்­க­ளைத் தொடர்ச்­சி­யா­கப் படித்­து­வந்­தால் அவற்றை எளி­தா­கச் சமா­ளிக்­க­லாம் என்­றார்.

தமி­ழையே முழு ­பட்­டப்­ப­டிப்­பா­கப் பயி­லத் தொடங்­கி­ய­போ­து­தான் தமி­ழுக்­குள் இருக்­கும் ஆழத்­தைத் தெரிந்து அத­னைச் சுவைத்­த­தாக அவர் தெரி­வித்­தார். கலைப்­பா­டங்­கள் எளி­மை­யா­னவை என்று தமக்­குத் தெரிந்­த­வர்­கள் கூறி­ய­தைச் சுட்­டிய அவர், தாம் முன்பு பயின்ற கணினி அறி­வி­ய­லுக்­குத் தமிழ்ப் பட்­டப்­ப­டிப்பு எந்தவிதத்­தி­லும் சளைத்­தது அல்ல எனக் கூறி­னார்.

“தமிழ்­மொழி பேசு­வ­தற்கு எளிமை என்­றா­லும் அதன் இலக்­கண விதி­க­ளைப் பற்றி ஆழ­மா­கப் படிப்­பது கடி­னம். எஸ்­யு­எஸ்­எஸ்­சின் தமிழ் ஆசி­ரி­யர்­கள் திற­மை­யா­க­வும் தெளி­வா­க­வும் இவற்றை விளக்­கி­ய­போது எனக்கு சுல­ப­மா­னது,” என்­றார்.

மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்க இயல்­பான தமிழ்த்­தி­றனே போதும் என சிலர் நினைப்­பது தவறு என திரு­மதி பத்­மினி தெரி­வித்­தார்.

“இன்­றைய சூழ­லில் தமிழ் அதி­கம் பேசாத மாண­வர்­கள் பெரும்­பா­லா­னோர் வகுப்­ப­றை­யில் உள்­ள­னர். ஒவ்­வொரு நிலை­யி­லும் இருக்­கும் மாண­வர்­க­ளை­யும் தமிழ்­மொ­ழியை வாழ்­நாள் முழு­வ­தும் பயன்­படுத்த ஆசி­ரி­யர்­க­ளின் பங்கு முக்­கி­யம். தமிழை ஆழ­மா­கத் தெரிந்­து ­வைத்­தி­ருந்­தால்­தான் வகுப்­பு­க­ளைத் தொடர்ந்து சுவா­ர­சி­ய­மாக வைத்­தி­ருந்து மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்க முடி­யும். தமிழ் இலக்­கி­யம், இலக்­க­ணத்­தின் அரிய அம்­சங்­களும் இவர்­க­ளைப்­போய் சேரும், அத­னால் முழு­மை­யான ஆசி­ரி­யர் ஆவ­தற்­கு தமிழ்ப் பட்­டக்­கல்வி நிச்­ச­யம் தேவை என நினைக்­கி­றேன்,” என்றார் அவர்.

எஸ்­யு­எஸ்­எஸ் தமிழ் இளங்­கலைப் பட்­டக்­கல்­வி­யில் மொழி­பெயர்ப்பு வகுப்பு மற்­றோர் சிறப்­பம்­சம் என்­று குறிப்பிட்ட திரு­மதி பத்­மினி, “இரு­மொ­ழித் திறன் சிங்­கப்­பூ­ரில் மிகவும் முக்­கி­யம். இந்த இரு­மொ­ழித் திறனைத் தொடர்ந்து சம அள­வில் வளர்த்துக்கொள்ள வேண்­டும்,” என்­றார்.

எஸ்­யு­எஸ்­எஸ்­சின் தமிழ்ப் பட்­டப்­ப­டிப்­பைக் கடந்த ஆண்டு முடித்த திரு­மதி பத்­மினி, தமக்கு விருது கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை என்று கூறி­னார்.

நேர நிர்­வா­கம், ஆசி­ரி­யர்­க­ளின் ஒத்­து­ழைப்பு, குடும்­பத்­தி­ன­ரின் ஒத்­து­ழைப்பு ஆகி­ய­வையே இந்த வெற்­றிக்கு முக்­கி­ய­மான கார­ணங்­கள் என அவர் குறிப்­பிட்­டார்.

“வகுப்­பில் மூன்று மணி நேரம் இருக்­கும்­போது ஆசி­ரி­யர்­கள் கூறு­ வ­தைக் கவ­ன­மாக உள்­வாங்­கினால் பாடங்­க­ளைப் படிப்­ப­தற்கு அதி­க நேரம் எடுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­தில்லை,” என்­றார்.

மறு­ப­டி­யும் கல்­லூரி வாழ்க்­கை­யைச் சிங்­கப்­பூ­ரில் தொடங்­கிய முயற்சி வெற்­றி­ய­டைந்­த­தில் மகிழ்ச்சி அடை­யும் திரு­மதி பத்­மினி, தமிழ்ச்­சார்ந்த துறை­யில் வேலை செய்ய ஆர்­வம் உள்­ளோ­ருக்கு எஸ்­யு­எஸ்­எஸ்­சின் இந்­தப் படிப்பு நிச்­ச­யம் உத­வும் என்­ப­தால் இந்த இளங்­க­லைப் படிப்­பில் அவர் ­கள் தைரி­ய­மா­கச் சேர­லாம் எனக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!