ஆலயங்களுக்குள் நுழைய கட்டுப்பாடுகள்

அதி­க­ரித்­து­வ­ரும் கொவிட்-19 கிருமித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளால் சுகா­தார, ஒன்­று­கூ­டல் மற்­றும் பாது­காப்பு இடை­வெளி தொடர்­பி­லான ஆலோ­சனை கடந்த வியா­ழக்­கிழமை வெளி­யி­டப்­பட்­டது.

சமய நிகழ்­வு­கள், கூட்­டங்­கள் ரத்து செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றா­லும் அவ­சி­ய­மான சடங்­கு­கள் தனிப்­பட்ட நிகழ்­வு­க­ளுக்­காக வழி­பாட்­டுத் தலங்­கள் திறந்­தி­ருக்­க­லாம் என அந்த ஆலோ­சனை குறிப்­பிட்­டது.

இந்த அறி­வு­றுத்­த­லுக்கு இணங்­கும் வகை­யில், தனது ஆல­யங்­களில் புதிய விதி­மு­றை­க­ளைச் செயல்­ப­டுத்­தி­ய­து­டன் இது தொடர்­பான ஆலோ­சனை ஒன்­றை­யும் சிங்­கப்­பூ­ரி­லுள்ள மற்ற ஆல­யங்­க­ளுக்­கும் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அனுப்­பி­யுள்­ளது.

அந்த ஆலோ­ச­னை­யின்­படி ஆலயங்கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கைகளைச் செயல்­படுத்தி வரு­கின்­றன.

வாரி­யத்­தின்­கீழ் இயங்­கும் நான்கு ஆல­யங்­களில் அன்றாட பூஜை­கள் மட்­டும் தொட­ரும் என்­றும் பக்­தர்­கள் வீட்­டி­லேயே இருந்து வழி­பாடு செய்­யு­மா­றும் கேட்­டுக்­கொள்­வ­தா­க­வும் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் வாரி­யம் குறிப்­பிட்­டது.

ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைரா­வி­மட காளி­யம்­மன் கோயில் ஆகிய கோயில்­க­ளுக்­குள் இனி பக்­தர்­கள் நுழைய முடி­யாது.

அர்ச்­ச­னை­களும் பிர­சாத விநி­யோ­க­மும் நிறுத்­தப்­படும். இருந்­த­போ­தும், பக்­தர்­கள் ஆல­யத்­திற்கு வெளி­யி­லி­ருந்து தரி­ச­னம் செய்­ய­லாம் என்­றும் குறிப்­பிட்ட வாரி­யம், பக்­தர்­க­ளுக்கு இடையே பாது­காப்­பான இடை­வெ­ளி­யைக் கட்­டிக்­காக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

சுகா­தார அமைச்­சின் வழி­மு­றை­கள், மக்­கள் பெரு­வா­ரி­யாக கூடும் எல்லா இடங்­க­ளுக்­கும் பொருந்­தும் என்­றும் ஆல­யங்­கள் இதற்கு விதி­வி­லக்கு அல்ல என்­றும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி த.ராஜ­சே­கர் தமிழ் முர­சி­டம் நேற்று தெரி­வித்­தார்.

“பெரும்­பா­லா­னோர் அர­சாங்க வழி­மு­றை­க­ளைப் புரிந்­து­கொண்டு ஒத்­து­ழைக்­கின்­ற­னர். ஆயி­னும், ஒரு­சி­லர் ஆலய ஊழி­யர்­க­ளி­டம் தங்­கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­னர்,” என்­றார் அவர்.

குறைந்­தது ஒரு மீட்­டர் பாது­காப்­பான இடை­வெ­ளியை அனை­வ­ரும் பின்­பற்­றி­னால்­தான் அது பயன் தரும் எனக் கூறிய திரு ராஜ­சே­கர், நடை­மு­றை­யில் இதனை எல்­லா­ரும் மதித்து நடப்­ப­தில்லை என்­ப­தைச் சுட்­டி­னார். ஒரே நேரத்­தில் பத்து பக்­தர்­களை ஆல­யத்­திற்­குள் அனு­ம­திக்­கும் முறை­யைச் செயல்­ப­டுத்த சில ஆல­யங்­கள் முயன்­ற­போ­தும் அதில் பல்­வேறு சிக்­கல்­கள் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

“பக்­தர்­கள் தாம­த­மாக வெளி­யே­று­வது, ஆல­யத்­திற்கு வெளி­யில் பக்­தர்­கள் கூட்­ட­மாக காத்­தி­ருப்­பது, ஆல­யத்­திற்­குள் பாது­காப்­பான இடை­வெ­ளி­யைச் செயல்­ப­டுத்த முடி­யா­மல் போனது எனப் பல்­வேறு தேவை­யற்ற சிர­மங்­கள் ஏற்­பட்­டன,” என்­றார் திரு ராஜ­சே­கர்.

சில ஆல­யங்­க­ளின் நுழை­வா­யி­லி­ல் இருந்து பக்­தர்­கள் சந்­நி­தான மூல­வ­ரைத் தரி­சித்து வழி­ப­ட­லாம். வேறு சில ஆல­யங்­களில் உற்­சவ மூர்த்­தி­கள் நுழை­வா­யி­லுக்கு அருகே கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு ஒவ்­வோர் ஆல­ய­மும் தனக்கு ஏற்ற அணு­கு­மு­றை­யைக் கையா­ளும் என திரு ராஜ­சே­கர் கூறி­னார்.

ஏற்­கெ­னவே முன்­ப­திவு செய்­யப்­பட்­டுள்ள உப­யங்­க­ளுக்­கா­க­வும் சம­யச் சடங்­கு­க­ளுக்­கா­வும் பக்­தர்­கள் பத்து பேருக்­கும் குறை­வான எண்­ணிக்­கை­யில் செல்­ல­லாம். இத்­த­கைய நிகழ்­வு­க­ளுக்கு வரு­ப­வர்­கள் குடும்­ப­மாக வரு­வ­தால் இந்­தக் கட்­டுப்­பாட்டை முன் நிபந்­த­னை­யாக விதிப்­பது எளிது என்­றார் திரு ராஜ­சே­கர். அத்­து­டன், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக புதிய முன்­ப­தி­வு­களை ஏற்க சில ஆல­யங்­கள் மறுத்­து­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

திரு­ம­ணங்­க­ளுக்­கும் ஆத்ம சாந்தி பிரார்த்­த­னை­க­ளுக்­கும் இந்த வழி­மு­றை­கள் பொருந்­தும். ஸ்ரீ சிவன் ஆல­யத்­தின் ஆத்ம சாந்தி வழி­பாட்­டுக்கு வரிசை முறை இருக்­கும் என திரு ராஜ­சே­கர் குறிப்­பிட்­டார். அதா­வது, வழி­பாட்­டிற்கு ஒரே நேரத்­தில் பத்து பக்­தர்­கள் ஆல­யத்­திற்­குள் நுழை­ய­லாம் என்­றார் அவர்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஆலோ­சனை அறி­விப்­பு­கள், கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­திற்­கும் சுகா­தார அமைச்­சின் ஆலோ­ச­னைக்­கும் ஏற்ப மாறும் என்­றும் திரு ராஜ­சே­கர் சுட்­டி­னார். பக்­தர்­களைப் புண்­ப­டுத்­து­வது வாரி­யத்­தின் நோக்­க­மல்ல எனத் தெரி­வித்த அவர், தற்­போ­தைய நில­வ­ரம் முற்­றி­லும் புதி­தா­னது என்­பதை அவர்­கள் நினை­வில் கொண்டு புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

“குறிப்­பாக, முதி­யோர் வரு­வதை முற்­றி­லும் தவிர்க்­கு­மாறு நாங்­கள் கேட்­டுக்­கொள்­கி­றோம்.” என்று அவர் கூறி­னார்.

முன்­ கு­றிப்­பி­டப்­பட்ட நான்கு ஆல­யங்­க­ளின் அன்­றாட பூஜை­களை பக்­தர்­கள் www.heb.org.sg என்ற இணை­யத்­த­ளம் வழி­யாக காண­லாம் என்று வாரி­யம் கூறி­ உள்­ளது.

இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் அவ­சி­யம் என்­றா­லும் அதை ஏற்க பக்­தர்­க­ளுக்கு சிர­ம­மாக இருக்­கும் என்று வங்­கித்­ துறை ஊழி­யர் தீபா சுரேந்­தி­ரன், 31, தெரி­வித்­தார்.

“நமது பண்­பாட்­டில் சமூக ஒன்­று­கூ­டல் முக்­கிய அங்­கம் வகிப்­ப­தால் கிரு­மிப் பர­வல் விரை­வில் நீங்கி வழக்­கம்­போல மக்­கள் பெரு­வா­ரி­யாக தரி­சிக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன்,” என்­றார் அவர்.

- janark@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!