‘எங்கள் ஊரில்கூட கிடைக்காத சிகிச்சை இங்கு கிடைத்தது’

கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்த நூற்றுக்கணக்கானவர்களில் கட்டுமானத் துறை ஊழியரான 30 வயது திரு கருணாநிதி ராஜா, 48 வயது திரு பச்சைமுத்து அண்ணாமலை ஆகியோரும் அடங்குவர்.

25 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 21ஆம் தேதி கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தார் திரு கருணாநிதி ராஜா.

வெஸ்ட்லைட் தோ குவான் தங்கும் விடுதியைச் சேர்ந்த திரு ராஜாவுக்கு தங்கும் இடத்தில் தொற்று ஏற்பட்டது. தொண்டை அரிப்பு, காய்ச்சல், உடம்பு வலி ஆகிய அறிகுறிகளின் காரணத்தால் மருத்துவரைக் காணச் சென்ற அவருக்கு மார்ச் 25ஆம் தேதி கிருமித்தொற்று உறுதியானது.

டான் டோக் செங் மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு சிகிச்சை பெற்று, கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக பாசிர் ரிஸ் பகுதியில் இருக்கும் ‘டி’ ரிசார்ட் என்டியுசி’ என்ற தங்கும் வசதியில் தனிமைப்படுத்தப்பட்டார்.

“மருத்துவமனையில் மிகுந்த அக்கறையோடு கவனித்தார்கள்.

“டிரிசார்ட் சொகுசு ஹோட்டல் போல இருந்தது. குளிர்சாதன வசதி, இணையத் தொடர்பு, தொலைக்காட்சி போன்ற எல்லா வசதிகளும் உண்டு. மூன்று வேளையும் நல்ல உணவுடன் தினமும் பழங்கள், மைலோ, எலுமிச்சை தேநீர் போன்ற குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

“தினமும் காலையில் 9.30 மணி போல எழுந்து உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனப் பயிற்சிகளை அறையில் செய்வேன். தொலைக்காட்சி பார்ப்பேன். என் அறையில் இருந்த மற்றோர் ஊழியருடன் பேசிக்கொண்டிருப்பேன்,” என்று அங்கிருந்த நாட்களை விவரித்த திரு ராஜா, “என்னை நன்கு கவனித்துக் கொண்டார்கள்,” எனக்கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் திரு பச்சைமுத்து அண்ணாமலை, கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

சுங்காய் தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதி குழுமத்துடன் தொடர்பு டைய திரு அண்ணாமலையின் கிருமித்தொற்று. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக அங்கு தங்கி வருகிறார் அவர்.

“எனக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது பற்றி என் குடும்பத்தாரிடம் சொல்லவில்லை. நம்ம மனசு தைரியம் மாதிரி அவர்களுக்கு இருக்காது.

“குடும்ப உறுப்பினரைக் கவனிப்பதுபோல மருத்துவர்களும் தாதியரும் என்னைப் பார்த்துகொண்டார்கள். ஊரில்கூட இந்த மாதிரியான கவனிப்பு கிடைக்காது. இங்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பார்த்துகொள்ளும் விதத்தைப் பாராட்டுகிறேன்,” என்றார் திரு அண்ணாமலை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!