ஒருமித்த உதவிகள் இருந்தாலும் பாதிப்புகள் இருக்கவே செய்யும்

கொவிட்-19 கார­ண­மாக பொரு­ளி­யல் பாதிப்பு தொடர்­வ­தால் அர­சாங்­கம் ஏற்­கெ­னவே நடப்­புக்கு கொண்டு வந்­துள்ள நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களில் இடம்­பெற்ற ஆத­ர­வுத் திட்­டங்­களுக்கு மேலும் உத­வி­கள் கிடைக்­கும் என்­பதை அமைச்­சர்­கள் கோடி­காட்டி இருந்­தார்­கள். அது­போ­லவே கூடு­தலாக உத­வித் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­சரு­மான திரு ஹெங் சுவீ கியட் இம்­மா­தம் 17ஆம் தேதி அறி­வித்த $8 பில்லி­யன் உத­வித் திட்­டம் மூன்று அம்­சங்­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது.

நிறு­வ­னங்­கள் தொடர்ந்து செயல்­படும் வகை­யில் சம்­பள மானி­யத்தை நீட்­டிப்­பது, ஊழி­யர்­களை, குறிப்­பாக முதி­ய­வர்­க­ளை நிறு­வ­னங்­கள் சேர்க்க மேலும் ஊக்­கு­விப்­பு­களை வழங்­கு­வது, வேலை­யில்­லா­த­வர்­க­ளுக்­கும் குறைந்த வரு­மா­னம் உள்ள ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வு­வது ஆகி­யவை அந்த மூன்று அம்­சங்­கள்.

அர­சாங்க ஆத­ர­வுத் திட்­டத்­தின் மைய­மா­கத் திகழ்­கின்ற ‘வேலை ஆதரவுத் திட்­டம்’ அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், அந்­தத் திட்­டம், ஒரு­மித்த கவ­னம் செலுத்­தக்­கூ­டிய, குறிப்­பிட்­ட­வர்­களை இலக்கு வைத்து செயல்­படக்­கூ­டிய வடி­வில் இப்­போது மாற்­றம் பெற்று இருக்­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக பல துறைகளும் பல நிலை­களில் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தால் இத்­த­கைய ஓர் ஏற்­பாடு சரி­யா­ன­தா­கவே தெரி­கிறது.

எல்லா துறை­க­ளை­யும் சேர்ந்த நிறு­வனங்­க­ளுக்­கும் பெருந்­தன்­மை­மிக்க ஆதரவை வழங்கி வரு­வது என்­பது மிகவும் செலவு பிடிக்­கக்­கூ­டி­ய­தாக, நியா­ய­மற்­ற­தாக, விர­ய­மா­ன­தாக இருக்­கும்.

ஆகை­யால் வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் கிடைக்­கக்­கூ­டிய சம்­பள மானி­யம், இந்த ஆண்டு 10 விழுக்­காடு அள­வுக்­குத் தக­வல் தொடர்­பு­தொ­ழில்­நுட்­பம், உயிர்­ம­ருத்­துவ அறி­வி­யல், நிதிச் சேவைகள் போன்ற துறை­க­ளுக்­கும் அடுத்த ஆண்டு மார்ச் வரை விமா­னப் போக்­கு­வ­ரத்து, சுற்றுலா போன்ற படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­க­ளுக்கு 50 விழுக்­காடு வரை­யி­லும் கிடைக்­க­வி­ருக்­கின்­றன. மற்ற துறை­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பல நிலை­களில் மானி­யங்­கள் கிடைக்­கும்.

கட்­டு­மா­னம் உள்­ளிட்ட சில துறை களுக்கு இரண்டு மாத காலம் 50% மானி­யம் கிடைக்­கும். பிறகு அது 30% ஆகக் குறைக்­கப்­பட்டு அடுத்த மார்ச் வரை கொடுக்­கப்­படும்.

அதே வேளை­யில், கலை­கள், பொழுது போக்கு, சில்­லறை வர்த்­த­கம், உணவு சேவை, நிலப் போக்­கு­வ­ரத்து, கடல் துறை, கட­லோர தொழில்­துறை ஆகி­ய­வற்­றுக்கு மேலும் ஏழு மாதங்­க­ளுக்கு 30 விழுக்­காடு மானி­யம் உண்டு.

இப்­ப­டிப்­பட்ட குறிப்­பிட்ட இலக்­கு­டன் கூடிய அணு­கு­முறை கார­ண­மாக துறை வாரி­யாக எந்த அள­வுக்கு உதவி தேவையோ அந்த அள­வுக்கு வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் மானி­யம் கிடைக்க வழி ஏற்­படுத்­தப்­ப­டு­கிறது.

என்­றா­லும் கூட போதிய அள­வுக்கு உதவி பெறாத நிறு­வ­னங்­களும் அதே­வேளை­யில், தேவைக்கு அதிக உத­வி­பெறும் சில நிறு­வ­னங்­களும் இருக்­கவே செய்­யும். குறிப்­பிட்ட துறை­கள் மீது ஒரு­மித்த கவ­னம் செலுத்­தக்­கூ­டிய வேலை ஆத­ரவு திட்­டம் பல ஆயி­ரம் வேலை­களை காக்­கும் என்­றா­லும் ஆட்­கு­றைப்­பும் இருக்­கவே செய்­யும். ஆகை­யால் கொவிட்-19 ஆத­ரவு மானி­யம் இந்த ஆண்டு முடிவு வரை விரி­வு­படுத்­தப்­படும் என்­பது ஏற்­பு­டைய ஒன்­று­தான். இந்த மானி­யம் வேலை­யற்­ற­வர்­களுக்கு நன்மை பயக்­கிறது.

துறை­க­ளுக்கு உள்­ளேயே பல பன்­மய நிலை­கள் அதி­கம் காணப்­ப­டு­கின்­றன. சில நிறு­வ­னங்­கள் மற்­றவற்­றை­விட அதிக மீள்­தி­ற­னு­டன் இருக்­கக்­கூ­டும்.

எடுத்­துக்­காட்­டாக, சில்­லறை வர்த்­த­கத் துறைக்­குள் பார்க்­கை­யில், பெரிய பகுதி வாரிக் கடை­கள், பேரங்­கா­டி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், நடு­நிலை வியா­பா­ரி­கள், குடும்­பத்­தி­னர் நடத்­தும் கடை­கள் ஆகி­ய­வற்­றி­டம் தாக்­குப்பிடித்து நிற்­கும் ஆற்­றல் குறை­வா­கவே இருக்­கும் வாய்ப்புள்ளது. உணவு, பானத்­ துறை, விருந்­தோம்­பல் துறை ஆகி­ய­வற்­றி­லும் இத்­த­கைய நிலையைக் காண­லாம். இந்த மானியத்தை மேலும் நீட்டிக்க அல்­லது மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­ப­டக்­கூ­டும். வேலை­யின்மை இன்­ன­மும் அதி­க­ரிப்­பதே இதற்­கான கார­ணம்.

சில்லறை வர்த்­த­கத் துறை­யைச் சேர்ந்த கூடு­தல் ஆத­ரவு தேவைப்­ப­டாத பேரங்காடி கள், இணைய வர்த்­த­கத் தளங்­கள் போன்றவை தங்­க­ளுக்­குக் கிடைக்­கும் மானி­யத்தை தாங்­க­ளா­கவே திருப்­பித் தந்­தால் உதவி அதிகம் தேவைப்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு அதை திருப்­பி­விட முடி­யும்.

சுய­வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் ‘சுய­வேலை பார்ப்­போர் வரு­மான நிவா­ரண திட்­டம்’ என்ற திட்­டம் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கும். இதை­யும் நீட்டிக்க வேண்டி இருக்­கக்­கூ­டும்.

நிறு­வ­னங்­கள் புதி­தாக உள்­ளுர் மக்களை நிய­மித்­தால் சம்­ப­ளச் செல­வில் கால்­வாசி மானி­ய­மாக ஓராண்டு காலத்­திற்­குக் கிடைக்­கும். 40 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள சிங்­கப்­பூ­ரர்­களை வேலை­யில் சேர்க்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த மானி­யம் 50 விழுக்­காடு வரை இருக்­கும்.

வளர்ச்சி காணு­கின்ற துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தத் திட்­டம் மிக­வும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

இந்­தத் திட்­டம் உற்­பத்தி, கட்­டு­மா­னம், பண்­ட­க­சாலை தள­வா­டப் போக்­கு­வ­ரத்து போன்ற உள்­ளூ­ரி­லேயே பார்க்க வேண்டிய வேலை­க­ளைக் கொண்­டுள்ள, வளர்ச்சி காணு­கின்ற நிறு­வ­னங்­க­ளுக்கு இன்­னும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

என்­றா­லும், இந்­தத் திட்­டம் மூலம் நன்மை பெறு­வ­தற்­காக சில நிறு­வ­னங்­கள் முத­லில் ஆட்­கு­றைப்பு செய்­து­விட்டு பிறகு ஆட்­க­ளைச் சேர்க்­கும் காரி­யங்­களில் இறங்­கக்­கூ­டும். இதைத் தடுத்து நிறுத்­தும் அள­வுக்­குப் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் இடம்­பெற வேண்­டும்.

ஆட்­கு­றைப்பு செய்­கின்ற நிறு­வ­னங்­கள் அர­சாங்க மானி­யத் திட்­டத்­திற்­குக் குறைந்­த­பட்ச காலம் அதா­வது மூன்று மாத காலம் தகுதி பெறக் கூடாது.

$8 பில்­லி­யன் உத­வித் திட்­டத்தை அறி­வித்த திரு ஹெங், அந்­தப் பணம் நாட்­டின் தேசிய கையி­ருப்­பில் இருந்து பெறப்­ப­டாது என்றும் தெரிவித்தார்.

கொவிட்-19 கார­ண­மாக தாம­தம் அடைந்­துள்ள திட்­டங்­க­ளுக்­காக ஏற்­கெ­னவே ஒதுக்­கப்­பட்டு உள்ள தொகை­யில் இருந்து அந்­தத் தொகை பெறப்­படும் என்­றும் அவர் அறி­வித்­துள்­ளார். இது விவே­க­மான ஒரு செயல்.

தேசிய கையி­ருப்­பைத் தொடு­வது என்­பது வேறு வழி­யில்­லாத நிலை­யில் கடைசி செய­லா­கத்­தான் இருக்க வேண்­டும். எடுத்த எடுப்­பி­லேயே சேமிப்­பில் கைவைக்­கும் அணு­கு­முறை கூடாது.

இப்­போது கொவிட்-19 கார­ண­மாக தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும் திட்­டங்­களை மறு­ப­டி­யும் தொடங்க வேண்டி இருக்­கும். அப்போது, கொரோனா கிருமி நம்மை விட்டு சென்று இருக்­கும் என்­ப­தால் பாதிப்­பு­கள் குறைந்­திருக்­கும் என்­றும் அவ­ச­ர­கால ஆதரவுத் திட்­டங்­க­ளின் பேரில் அதி­கத் தொகையை செல­விட வேண்­டிய தேவை இருக்­காது என்­றும் நம்­ப­லாம்.

இத்­த­கைய ஒரு நிலையை இன்­ன­மும் நாம் எட்­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!