நாங்களே நாடி வருகிறோம், வாழ்த்துங்கள்

திரு கௌத்த­மன் ஹரி­தாஸ், 31, குமாரி ஜெய­சுதா சமுத்­தி­ரன், 29, இரு­வ­ரும் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தில் 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை படித்­த­னர்.

பிறகு ‘ராஃபிள்ஸ் பிளேஸ்’ பகுதிக்கு அருகே வேலை பார்த்­தனர். படித்த காலம் முதலே இரு­வரும் நண்­பர்­கள்.

இந்­நி­லை­யில், ஜெய­சுதா நடித்திருந்த ‘வெனிஸ் வணி­கன்’ (ஷேக்ஸ்பியரின் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்) என்ற நாட­கத்­தைப் பார்க்க கௌத்த­மன் சென்­றி­ருந்­த­போது, தான் ஆம்ஸ்­டர்­டாம் நக­ருக்கு வேலைக்­குச் செல்­வ­தா­க­வும் தன்னை வழி­ய­னுப்ப வரும்­ப­டி­யும் குமாரி ஜெய­சுதா அவ­ரி­டம் தெரி­வித்­தார். அப்­போது இரு­வ­ரும் சேர்ந்து அப்­பம் சாப்­பிட்­ட­னர்.

ஜெய­சுதா ஆம்ஸ்­டர்­டாம் செல்ல இருந்த நிலை­யில் அவ­ரி­டம் தனது காதலை கௌத்த­மன் தெரி­யப்­படுத்தி­னார். பிறகு விமான நிலை­யத்­தில் குமாரி ஜெய­சு­தா­வும் தன் காதலை வெளிப்­ப­டுத்த, இரு­வருக்கும் இடை­யில் நெருக்­கம் அதி­க­மா­னது.

வந்­த­தும் ஊட­ரங்கு

“ஜெயசுதாவிடம் என் காத­லைச் சொன்­னபோது அவ­ருக்­கும் அதே உணர்­வு­கள் இல்லை என்­றால் என்னி­டம் பதில் சொல்­லத் தேவை­யில்லை என்­றேன்.

“ஆம்ஸ்­டர்டா­மிற்கு செல்­ல­விருந்த அதே நாளில், விமான நிலை­யத்­தில் அவரை வழி­ய­னுப்­பச் சென்­ற­போது என் மீது இருந்த காத­லை அவர் வெளிப்படுத்தினார். அதுவே நாங்கள் இருவரும் காதல் உறவை தொடங்­கிய நாளா­கும்,” என்­றார் திரு கௌத்­த­மன்.

இந்­நிலை­யில் கௌத்த­ம­னுக்கு இங்கு டிபி­எஸ் வங்­கி­யில் வேலை கிடைத்­தது. இரு முறை ஆம்ஸ்­டர்­டாம் சென்று குமாரி ஜெய­சுதாவை அவர் சந்­தித்து வந்­தார்.

இத­னி­டையே, ஆம்ஸ்­டர்­டா­மில் வேலை பார்த்து வந்த ஜெய­சுதா தன் குடும்­பத்­தா­ரைச் சந்­தித்து அவர்­க­ளு­டன் சில நாட்­க­ளைச் செல­விட கடந்த மார்ச் மாதம் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். அந்த நேரத்­தில்­தான் உல­கெங்­கும் ஊர­டங்கு தொடங்­கி­யது. குமாரி ஜெய­சுதா சிங்­கப்­பூ­ரி­லி­ருந்தே வேலை பார்க்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.

இரு­வ­ரும் ஏற்­கெனவே திரு­மணத்­திற்கு நாள் குறித்­திருந்தனர். பாரம்­பரிய சடங்­கு­பூர்வ சம்­பி­ர­தாய திரு­ம­ணத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி நடத்தி செப்­டம்­பர் 5ஆம் தேதி திரு­மண வர­வேற்பு நிகழ்ச்சியை நடத்­த­லாம் என்று அவர்­கள் திட்­ட­மிட்­ட­னர்.

திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சியை சிராங்­கூன் கார்டன்ஸ் கன்ட்ரி கிளப்பில் நடத்து­வ­தற்­கான ஏற்­பாடுகளை இரு­வ­ரும் செய்­த­னர்.

அதற்­கான பணத்­தை­யும் கட்­டி­னர். ஆனால் கொவிட்-19 அதை­யெல்­லாம் கெடுத்­து­விட்­டது. இருந்­தா­லும் கட்­டிய பணம் இவர்­க­ளுக்கு திரும்ப கிடைத்­தது.

அப்­பம் முதல்­ ஆம்ஸ்­டர்­டாம் வரை

இந்­நி­லை­யில், கௌ­த்த­மன், ஜெய­சுதா இரு­வ­ரும் ஏற்­கெ­னவே திட்­மிட்­ட­படி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி புனிதமரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­மணி­யர் ஆல­யத்­தில் பதிவுத் திரு­மணம் செய்துகொண்­ட­னர்.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள முத்­துஸ் கறி உண­வ­கத்­தில் மதிய விருந்து உண்­ட­னர்.

பதி­வுத் திரு­ம­ணத்தை நடத்தி முடித்திருக்கும் இத்­தம்­ப­தி­யர் பாரம்­ப­ரிய திரு­ம­ணத்தை அடுத்த ஆண்­டிற்கு ஒத்­தி­வைத்து இருக்­கி­றார்­கள்.

ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யத்­தில் நடந்த திரு­ம­ணத்­தில் 30 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம் என்­பதால் பெரும்­பா­லும் குடும்ப உறுப்­பி­னர்­களே வந்­தி­ருந்­த­னர்.

ஆனா­லும் இப்­போது டாஸ்­மேனி­யா­வில் வேலை பார்க்­கும் கௌத­மனின் தம்­பி­யான ரிஷி­கு­மார் தன் சகோ­த­ர­னின் திரு­ம­ணத்­தில் கலந்து­கொள்ள முடி­ய­வில்லை. இது தமக்கு மிக­வும் கவலை தரு­வ­தாக ரிஷி­கு­மார், 28, தெரி­வித்­தார்.

கௌத்த­மன்-ஜெய­சுதா தம்­ப­தியர் பதிவுத் திரு­ம­ணம் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நடந்­தே­றி­யது என்­றா­லும் குறை ஒன்­றும் இல்லாமல் இனி­தாக அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்­தது.

திரு­மதி ஜெய­சுதா முன்பு ஆம்­டஸ்­டர்­டாம் புறப்­பட்­டுச் செல்ல இருந்த வேளை­யில், அவ­ரும் திரு கௌ­த்த­ம­னும் சேர்ந்து ஒரு நாள் அப்­பம் சாப்­பிட்­டார்­கள். அந்த நிகழ்ச்­சியை நினை­வு­கூ­ரும் வகையில் ‘#அப்­பம் முதல்­ ஆம்ஸ்­டர்­டாம் வரை’ என்ற ஹாஷ்­டாக்கை திரு­ம­ணத்­து­டன் இத்தம்பதியர் வெகு சிறப்பாக இணைத்­த­னர்.

இதைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு, மித்­திலா ஆனந்த் என்ற திரு­மண அழைப்­பி­தழ் வடி­வ­மைப்­பா­ளர் உத­வி­யு­டன் சுவ­ரொட்டி ஒன்­றை­யும் இவர்­கள் தயா­ரித்­த­னர்.

திரு­மண நிகழ்ச்­சி­களை உட­னுக்­கு­டன் ஃபேஸ்புக்­கில் பகிர ஆகஸ்ட் 20ஆம் தேதி உற­வி­னர்­களை­யும் நண்­பர்­க­ளை­யும் கொண்ட தனிக் குழு ஒன்றை இவர்­கள் உரு­வாக்­கி­னர்.

திரு­மண நிகழ்ச்­சி­க­ளைக் காட்டும் ஃபேஸ்புக் நேரலைப் பதிவு­க­ளுக்­கும் இதர திரு­மண வேலை­க­ளுக்­கும் ஸ்டேசி டான்யா ஷாமினி, 25, என்­ப­வரைப் பொறுப்­பா­ள­ராக இவர்­கள் நிய­மித்­த­னர்.

ஏறத்­தாழ 11 ஆண்­டு­க­ளாக கௌத்த­ம­னின் நண்­ப­ராக இருந்து வரும் ஸ்டேசி, ‘இந்­தி­யன்ஸ் ஆஃப் சிங்­கப்­பூர்’ என்ற சமூக ஊட­கத் தளத்­தை­யும் இயக்கி வரு­கி­றார்.

“சாதா­ரண பதி­வு­க­ளாக மட்­டும் இல்­லா­மால் அந்த ஃபேஸ்புக் குழு அனை­வ­ருக்­கும் ஓர் உணர்­வு­பூர்வ அனு­ப­வ­மாக இருக்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­தில் அதை நடத்தி­னேன். பல­ரா­லும் நேரடி நிகழ்­வில் கலந்­து­கொள்ள முடி­யா­த­தால், வழக்க நிலை­யில் நேர­டி­யாக இருந்தால் எப்­படி இருக்­குமோ அதற்கு ஈடான உணர்வை வழங்க முனைந்தேன்,” என்­றார் ஸ்டேசி.

“திரு­மண நாளில் பல வேலை களுக்கு இடை­யில் ஃபேஸ்புக் பதிவு­க­ளையும் செய்­து­கொண்­டி­ருந்­தேன். நீண்ட நேரத்­திற்கு கைகளை நீட்­டி­ய­ப­டியே காணொளி எடுப்­பது சோர்­வை­டையச் செய்­தது.

“அது­போக முதி­ய­வர்­கள் பல­ருக்­கும் நான் என்ன செய்­கி­றேன் என்று தெரி­ய­வில்லை. ஃபேஸ்புக் பதி­வின் அர்த்­தம் அவர்­க­ளுக்குப் புரி­யா­த­தால் எனக்­குத் தேவை­யான இட­ம், முக்­கி­யத்­து­வ­த்தைச் சிலர் வழங்­க­வில்லை. அவர்­க­ளை­யும் சமா­ளிக்­க­வேண்­டி­யி­ருந்­தது,” என்றும் ஸ்டேசி குறிப்பிட்டார்.

உணவகம் முதல் மருத்துவமனை வரை

இவை­யெல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, கெளத்தமன்-ஜெய­சுதா தம்­ப­தி­யர் புது­மை­யான ஒரு முடிவை­யும் எடுத்­த­னர்.

கொவிட்-19 கார­ண­மாக உற­வி­னர்­கள், நண்­பர்­கள், விருந்­தினர்­கள் பலரும் நேர­டி­யாக திரு­ம­ணத்­திற்கு வந்­தி­ருந்து தங்களை வாழ்த்த முடி­ய­வில்லை என்­ப­தால் தாங்­களே நேரே சென்று அவர்­களைச் சந்­தித்து ஆசி­யை­யும் வாழ்த்­தை­யும் பெற்­று­வி­ட­லாம் என்று முடி­வு­செய்­த­னர்.

இது பற்றி பல­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­னர். ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணிக்குத் தொடங்­கிய இந்தப் பய­ணம், அடுத்த நாள் அதி­காலை 2 மணிக்­குத்­தான் முடி­வடைந்­தது. நண்­பர்­கள் பல­ரின் உத­வி­யு­டன் இந்­தத் தம்­ப­தி­யர் ஏறத்­தாழ 12 மணி நேரம் தீவு முழு­வ­தும் நண்­பர்­கள், உற­வினர்கள் வீடு­க­ளுக்­குச் சென்று பெரி­ய­வர்­க­ளி­டம் வாழ்த்துப் பெற்­ற­னர்.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள ‘சிமி­சாங்­காஸ்’ உண­வ­கம் முதல் ‘கிளெனி­கல்ஸ்’ மருத்­து­வ­மனை வரை சென்று அங்கு பணி­யாற்­றும் தங்கள் முன்­னாள் சகாக்­க­ளை­யும் சந்­தித்து இத்­தம்­ப­தி­யர் வாழ்த்துப் பெற்­ற­னர்.

“இக்­கால திரு­ம­ணங்­களில் மற்­ற­வர்­க­ளை மணமக்களே நேரே சென்று சந்­திப்­பது நவீன வழக்கமா என்று பல­ரும் எங்களிடம் வியப் புடன் விசா­ரித்­த­னர்.

“திரு­ம­ணத்­திற்கு வரும்­படி அழைக்க முடி­யா­த­தால் அவர்­களை நேரே சென்று சந்தித்து வாழ்த்து பெற முடி­வெ­டுத்­தோம்.

“இதை அவர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­னோம். நண்­பர்­க­ளின் வீடு­களில் இருந்த பெரி­ய­வர்­கள் வாழ்த்­தி­னர்.

“சிலர் புடவை, வெற்றிலை பாக்கு, பழங்­கள் போன்றவற்றை வழங்கி பாரம்­ப­ரிய முறை­யில் எங்களை உப­ச­ரித்து வாழ்த்­தி­னர்,” என்று விளக்­கி­னார் ஜெய­சுதா.

கலைச்­செல்­ல­வம் பன்­னீர்­செல்வம், செல்­வம் ராம­நா­தன் ஆகிய நண்­பர்­கள் கைகொ­டுத்­த­னர். ஹரி‌ஷ் குமார், ரமே‌ஷ் இளங்­கோ­வன் ஆகி­யோர் கார் ஓட்டிகளாக உத­வி­னர்.

கௌத்த­ம­னின் தங்­கை­யான குமாரி மேக­தர்­‌ஷினி ஹரி­தாஸ் படப்­பி­டிப்­பா­ள­ரா­க­வும் நேரத்தை வகுப்­பவ­ரா­க­வும் பொறுப்­பேற்­றார்.

மனநிறைவு

“சிந்­தனை என்­னி­டம் இருந்து வந்­தி­ருந்­தா­லும் அதை செயல்­படுத்­தி­யது முற்­றி­லும் என் நண்­பர்­கள். யாரைச் சந்­திக்­க­லாம் என்ற பட்­டி­யலை மட்டும் நாங்கள் இருவரும் உரு­வாக்­கி­னோம். மற்­ற­படி பய­ணத்­தைத் திட்­ட­மிட்டு, அதை சீராக நடத்­தி­யது என் நண்­பர்­கள்,” என்றார் கௌ­த்த­மன்.

பய­ணம் களைப்­பூட்­டு­வ­தாக இருந்­தா­லும் மன­நி­றை­வா­க­வும் அர்த்­த­முள்­ள­தா­க­வும் அமைந்­தது என்று குறிப்­பிட்­டார் ஜெய­சுதா.

கொவிட்-19 கார­ண­மாக விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை எல்­லாம் மீறா­மல், அதே­வே­ளை­யில், மன­நிறை­வோடு பதிவுத் திரு­ம­ணம் செய்து­கொண்­டுள்ள கௌத்­த­மன்-ஜெய­சுதா தம்­ப­தி­யர் இப்­போது புதிய வீட்டை தேடி வரு­கி­றார்­கள்.

இடைப்பட்ட காலத்தில் தங்­கள் பெற்­றோரின் வீடு­களில் இவர்­கள் மாறி மாறி வசித்து வரு­கி­றார்­கள்.

கொவிட்-19 தடை­களையே சமாளித்து திரு­ம­ணம் புரிந்­தி­ருக்­கும் இந்­தக் காதல் தம்­ப­தி­யர், வாழ்­வில் சந்­திக்­கும் எந்­த­வொரு சவாலை­யும் உடைத்­தெ­றிந்து வெற்றிப் பாதை­யில் முன்­னே­றிச் செல்­வார்­கள் என்­ப­தில் எள்ளளவும் ஐய­மில்லை.

உலகையே மாற்றிவிட்ட கொவிட்-19 தொற்று திருமணத்தையும் விட்டுவைக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட்டம், முகக்கவசம், பாதுகாப்பு இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள். மனதிற்கு நெருங்கிய உறவுகள், நண்பர்கள், விருந்தினர்கள் இல்லாத ஏக்கத்தை திருமணங்களில் காண முடிகிறது. மணமக்களை வாழ்த்த உறவினர்கள் வந்த காலம் போய் மணமக்களே நாடிப் போய் வாழ்த்து பெறும் ஒரு காலத்தையும் கொவிட்-19 ஏற்படுத்தி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!