தடையைத் தளர்த்த யோசனை

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் கொரோனா தொற்று நில­வ­ரம் சீர­டைந்து வரு­வ­தால் விடு­தி­க­ளுக்­குள் ஊழி­யர்­கள் மது அருந்­து­வதை அனு­ம­திப்­பது குறித்து மனி­த­வள அமைச்சு பரி­சீ­லித்து வரு­கிறது.

கடந்த சில மாதங்­க­ளாக வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் மது­பா­ன­மும் சிக­ரெட்­டும் அனு­ம­தி­ இன்­றிப் புழங்­கு­வது தொடர்­பான சம்­ப­வங்­கள் குறித்து தானும் போலிசும் அறிந்­துள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­தது.

“அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு, சம்­பந்­தப்­பட்ட ஊழி­யர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. விடுதி நடத்­து­நர்­கள் அப­ரா­தம் விதிப்­ப­தும் அதில் அடங்­கும்,” என அமைச்சு கூறி­யது.

கொரோனா பர­வ­லுக்­கு­முன் ஊழி­யர்­கள் தங்­க­ளின் அறை­களில் மது அருந்­தத் தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. ஆயி­னும், அதற்­கென ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் அவர்­கள் மது அருந்­த­வும் புகைக்­க­வும் முடி­யும்.

சட்ட, ஒழுங்­குப் பிரச்­சினை ஏற்­படு­வ­தைத் தவிர்ப்­ப­தற்­காக கொரோனா பர­வ­லின்­போது மது­பான விற்­ப­னைக்­கும் உட்­கொள்­வதற்­கும் தற்­கா­லி­க­மா­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு சுட்­டி­யது.

“விடு­தி­களில் கொரோனா நிலைமை மட்­டுப்­பட்டு வரு­வ­தால், கட்­டுப்­பாட்டு விதி­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­து­வது குறித்­தும் விடுதி வளா­கங்­க­ளுக்­குள் மித­மான அள­வில் மது அருந்த அனு­ம­திப்­பது குறித்­தும் விடுதி நடத்­து­நர்­களு­டன் ஆலோ­சித்து, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,” என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

இடைப்­பட்ட காலத்­தில், அதி­கா­ரி­கள் நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிப்­பர் என்­றும் கடத்­தல் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் இடம்­பெ­று­வ­தைத் தடுக்க விடுதி நடத்­து­நர்­க­ளு­டன் இணைந்து செய­லாற்­று­வர் என்­றும் கூறப்­பட்­டது.

விடு­தி­க­ளுக்­குள் நுழை­யும் தனி­ம­னி­தர்­க­ளி­ட­மும் வாக­னங்­களி­லும் சோத­னை­களை அதி­கப்­படுத்து­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

கொரோனா பர­வ­லுக்­கு­முன் வாரம் இரு­முறை இர­வுப்­பொ­ழு­தில் மது அருந்­து­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார் கள மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வரும் திரு கந்­தன் கோபி­நாத், 41.

ஹியூ­லெட் விடு­தி­யில் தங்­கி­ இ­ருக்­கும் திரு கோபி­நாத், விடு­தி­களில் குழு­வா­கச் சேர்ந்து மது அருந்த அனு­ம­தித்­தால் பாது­காப்பு இடை­வெ­ளிப் பிரச்­சினை எழ­லாம் என்­ப­தைத் தாம் அறிந்­துள்­ள­தா­கச் சொன்­னார்.

ஆனா­லும், “ஒன்­றி­ரண்டு கலன் பியர் அருந்த அனு­ம­திப்­பது அல்­லது வார இறு­தி­களில் சில மணி நேரம் மட்­டும் மது அருந்த அனு­ம­திப்­பது போன்ற கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­லாம்,” என்­றார் அவர்.

முன்­ன­தாக, துவாஸ் வியூ விடு­தி­யில் செர்ட்­டிஸ் துணை போலிஸ் அதி­கா­ரி­கள் மூவர் பறி­மு­தல் செய்­யப்­பட்ட மது­பா­னங்­களை வடி­காலில் ஊற்­றி­ய­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது. இச்­சம்­ப­வம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது.

அந்த அதி­கா­ரி­கள் பொருத்­த­மற்ற வகை­யில் நடந்­து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட செர்ட்­டிஸ் நிறு­வனம், அம்­மூ­வ­ருக்­கும் ஆலோ­சனை வழங்கி, வேறு பணி­களில் அமர்த்­தியுள்ளது.

தங்­க­ளது முதன்­மைப் பணி­யான ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தி­லும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் கொவிட்-19 செயல்­பா­டு­களில் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள அதி­கா­ரி­கள் அனை­வ­ருக்­கும் வலி­யு­றுத்­திச் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­தது. அத்­து­டன், தடை செய்­யப்­பட்ட பொருட்­கள் அனைத்­தும் விடு­தி­களை நடத்­து­வோ­ரி­டம் ஒப்­ப­டைத்­து­விட வேண்­டும் என்­றும் அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!