கொவிட்-19 வேலைகளை கெடுத்தாலும் கைகொடுத்துக் காக்க பல துறைகள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தில் விளை­யா­டி­விட்­டது. ஊழி­யர்­கள் பலரை வீட்­டுக்கு அனுப்பி­விட்­டது. வேலை செய்­யும் பாணியையே மாற்­றி­விட்­டது. சில வேலை­களை முற்­றி­லும் மறைந்­து­போ­கச் செய்­து­விட்­டது. நிகழ்­கா­ல­மும் இல்­லா­மல் எதிர்­கா­ல­மும் கேள்­விக்­குறியாகி பரி­த­விக்­கும் நிலைக்­குப் பல­ரும் தள்­ளப்­பட்­ட­னர். ஒவ்­வொ­ரு­வ­ரும் குறைந்­த­பட்சம் ஏதோ ஒரு வழி­யில் பாதிக்­கப்­பட்டுள்ளனர்.

பொரு­ளி­ய­லைத் தூக்கி நிறுத்­த­வும் வேலை­க­ளைக் காக்­க­வும் புதிய தேர்ச்சி­களைக் கற்­றுக்­கொண்டு மக்­கள் கொவிட்-19க்குப் பிந்­தைய காலத்­துக்­குத் தயா­ரா­க­வும் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் ஏறக்­கு­றைய $100 பில்­லி­யன் தொகையை ஒதுக்கி குறுகியகால, நடுத்­தரகால, நீண்டகால நோக்­கி­லான திட்­டங்­களை, நிவாரணங்­களை, ஆத­ரவு­களை, ஊக்கு­விப்­பு­களை வழங்கிவரு­கிறது.

ஆனா­லும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் காக்­கக்­கூ­டிய ஒரு நிலை எந்த ஓர் அர­சுக்­கும் இருக்க முடி­யாது என்­ப­தால், இங்கு பெரும் நிறு­வ­னங்­கள்­கூட வேறு வழி­யின்றி கடை­சிக்­கட்­ட­மாக ஊழி­யர்­களைக் குறைக்க வேண்­டிய சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­டன.

விமா­னப் போக்­கு­வ­ரத்து, சுற்­றுலா, ஹோட்­டல்­கள், சில்­லறை வர்த்­த­கம் உள்­ளிட்ட துறை­கள் ஏறக்­கு­றைய முடங்­கிப் போய்­விட்­டன. இத்­து­றை­களில் வேலை பார்த்த சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­கம். ஆகையால் வேலை இழப்­புக்கு ஆளான சிங்­கப்­பூ­ரர்­களும் சம்­ப­ளத்­தைக் குறைத்­துக்­கொண்டு வேலை­யைத் தக்­க­வைத்­துக் கொண்­ட­வர்­களும் கணி­சம்.

சிங்­கப்­பூ­ரின் பெயர் சொல்­லும் அடையா­ள­மா­கத் திகழ்­கின்ற சிங்­கப்­பூர் ஏர்லைன்ஸ் நிறு­வ­னம் கிட்­டத்­தட்ட 4,300 ஊழியர்களை நீக்­கி­யுள்­ளது. பணி­யில் உள்ள விமா­னி­களும் பாதி சம்­ப­ளத்­திற்கு ஒத்­துக்­கொண்­டுள்­ள­னர். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்­தோ­சா­வில் குறிப்­பி­டத்­தக்க பணி­யா­ளர்­கள் வேலை­யி­ழந்­த­னர்.

லிட்­டில் இந்­தி­யா­வின் சையத் ஆல்வி சாலை­யில் கம்­பீ­ர­மாக செயல்படும் முஸ்­தஃபா கடைத்­தொ­கு­தி­யை­யும் கொவிட்-19 விட்­டு­வைக்கவில்லை. சிங்கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், மலே­சியா, இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து வேலை அனு­ம­திச் சீட்­டில் வந்து வேலை­செய்­வோர் என 1,500க்கும் மேற்­பட்­டோர் பணி­யாற்றி வந்த முஸ்­தஃபா சென்டர், கடந்த சுமார் 15 ஆண்­டு­க­ளா­க நாள்­தோ­றும் 24 மணி நேரம் இயங்கியது.

ஆனால் இப்­போது காலை 11 மணி­மு­தல் இரவு 11 மணி வரை மட்­டுமே செயல்படுகிறது. பலரை வேலை­யில் இருந்து விலக்கி­விட்­டது. இந்த நிறு­வ­னங்­கள் எல்­லாம் ஒரு பக்­கம் என்­றால் மறுபக்­கம் பல சிறிய சில்­லறை வர்த்­த­கங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

நம்­பிக்கை தரும் செய்தி

கொவிட்-19 கார­ண­மாக ஆயி­ரக்­கணக்­கா­னோர் இக்­கட்­டான சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­டா­லும் இவர்­க­ளுக்கு வேறு துறை­களில் வேலை உள்­ளதாக சிலர் நம்­பிக்­கை­யு­டன் கூறு­கி­றார்­கள்.

அங்­கீ­கா­ரம் பெற்ற பாது­காவல் நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் கௌர­வச் செய­லா­ளர் திரு கேரி ஹாரிஸ், பாது­கா­வல் துறை­யில் கிட்­டத்­தட்ட 10,000 பேருக்கு வேலைவாய்ப்­பு­கள் உள்­ளன என்கிறார்.

“இது­வ­ரை­யில் வேலை இழந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோ­ருக்கு வேலை­கள் இந்தத் துறை­யில் உள்­ளன. ஆனால் இந்த வேலைக்கு அவர்­கள் வரு­வார்­களா என்­பதே கேள்வி,” என்­றார் அவர்.

“சம்­ப­ளம் குறைவு என்று எண்­ணிய காலம் போய்­விட்­டது. முற்­போக்­கான சம்­பள முறை­யின் கீழ் இந்­தத் துறை­யில் பணி­யாற்­று­வோர் வரும் ஜன­வ­ரி­யில் ஏறத்­தாழ 30% சம்­பள உயர்­வை­யும் பார்க்­க­விருக்­கின்­ற­னர்,” என்றார் அவர்.

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­கா­கப் போக்­கு­வரத்­துச் சேவையை வழங்­கி­வந்த முக­மது நூர்­தீன் என்­ப­வர், கொவிட்-19 தாக்­கம் தொடங்­கிய காலகட்­டத்­தி­லேயே பாது­கா­வல் துறைக்கு மாறி­னார்.

“பிப்­ர­வரி மாத வாக்­கில் வெளி­நாடு­களி­லி­ருந்து வரு­வோ­ரின் எண்­ணிக்­கை குறைந்­து­வந்­தது. இன்­னும் மோச­மா­கத் தான் ஆகும் என்று யூகித்­தேன். உடனே வேறு துறைக்கு மாறு­வோம் என்று நினைத்து பாது­கா­வல் துறை­யில் சேர்ந்­தேன்,” என்­றார் திரு நூர்­தீன்.

நாணய மாற்று வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு வந்த 27 வயது முகம்­மது யாசீர், கொவிட்-19 நிலை­மையை உணர்ந்து வெளி­நா­டு­க­ளுக்­குப் பணம் அனுப்­பும் சேவையை வழங்­கும் நிறு­வ­னத்­தில் பணிக்­குச் சேர்ந்­தார்.

இந்த இளை­யர், நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து சிறிய முத­லீட்­டில் நாணய மாற்­றுக் கடையை ஓராண்டு நடத்­தி­ய­வர். வியா­பா­ரத்­தின் வீழ்ச்­சி­யால் வேறு வாய்ப்­பு­க­ளைத் தேடி வந்­த­வர், வரு­மா­னத்தை அதி­க­ரிக்க பகுதி நேர­மாக ‘கிராப்’ உணவு விநி­யோக ஊழி­ய­ரா­க­வும் மாறி­விட்­டார்.

தந்தை நடத்­தி­வந்த சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­தில் எட்டு ஆண்­டு­க­ளா­கப் பணி­பு­ரிந்து வந்த 33 வயது சி.சண்­முகம், அந்­தக் கடையை ஏற்று நடத்­து­வ­தாக இல்லை. வியா­பாரச் சரிவு இதற்கு முக்­கிய கார­ணம்.

ஓய்வு எடுக்க முடி­வெ­டுத்த தந்தை கடையை மூடியதையடுத்து கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கான ‘சுவாப்’ பரி­சோதனை­யைச் செய்­யும் பணிக்­குச் சென்­றார் சண்­மு­கம். “தொடக்­கத்­தில் அச்­ச­மா­கத்தான் இருந்­தது. வீட்­டில் முதிய பெற்­றோர் இருப்பதால் இந்தப் பணிக்­குச் செல்­கி­றோமே என்று பயம் இருந்தது.

“ஆனால் மருத்­து­வத் துறை ஊழி­யர்­களே நமக்­காக முன்­கள வீரர்­க­ளாக இந்­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டும்­போது நாமும் பாது­காப்­பா­கத்தான் இருப்­போம் என்ற நம்­பிக்­கை­யில் நான் சேர்ந்­தேன்,” என்­றார் சண்­மு­கம்.

எல்லையே இல்லை

கடந்த நான்கு மாதங்­க­ளாக இந்­தப் பணி­யில் ஈடு­பட்­டு­வ­ரும் இவர், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­களில் ஊழி­யர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை நடத்­தி­உள்­ளார். மூன்று மாத ஒப்­பந்­தத்­தில் இந்­தப் பணிக்கு ஏப்­ரல் மாதத்­தில் சேர்ந்த இவர், அந்­தத் தவணை முடிந்­த­வு­டன் ஒப்­பந்­தம் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

இவர்­க­ளைப் போல இதற்கு முன்பு வெவ்­வேறு துறை­களில் பல ஆண்­டு­கள் ஈடு­பட்­டு­வந்­த­ இ­தர பல­ரும் காலச் சூழ்­நி­லைக்கு ஏற்ப வேலை­களை மாற்­றிக்­கொண்­ட­னர்.

பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யில் இருந்­தா­லும் மாறு­பட்ட துறை­களில் வேலை வாய்ப்­பு­கள் இருந்­த­ வண்­ணம்­தான் உள்­ளன. பரந்த கண்­ணோட்­டத்­து­டன், திறன்­களை ஆழ­மா­க­வும் அக­ல­மா­க­வும் வளர்த்து­கொண்­டோ­மே­யா­னால் வாய்ப்பு­களுக்கு எல்லை இல்லை. பிழைத்­துக்­கொ­ள்ள விழித்­துக்­கொள்­ள­வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!