நேரலைக் காணொளிகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

‘பிர­ஹம் அங்கா’

நேரலை காணொ­ளி­கள் மூலம் இணைய வரத்­த­கத்­தில் பிரபலமாகி வரும் உள்ளூர் வர்த்தகம் ‘பிர­ஹம் அங்கா’.

­சகோதரிகள் ல. நிஷா­லினி, 27, ல. வைஷ்ணவி, 26, இருவரும் அம்மாவுடன் இணைந்து இந்த வர்த்தகத்தை நடத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக தீபாவளிச் சந்­தை­யில் மருதாணி போடும் சேவை வழங்கி வந்த நிஷா­லினி, இந்த ஆண்டு இணையத்தில் ஆடை, அணி­க­லன் வர்த்­த­கத்­தில் இறங்கியுள்­ளார். கொவிட்-19 கார­ணத்­தால் பல­ரும் வெளி­நா­டு சென்று ஆடை­களை வாங்க முடி­யாது என்­றும் இணை­யத்­தில் வச­தி­யாக வாங்­கும் வாய்ப்பு இருப்­ப­தால் பல­ரும் இணை­யம்­வழி முன்­கூட்­டியே தீபா­வளி ஆடை­களை வாங்­க­லாம் என்­றும் கூறி­னார் நிஷா­லினி.

சேலைகள் அதற்­கு ஏற்ற ஆப­ர­ணங்­களுடன் வரும் நாட்­களில் சேலைத் தொகுப்­பு­க­ளை அறிமுகப்­ப­டுத்த உள்ளனர்.

பெரும்­பா­லும் இண்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் சேவையை வழங்­கும் ‘பிர­ஹம் அங்கா’ பல இளை­யர்­க­ளைக் கவர்­கிறது. மேலும், நேரடி காணொளி மூலம் சேலை­க­ளை அறிமுகப்ப­டுத்­துவதால் பல­ரையும் எட்ட முடிகிறது என்றார் நிஷா­லினி. இந்­திய ஆடை­க­ளுக்கு ஏற்ற தோடு, சங்­கிலி போன்ற ஆப­ர­ணங்­க­ளை­யும் இவர்­கள் படங்­க­ளா­க­வும் காணொ­ளி­க­ளா­க­வும் பதி­வேற்­றி­யுள்­ள­னர்.

“படத்­தில் பார்ப்­ப­தைப் போன்ற ஆடை­கள் வந்து சேராது என்­ப­தால் பல­ருக்­கும் இணை­யத்­தில் ஆடை­கள் வாங்­கு­வ­தில் தயக்­கம் உள்­ளது. இந்த தயக்­கத்­தை­யும் அச்­சத்­தை­யும் போக்க கடும் முயற்சி எடுக்­கி­றோம். படத்­தில் பதி­வா­காத சில நிறங்­கள் காணொ­ளி­யில் பதி­வா­க­வும் என்­ப­தால் ஒரு சேலைக்கு படத்­தோடு காணொளிப் பதி­வை­யும் இடு­கி­றோம்,” என்­றார் நிஷா­லினி.

https://www.instagram.com/brahamanga 

‘காட்­டன் கெண்­டிஸ் அலி­யுரா’

சமூக ஊட­கங்­களில் நேரலைக் காணொளிப் பதி­வு­கள் மூலம் இந்திய ஆடை­க­ளைக் காட்­சிப்­ப­டுத்தி, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து வரு­கின்­ற­னர், சகோ­த­ரி­கள் ஷாலினி நாயுடு, 30, சிந்து எனப்­படும் துர்­கா­தேவி நாயுடு, 33 இரு­வ­ரும்.

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக ‘காட்­டன் கெண்­டிஸ் அலி­யுரா’ எனப்­படும் இணைய வர்த்­தக சேவையை நடத்தி வரும் இந்த சகோ­த­ரி­கள், பொது­வாக தீபா­வளிக் காலத்­தில், தேக்கா விற்­ப­னைச் சந்தை, ‘ஸாக் சலாம்’ இந்­தி­யக் கண்­காட்சி போன்ற இடங்­களில் கடை நடத்துவார்­கள். கொவிட்-19 சூழ­லில் கடை சாத்­தி­ய­மில்­லா­த­தால், இணை­யத்­தில் நேரலை மூலம் ஆடை­களை விளம்­ப­ரப்­ப­டுத்­தத் தொடங்­கி­னார்.

கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேரம் நீடிக்­கும் இவர்­க­ளின் நேரலைக் காணொ­ளி­களில் கிட்­டத்­தட்ட 50 சேலை­கள் இடம்­பெறும். “காணொ­ளி­க­ளுக்கு எதிர்­பார்த்­த­தை­விட அதி­க­மா­கவே வர­வேற்பு கிடைக்­கிறது,” என்­றார் சிந்து.

பஞ்­சாபி ஆடை, ஜிப்பா, குழந்தை ஆடை­களை என்று பல­வித ஆடை­களை விற்­றா­லும் முக்கிய­மாக சேலை­க­ளையே இவர்­கள் விற்­கி­றார்­கள். மற்ற வர்த்­த­கர்­க­ளி­டம் கிடைக்­காத மாறு­பட்ட வடி­வ­மைப்­பு­க­ளி­னால் ஆடை­களை வழங்க வேண்­டும் என்­பது இவர்­க­ளின் நோக்­கம்.

“தீபா­வளிக் காலத்­தில் புதிய சேலை வடி­வங்­களை மக்­கள் எதிர்ப்­பார்ப்­பது வழக்­கம். முன்பு இந்­தி­யா­விற்கு நேர­டி­யாக சென்று சேலை­க­ளைத் தேர்வு செய்து வாங்­கு­வோம். தற்­போது சிறிய அள­வில் இறக்­கு­மதி செய்­கி­றோம். நேர­லைக் காணொ­ளி­கள் மூலம் அதை வேக­மாக விற்­று­விட முடி­கிறது,” என்­றார் சிந்து.

புதிய வடி­வ­மைப்பு, வண்­ணங்­க­ளு­டன் நாம் கேட்­கும் உடை­யை­யும் தேடி வாங்­கித் தரு­கி­றார்­கள். அத­னால் இத்­த­கைய இணைய சேவை­கள் வச­தி­யாக இருக்­கின்­றன என்­றார் ‘காட்­டன் கெண்­டிஸ் அலி­யுரா’வின் வாடிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 30 வயது திரு­மதி தில­க­வதி மாரி­முத்து.

https://www.instagram.com/cotton_candies_allura

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon