தொடரும் உதவிகள், கூடும் நம்பிக்கை

எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, நிகழ்கால சிரமங்களைச் சமாளித்து வேகமாக மீண்டு வர பல்வேறு உதவித் திட்டங்களைக் கொண்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வரவுசெலவுத் திட்டம் எந்த ஒரு புதிய சுமையையும் மக்களுக்குத் தரவில்லை என்பதிலும் பலருக்கு நிம்மதி.

குடும்பங்கள், மாணவர்கள், வேலை இல்லாதோர், தொழில்மாற விரும்புவோர், வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள் என கிட்டத்தட்ட எல்லாத் தரப்பினருக்கும் ஆதரவுத் திட்டங்களைக் கொண்ட இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் குறித்து வெவ்வேறு பிரிவினரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

வேலை­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் தக்­க­வைத்­துக் கொள்­வதே பெரும்­பா­லா­னோ­ருக்கு பெரிய சவா­லாக இருக்­கிறது.

கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக விமான பொறி­யி­ய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றும் சுந்­தர் மனோ­க­ர­னுக்கு, இன்­னும் வேலையில் இருக்­கி­றோம் என்ற மன­நி­றைவு இருந்­தா­லும் அவ­ரது நிறு­வ­னம் பொரு­ளி­யல் சரி­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது அவ­ருக்கு வருத்­தத்தை அளித்­து­வ­ரு­கிறது. கூடிய விரை­வில் வேலை போய்­வி­டுமோ என்ற அச்­சம் இருந்து வரு­கி­ற­தாக அவர் கூறி­னார்.

“நல்ல சம்­ப­ளம். நிரந்­த­ர­மான வேலை. வளர்ச்சி உள்ள துறை என்ற கார­ணங்­க­ளால் படிப்பை முடித்­த­தும் இந்த வேலை­யில் சேர்ந்­தேன். தொடர்ந்து சம்­ப­ளம் கிடைத்து வரு­கிறது என்­றா­லும் நிலைத்­தன்­மை­யில்­லாத கால­மாக உள்­ளது,” என்­றார் அவர். அவ­ரு­டன் பணி­புரிந்த பலர் வேறு வேலைகளுக்கு மாறிவிட்ட­னர் என்ற அவர், அர­சாங்­கம் இந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திலும் கொவிட்-19 சூழ­லால் பாதிக்­கப்­பட்ட துறை­க­ளுக்­குத் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கு­வது மகிழ்ச்சி தரு­வ­தா­கக் கூறி­னார்.

அதே­நே­ரத்­தில் வேலை­மாற விரும்­பு­வோர் திறன் தேர்ச்­சி­க­ளைப் பெற­வும் மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வும், வேலை இல்­லா­தோர் வேலை தேட­வும் அர­சாங்­கம் திட்­டங்­களை வெளி­யிட்­டி­ருப்­பதை வேலை தேடிக் கொண்­டி­ருக்­கும் எஸ்.பானு வர­வேற்­றார். உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு வேலை­க­ளைப் பெற்­றுத்­தர வேலை­கள், திறன்­கள் தொகுப்­புத் திட்­டத்­திற்கு இரண்­டா­வது தவ­ணை­யாக $5.4 பில்­லி­யன் கூடு­தல் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், வெளி­நாட்டு ஊழி­யர் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது குறித்து நீக்­குப்­போக்­கு­ட­னும் முற்­போக்­கு­ட­னும் செயல்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை ஸ்ட்­ரைட்ஸ் பார்மா குளோ­பல் நிறு­வன தலை­வ­ரான திரு மோகன் குமார் சுட்­டி­னார்.

நேர்காணல்கள்:

இந்து இளங்­கோ­வன், ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம், கி.ஜனார்த்­த­னன், இர்­‌‌‌ஷாத் முஹம்­மது, எஸ்.வெங்கடேஷ்வரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!