வீணாவதைத் தடுக்க தானாக முன்வருவோர்

சிங்கப்பூரின் கழிவில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு உணவுப் பொருள் விரயமாக உள்ளது.

இதில் பயன்படுத்த உகந்ததாக இருப்பவற்றை கடைகளில் திரட்டி, உதவி தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவி வருகின்றன தொண்டூழியக் குழுக்கள்.

கிட்­டத்­தட்ட ஓராண்டு கால­மாக 52 வயது திரு­மதி மடில்டா ஆந்­தாவ் வீட்­டுக்கு காய்­கறி வாங்­கி­ய­தில்லை.

‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்­கியூ’ என்ற அமைப்­பில் 2020ன் தொடக்­கத்­தில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர்ந்த இவர், விர­ய­மா­கும் காய்கறிகள் உள்ளிட்ட உண­வு­ப் பொருட்களை சமூ­கத்­திற்கு விநி­யோ­கிப்­ப­து­டன் தமது தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­கி­றார். மேலும், அண்டை வீட்­டா­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் உணவுப் பொருட்­க­ளைத் தின­மும் வழங்­கு­கி­றார்.

“வெண்­டைக்­காய் பொரி­யல், கத்­திரிக்­காய் கூட்டு, பாலக் பன்­னீர், என்று பல வகை­யான உண­வு­க­ளைத் தயா­ரிப்­பேன். சற்று சேத­மடைந்த அல்­லது அடுத்த சில நாட்­கள் வைத்­தி­ருக்க முடி­யாது என கடைக்­கா­ரர்­கள் தூக்­கிப் போடும் காய்­க­றி­க­ளின் ருசி­யில் எந்த வேறு­பா­டும் இல்லை. என் குடும்­ப­மும் நானும் ஆரோக்­கி­ய­மா­கவே உள்­ளோம்,” என்­றார் மடில்டா.

கிளைவிரித்த தனிமனிதர் சிந்தனைசெல­வு­க­ளை­யும் கழி­வு­க­ளை­யும் முடிந்த வரை­யில் குறைத்­துக்­கொண்டு வாழும் ‘ஃபீரக­னி­ஸம்’ என்ற சித்­தாந்­தத்தைப் பின்­பற்­றும் திரு டேனி­யல் டே, விர­ய­மா­கும் உண­வைத் தேடிச் சேக­ரித்து உண்பவர். குப்­பைத்­தொட்­டி­களில் இருந்­தும் பயன்­ப­டுத்­தப்­படும் உண­வுப்­பொ­ருட்­களை எடுத்­துக் கழுவி, சமைத்­துப் பயன்­ப­டுத்­து­ப­வர்.

ஒரு­முறை லிட்­டில் இந்­தி­யா­வில் விர­ய­மா­கும் உண­வுப் பொருட்­களைச் சேக­ரிக்கப் போன டேனியல் அங்கு அள­வுக்கு மீறிய உண­வுப் பொருட்­கள் விர­ய­மா­வதை அறிந்­தார். இந்த விர­யத்தை, தேவைப்­ப­டு­வோ­ருக்­கான உத­வி­யாக மாற்ற 2018ல் அவர் திரு­வாட்டி ஜூடி டானு­டன் இணைந்து தொடங்­கி­யது­தான் ‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்­கியூ’ அமைப்பு.

தற்­போது 350 தொண்­டூ­ழி­யர்­­ளை­யும் ஃபேஸ்புக் குழு­வில் கிட்­டத்­தட்ட 15,400 உறுப்­பினர்­க­ளை­யும் கொண்டு நாடா­ளா­விய முறை­யில் செயல்­படும் இந்த அமைப்­பி­னால் பலன் பெறு­வோர் ஏரா­ளம். உணவு விர­ய­மும் பெரு­ம­ளவு தடுக்­கப்­ப­டு­கிறது.

‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்­கியூ’ என்ற அமைப்­பு­டன் ‘ஃபுட் ரெஸ்­கியூ செங்காங்’, நண்­பர்­கள் மூலம் உரு­வாக்­கிய தனிப்­பட்ட தொண்­டூ­ழிய அமைப்பு என்ற பல குழுக்­க­ளு­டன் இணைந்து கடை­க­ளி­லி­ருந்து விர­ய­மா­கும் உணவுப் பொருட்­களைச் சேகரித்து விநி­யோ­கிக்­கும் பணி­யில் இறங்­கி­யுள்­ள திரு­மதி மடில்டா, “உணவும் உணவுப் பொருட்களும் வீணா­வது சிங்கப்­பூ­ரில் ஒரு பெரிய பிரச்­சினை,” என்­று தெரிவித்தார்.

வீணாகும் உணவுப்பொருள் ஒருபுறம் தேவைப்படுவோர் மறுபுறம்

கடந்த 2019ல் 744,000 டன் உணவு விர­யம் ஆனது என்று தேசிய சுற்­றுப்­புற வாரிய புள்­ளி­வி­வ­ரம் சுட்­டு­கிறது. இது ஓராண்டு காலத்­தில் சிங்­கப்­பூர் மக்­கள் அனை­வ­ருக்­கும் அன்­றா­டம் இரண்டு குவளை சோறு வழங்­கு­வ­தற்கு ஈடா­னது. இதில் 18% மட்­டுமே மறு­ப­ய­னீடு செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால், கடந்த 10 ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் உணவுப் பொருள் விர­யம் 20 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

அதே­நே­ரத்­தில் 5.8 மில்­லி­யன் சிங்­கப்­பூர் மக்­கள் தொகை­யில் 10 விழுக்­காட்­டி­னர் தேவை­யான அளவு உண­வில்­லா­மல் வாழ்­கின்­ற­னர்.

கிட்­டத்­தட்ட 350,000 சிங்­கப்­பூர் மக்­கள் உணவு, உடை, உறை­விடம் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய வச­தி­களுக்கு சிர­மப்­ப­டு­கிறது என்­பதை மக்­கள்­தொகை புள்­ளி­வி­வ­ரம் காட்டு­கிறது.

விர­யத்­தைத் தடுக்­க­வும் இல்லா­தோ­ருக்கு உதவி செய்யவும், ஒரே கல்­லில் இரண்டு மாங்­காய் போல ஒரே நேரத்­தில் இரு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண ‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்­கியூ’ அமைப்பு முனை­கிறது.

‘எஸ்ஜி ஃபுட் ரெஸ்­கியூ’ லிட்­டில் இந்தியாவில் வார ­நாட்­களில் பகல், இரவு என இரு வேளை­களில் 32 கடை­களி­லி­ருந்து விர­ய­மா­கும் உண­வுப் பொருட்­க­ளைச் சேக­ரிக்­கிறது.

‘வெஜ்ஜி ரெஸ்­கியூ @ லிட்­டில் இந்­தியா’ பிரிவு செவ்­வாய், வெள்ளி தோறும் காலை 10.30 மணி முதல் நண்­ப­கல் வரை­ செயல்படுகிறது.

‘லிட்­டில் இந்­தியா வெஜ்ஜி கலெக்­‌‌ஷன்’ பிரிவு திங்­கள், வெள்ளி தினங்­களில் இரவு 9 முதல் 10.30 மணி வரை இயங்­கு­கின்­றது.

கடை­களில் திரட்­டும் காய்­க­றி­களை ஈ‌சூன், தெம்­ப­னிஸ், தோ பாயோ பொங்­கோல், டெக் வாய் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள சமூக குளிர்­ப­த­னப் பெட்­டி­களில் கொண்டு சென்று தொண்­டூ­ழி­யர்­கள் வைப்­பார்­கள்.

இப்­பெட்­டி­கள் சமூக மன்­றங்­க­ளால் அமைக்­கப்­பட்­டவை. உணவு விர­ய­மா­வ­தைத் தவிர்க்க மக்­கள் இங்கு உணவுப் பொருட்­களை வைக்­க­லாம். தேவைப்­ப­டு­வோர் இங்­கி­ருந்து எடுத்­துக்­கொள்­ள­லாம்.

அன்றைக்கே பொருட்கள் காலி­யா­கி­வி­டும் என்­றார் வெஜ்ஜி கலெக்­‌‌ஷன் பிரிவை வழி­ந­டத்­தும் தொண்­டூ­ழி­யர் குமாரி லீ யன் லிங், 37.

காய்­க­றி­களை நாள்­தோ­றும் வாங்க இய­லா­தோர் பலர் இருப்­ப­தால் விற்­கப்­ப­டாத காய்­க­றி­களை மனிதநேய அடிப்­ப­டை­யில் தாம் பணி­பு­ரி­யும் கடை கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொடுத்­து­வ­ரு­வ­தாக தேக்கா சந்­தை­யி­லுள்ள ஹஜ்ஜி எம் என் ஷாகுல் ஹமீது காய்­க­றிக் கடை­யில் பணி­யாற்­றும் வி. மணி­கண்­டன், 30 கூறினார்.

நன்­கொ­டை­யா­ளர்­களைப் பாது­காக்­கும் சட்­டம்

விர­யம் என கழிக்­கப்­பட்ட உணவுப் பொருட்­களைச் சமைத்து உண்­ப­வர்­க­ளுக்கு உடல்­கோ­ளாறு ஏதே­னும் ஏற்­பட்­டால் அத­னால் கடைக்­குப் பிரச்­சி­னை­கள் வந்­து­வி­டுமோ என்று சில வாடிக்­கை­யா­ளர்­கள் அச்­சம் தெரி­விப்­ப­தாக சொன்­னார் மடில்டா.

“உண­வின் தரத்தை மதிப்­பிட்ட பின்­னரே அதை விநி­யோ­கம் செய்­கி­றோம். மக்­களும் ஓர் உணவுப் பொருளை உண்­ப­தற்கு உகந்­ததா என்­பதை ஆராய வேண்­டும்,” என்­றார் அவர்.

உணவுப் பொருட்கள் நன்­கொடை வழங்­கு­பவர்­களைப் பாது­காக்­கும் ‘குட் சாம­ரிட்­டன் ஃபுட் டோனே­‌‌ஷன் அக்ட்’ சட்­டத்தை உரு­வாக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லூயிஸ் இங் திட்­ட­மிடு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!