தமிழுக்கு வாய்ப்பு, வளம் கூடட்டும்

சிங்கப்பூரில் வளரும், இளம் தலைமுறையினரிடம் தமிழ்மொழியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க அரசாங்கமும் சமூகமும் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக, அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் ஒரு மாத காலத்துக்கு தமிழ்மொழி விழா கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தமிழ் மொழி விழா 15வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், தமிழ் ஆர்வமும் புழக்கமும் எவ்வளவு தூரம் உள்ளது, தமிழின் தொடர்ச்சியை உறுதிசெய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து இளையர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை தமிழ் முரசு நடத்தியது.

தமிழ்மொழியே தமி­ழர்­க­ளின் அடை­யா­ளம் என்று சிங்­கப்­பூ­ரில் தமிழ் இளை­யர்­கள் கரு­து­கி­றார்­கள். இளை­யர்­களில் 49 விழுக்­காட்­டி­ன­ரின் அன்­றாட புழங்குமொழி­களில் 50 விழுக்­காட்­டுக்­கும் அதிக­மாகத் தமிழ் இடம்­பெ­று­கிறது.

இளை­யர்­களின் தமிழ்ப் புழக்­கம், ஆர்­வம், அக்­கறை குறித்து தமிழ் முரசு 100 பேரி­டம் நடத்­திய ஆய்­வில் இது தெரியவந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் தமிழ் என்­றும் வாழும். எனி­னும், வள­மான எதிர்­கா­லம் அமைய திட்­ட­மிட்டு முயற்சி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­பது பல­ரது கருத்து.

வீடு, வேலை, சமூகச் சூழல்­களில் பெரும்­பா­லும் தமிழ் பயன்­ப­டு­வதை ஆய்வு காட்­டி­யது.

தமி­ழில் பேசு­வ­தும் எழு­து­வ­தும் எல்­லாத் தரப்­பி­ன­ரை­யும் எட்­டு­வதில்லை, பேசி பழக்­கம் இல்­லா­த­தால் பொது­வில் தமி­ழில் பேச கூச்­சம், ஆசி­ரி­யர்­க­ளின் ஊக்­கு­விப்பு இல்­லாமை போன்­றவை தமிழ் பயன்­பாட்­டிற்­கான சில தடை­க­ளாக இருப்­ப­தாக ஆய்வு சுட்­டி­யது.

உயர்­கல்வி நிலைய மாண­வர்­கள் தமி­ழு­டன் இணைந்­தி­ருக்க வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தும் வேலை செய்­யும் நடுத்­தர வய­தி­ன­ருக்கு ஏற்ற தமிழ் நிகழ்ச்­சி­கள் தேவை என்­ப­தும் பலர் முன்­வைத்­தி­ருக்­கும் கருத்து.

சிறார்­க­ளுக்­கான தமிழ்க் கல்வியை மேலும் சுவா­ர­சி­ய­மாக்­கு ­வது, சமூக ஊட­கங்­களில் தமிழ்ப் பதி­வு­களை அதி­க­மாக்­கு­வது, தமிழ் ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­க­ளின் விருப்­பங்­களைப் புரிந்­து­கொள்ள மேலும் முயற்சி எடுப்­பது போன்ற பல்­வேறு கருத்­து­களும் சிந்­த­னை­களும் பகி­ரப்­பட்­டன.

அதோடு இவ்­வாண்­டின் தமிழ் மொழி விழா­வில் எம்­மா­தி­ரி­யான நிகழ்ச்­சி­கள் இடம்­பெற வேண்­டும் என்­ப­தை­யும் சிலர் விவ­ரித்­த­னர்.

40 வய­துக்கு உட்­பட்டவர்­கள் கலந்­து­கொண்ட இவ்வாரம் நடத்தப் பட்ட இந்த ஆய்­வில் பெரும்­பா­லா­னோர் 20 வய­துக்கு மேற்­பட்­டோர்.

இளம் பெற்றோராகவும், அடுத்த தலைவர்களாகவும் தலையெடுத்து வரும் இந்த இளையர்களிடம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் தங்கள் மொழியைத் தங்கள் பிள்ளைகளிடம் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையும் இருப்பது இந்த ஆய்வில் உள்ளங்கை நெல்லிக்கனி யாகத் தெரிந்தது.

வீட்­டில் தமிழ் பேசு­வோர் அதி­க­ரிப்பு

வீட்­டில் தமிழ் பேசு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் இந்த ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆய்­வில் கலந்­து­கொண்ட இளை­யர்­களில் 88 விழுக்­காட்­டி­னர் வீட்­டில் தமிழ் பயன்­ப­டுத்­து­வ­தாக கூறி­னார். 69 விழுக்­காட்­டி­னர் நண்­பர்­க­ளு­டன் தமிழ் பேசு­கி­றார்­கள்.

32 விழுக்­காட்­டி­னர் சமூ­கத்­தில் தமிழ் புழங்­கு­கின்­ற­னர். வேலை­யிடத்­தில் 17 விழுக்­காட்­டி­னர் தமிழ் பேசு­கின்­ற­னர்.

“என் குடும்­பத்­தி­ன­ரு­டன் உணர்வுபூர்­வ­மாக பேசும்­போது தமி­ழில்­தான் பேசு­வேன். தமிழ் பேச வேண்­டும் என்று கட்­டா­ய­மாக நான் பேசு­வ­தில்லை. பாட்டி, பெரி­ய­வர்­கள், உற­வி­னர்­க­ளு­டன் தமி­ழில் பேசும்­போ­து­தான் அணுக்­க­மாக உணர முடி­கிறது,” என்­றார் 29 வயது திரு­மதி பிரி­யா­தேவி.

“உணர்­வு­பூர்­வ­மாக ரசித்­துக் கேட்­கும் பாடல்­களில் வரும் சொற்­க ளின் பொரு­ளைத் தெரிந்­து­கொள்­வ­தில் எனக்கு ஆர்­வம் உண்டு. படங்­கள், பாடல்­கள், உணர்­வு­பூர்­வ­மான உரை­யா­டல்­கள் தமி­ழில் இருக்­கும்­போது அதன் உணர்­வு­நி­லை­யும் புரி­த­லும் வேறு என்­றார் அவர்.

குடும்­பத்­தா­ரு­ட­னும் தமிழ் நண்­பர்­க­ளு­டனும் தமி­ழி­லேயே உரை­யா­டும் 31 வயது வங்கி நிர்­வா­கி­யான திரு சக்­தி­கு­மார், இதன் வழி மற்­ற­வர்­க­ளைத் தமி­ழி­லும் பேச ஊக்­கப்­ப­டுத்­து­கி­றார்.

பாலர் பரு­வத்­தில் ஆர்­வம்

ஏற்­பட வேண்­டும்

தமிழ், புழங்­கும் மொழி­யாக அடுத்­த­டுத்த தலை­மு­றை­களில் நீடிக்க தமிழ்மொழி கற்­றல், கற்­பித்­த­லி­லும் தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்­சி­க­ளி­லும் மேலும் பல மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்ற கருத்தை பல­ரும் முன்­வைத்­த­னர்.

சிறு வய­தி­லேயே தமிழ் கற்­பது கடி­னம் என்ற எண்­ணம் ஏற்­பட்டு விட்­டால், வாழ்­நாள் முழு­வ­தும் தமிழை அவர்­கள் பயன்படுத்த மாட்­டார்­கள். தமி­ழைச் சொல்­லித்­த­ரு­வதை­விட, தமி­ழில் ஆர்­வத்­தைத் தூண்டி விடு­வதே முக்­கி­யம் என்­பது 38 வயது திரு­வாட்டி அய்ஷா இக்­பால் முன்­வைக்­கும் கருத்து.

‘தி ஏபி­சிஸ் ஆஃப் தமிழ் ஃபார் கிட்ஸ்’ (The ABCs of Tamil for Kids) என்ற இணைய வர்த்­த­கத் தளத்தை நடத்தி வரும் அய்ஷா,

சிறார்­க­ளுக்கு பார்த்­தல், கேட்­டல், தொடு­தல் உள்ளிட்ட ஐம்­பு­லன்­க­ளை­யும் ஈர்க்­கும் வளங்­கள் தேவை என்ற அவர், இதில் தான் மேற்­கொண்டு வரும் முயற்­சி­களை விளக்­கி­னார்.

இரு­மொழி அட்­டை­க­ளு­டன் இவர் உரு­வாக்­கி­யுள்ள திறன்­செயலி­யில், சிறார்­கள் உயிர்­பெற்று வரும் விலங்­கு­க­ளு­டன் விளை­யா­ட­லாம்; அசை­யும் பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்தி மகி­ழ­லாம். செய­லி­யில் உள்ள காட்­சிக்கு இணை­யான சொற்­களும் உச்­ச­ரிப்­பு­களும் சிறாரை ஆர்­வத்­து­டன் பங்­கேற்­கத் தூண்­டு­கின்றன.

“இக்­கால குழந்­தை­கள் திறன்­பே­சி­யில் விளை­யாட விரும்­பு­கின்­ற­னர். தொழில்­நுட்­பம் இணைந்த தமிழ் வளங்­கள் மேலும் உரு­வா­க­வேண்­டும்,” என்று வலி­யு­றுத்­தி­னார் அய்ஷா.

பள்­ளிக்­குப் பிறகு தமிழ் பேச...

தமிழ் பேச, எழுத, படிக்க போதிய வாய்ப்­பு­கள் இல்லை என்பது 43 விழுக்­காட்­டி­னர் கரு­து­கின்­ற­னர்.

“பள்­ளிக் காலத்­துக்­குப் பின்­னர் தமிழ் பேசும் வாய்ப்­பு­கள் குறை­வா­கவே உள்­ளன. வீட்­டி­லும் நண்­பர்­க­ளி­ட­மும் தமிழ் பேசாத, வேலை­யி­டத்­தில் தமிழ்ப் புழக்­கம் தேவை­யில்­லாத இளை­யர்­கள் காலப்­போக்­கில் தமிழை முற்­றி­லும் கைவி­டு­கி­றார்­கள்,” என்­றார் சட்­டம் பயி­லும் 23 வயது மாணவி சாம்­பவி ராஜாங்கம்.

சிங்­கப்­பூர் நிர்­வாக பல்­க­லைக்­க­ழ­க நான்­காம் ஆண்டு மாண­வி­யான சாம்­பவி, நாளுக்கு நாள் மாற்­றம் கண்டு வரும் தொழில்­நுட்ப யுகத்­தில் தமிழ்ப் பயன்­பாடு என்­பது சிர­ம­மாக உள்­ளது என்­றார்.

புதிய சொல்­லாக்­கங்­கள் இடம்­பெற்­றா­லும் முறைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் உள்­ளன. ஊட­கங்­கள், கல்வி நிலை­யங்­கள், அர­சாங்­கம், அமைப்­பு­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒரே சொல்­லைப் பயன்­ப­டுத்­து­வது முக்­கி­யம். அப்­போ­து­தான் அந்­தச் சொல் புழக்­கத்­திற்கு வரும் என்­றார் அவர்.

எடுத்­துக்­காட்­டாக, வீடியோ ஆங்­கில வார்த்­தைக்கு ஒளிப்­ப­திவு, ஒளி­நாடா என பல சொற்­கள் இருந்­தா­லும், காணொளி என்­பது இப்­போது பர­வ­லான பயன்­பாட்­டில் உள்­ள­தால் எல்­லா­ரும் அத­னைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.

பல­ருக்குத் தமிழ்ப் புழக்­கம் உயர்­நிலைப் பள்­ளி­யோடு நின்­று­விடு­வ­தா­கக் கூறிய திரு சக்தி குமார், உயர்­கல்வி நிலை­யங்­களில் தாய்மொழிப் பயன்­படுத்த வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்றார்.

தேர்­வுப் பாட­மாக இல்­லா­மல், கலை, இலக்­கி­யம், நட­வ­டிக்­கை­கள் மூலம் தாய்­மொ­ழிப் பயன்­பாட்டு வாய்ப்­பி­ருந்­தால் மொழி­யில் ஆர்­வ­மும் ஈடு­பா­டும் அதி­க­ரிக்­கும் என்­றார் திரு சக்­தி­கு­மார். கணக்­கி­யல் துறை­யில் பட்­டம் பெற்று வங்­கி­யில் பணி­பு­ரி­யும் இவர், தமிழ்மொழி ஆர்­வத்­தால் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமிழ் இலக்­கி­யம் படித்­தவர்.

கலை, இலக்­கி­யம் வழி தமிழ்

தமிழ்ப் பயன்­பாட்­டுக்கு கலை, இலக்­கி­யம் முக்­கி­ய­மாக இருப்­ப­தாக ஆய்­வில் பங்­கேற்ற பல­ரும் கூறி­னர்.

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யங்­களைப் படித்து தமிழ் ஆர்­வம் அதி­க­ரித்­த­தாகக் கூறி­னார் மருத்­துவ துறை மாண­வி­யான 23 வயது இஸ்­ரின் ஃபர்­ஹானா. தேசிய பல்­கலைக் கழகத் தமிழ்ப் பேர­வை­யின் சங்கே முழங்கு போன்ற நிகழ்ச்­சி­கள் தமி­ழைப் புழங்க வாய்ப்­ப­ளிப்­ப­தா­கக் கூறி­னார். பள்­ளிக் காலத்­தி­லி­ருந்து கலா­சார நிகழ்ச்­சி­கள் தமி­ழோடு இருக்க உத­வு­வ­தாக அவர் கூறி­னார்.

நாட­கம் எழு­து­வ­தன் மூலம் தமது தமிழ்மொழி ஆற்­றல் வளர்­வதா­கக் கூறி­னார் 34 வயது திரு அமீன். ஊடகத்துறை, திரைப்படத் துறையில் மேலும் உயர, தமிழ் ஊடக அனுபவம் உதவியதாக அவர் கூறினார். அவர் தற்போது தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.

சமூக ஊட­கங்­களில் தமிழ்

இணை­யத்­தில் தமிழ்ப் பயன்­பாடு அதி­க­மாக இருப்­ப­தைப் போல் தோன்­றி­னா­லும் 100 பேரில் ஒரு­வர்­தான் சமூக ஊட­கத்­தில் தமிழைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.

“சமூ­கப் பிரச்­சி­னை­கள், தமிழ்க் கலைப்­ப­டைப்­பு­கள் பற்­றிய கலந்­து­ரை­யா­டல் பக்­கங்­கள் தமி­ழில் இடம்­பெற வேண்­டும். ‘டிக் டாக்’ போன்ற புதுத் தளங்­களில் உள்­ளூர் தமிழ்ப் பதி­வு­கள் இருந்­தால் இளை­யர்­களைச் சென்­ற­டை­யும்,” என்­றார் திரு­மதி பிரியாதேவி.

‘தமிழ் டேல்ஸ்’ என்ற இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்தை விரும்பி பார்ப்­பதாகக் கூறிய பிரியா, தமிழ் வார்த்­தை­க­ளின் தோற்­றம், அர்த்­தம் குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­க­ளைப் படிக்க பிடிக்­கும் என்­றார்.

தமிழில் அதி­க­மான சமூக ஊடகத்தளங்­கள் இல்லை என்­றும் இளை­யர்­களை ஈர்க்­கும் வகை­யில் சமூக ஊட­கங்­களில் அதி­க­மான தமிழ்ப் பதி­வு­கள் வேண்­டும் என்­றும் கருத்­து­ரைத்­தார் அவர்.

தமி­ழில் மீம்ஸ் இளை­ய­ரைச் சென்­ற­டை­யும் என்ற 27 வயது திவ்­ய­லஷ்மி கணே­சன், அதி­கா­ர­பூர்­வ­மற்ற, கட்­டுப்­பா­டு­க­ளற்ற தளங்­களில் தமிழ்ப் பயன்­பாடு இடம்­பெறு­வது முக்­கி­யம் என்­றார்.

இன்ஸ்­ட­கி­ராம் போன்ற தளங்­களில், நகைச்­சு­வைத் தமிழை ரசிக்க ‘யெஸ்­கெக்’ பக்­கம் போன்ற தமிழ்ப் பக்­கங்­கள் உரு­வா­க்க­லாம்.

இயல்­பான உரை­யா­டல்­கள், நகைச்­சுவை, கிசு­கி­சுப்­பு­கள், ரகசி­யங்­கள், குறை­கூ­று­தல், புலம்­பு­தல் இப்­படி மன­துக்கு நெருக்­க­மான விஷ­யங்­கள் எந்த மொழி­யில் இருக்­கி­றதோ அந்த மொழி­யின் புழக்­கம் அதி­க­மாக இருக்­கும். எனவே அதற்கு வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும் என்­பது சில­ரின் கருத்து.

மொழிபெயர்ப்பு மூலம்

வள­ரும் மொழி

சிங்­கப்­பூ­ரில் மொழிபெயர்ப்­புத் தேவை இருப்­ப­தால் தமிழ்மொழி­யைக் கற்­றுக்­கொள்­ள­வும் புழங்­க­வும் அதிக வாய்ப்பு ஏற்­ப­டு­வ­தாக சிலர் கருத்­து­ரைத்­த­னர்.

இந்­தியப் பணிப்­பெண்­க­ளுக்கு மேம்­பாட்டு வகுப்­பு­கள் நடத்­தும் ‘வுமன் ஆஃப் சக்தி’ குழு நிறு­வ­னர்­களில் ஒரு­வர் 30 வயது வைஷ்ணவி நாயுடு.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் கொவிட் கிரு­மித்­தொற்றுப் பர­வல் உச்­சக்­கட்­டத்­தில் இருந்த சம­யத்­தில் சுதா­தா­ரப் பரா­ம­ரிப்புத் துறை முன்களப் பணியாளர்களுடன் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தொடர்­பு­கொள்ளப் பயன்­படும் இணை­யத்­தளம் ஒன்றை இளை­யர்­கள் சிலர் உரு­வாக்­கி­னர். ஆங்­கில மருத்­துவ வார்த்­தை­களை இவர்­கள் தமி­ழில் மொழிபெயர்த்­த­னர்.

தமி­ழர்­க­ளி­டம் தொடர்­பு­கொள்­வதற்கு தமிழ்மொழி எவ்­வ­ளவு முக்கி­யம் என்­பதை கொவிட்-19 சூழல் உணர்த்­தி­யது என்­றார் வைஷ்ணவி.

பணி­யி­டத்­தில் பொதுமக்­க­ளுக்­காக சில­வற்றைத் தமி­ழில் மொழி பெயர்க்­கும் உமா மகேஸ்வரி, இதன் மூலம் தமது தமிழ் வளம் அதி­க­ரிப்­ப­தா­கக் கூறி­னார்.

வேலை­யி­டத்­தில் அவ்­வப்­போது சிறு சிறு மொழி ெயர்ப்­பு­க­ளைச் செய்­வ­தாக ஆய்­வில் பங்­கேற்ற மேலும் சிலர் கூறி­னர். இது அவர்­களது தமிழ்ப் பயன்­பாட்டை அதி­க­ரிப்­ப­து­டன் தமிழ்மொழிக்கு இருக்­கும் அங்­கீ­கா­ரம் உயர்வு உணர்ச்­சி­யைத் தரு­வ­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!