ஒரு கனவு, ஒன்பது மாதப் பயணம்

ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருக்கும் 20க்கு மேற்பட்ட நாடுகளுக்கு விமானம் தவிர்த்த பயணம் மேற்கொண்டார்.

பல இன்னல்களை எதிர்கொண்டாலும் அறிமுகமே இல்லாத பலரது உதவி, சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் குளிரில் நடுங்கியபடி கழித்த இரவு, சிறை பிடிக்கப்பட்ட திகில் சம்பவம் என தமது 9 மாத பயண அனுபவங்களை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் கணேஷ்.

சாக­சப் பய­ணங்­களை சிறு வயது முதலே தொலைக்­காட்­சி­களில் பார்த்து ஆர்­வத்தை வளர்த்­துக்­கொண்ட செல்­வ­க­ணேஷமூர்த்தி பால­கி­ருஷ்­ணன், தேசிய சேவை முடித்­த­தும் வித்­தி­யா­ச­மான தொலை­தூ­ரப் பயணம் மேற்­கொள்­ளத் தயா­ரா­னார்.

ஆசியா, மத்­திய ஆசியா, மத்­திய கிழக்கு, வடஅமெ­ரிக்கா ஆகிய கண்­டங்­களில் இருக்­கும் மொத்­தம் 23 நாடு­களை கடக்க பேருந்து, ரயில் பய­ணங்­கள் மட்­டு­மின்றி, நடைப் பய­ணம், வழி­யில் செல்­லும் வாக­னங்­களில் உதவி கேட்டு ஏறிச் செல்­லு­தல் எனப் பய­ணம் செய்த கணேஷ் கன­டா­வின் மாண்ட்ரியலுக்கு 9 மாதங்­களில் சென்று சேர்ந்­தார். இந்­தப் பய­ணத்தை மேற்­கொண்­ட­போது அவ­ருக்கு வயது 20.

"இத்­தனை நாடு­க­ளைக் கடந்த பய­ணம் விமா­னப் பய­ண­மாக இருந்­தி­ருந்­தால் பல­வித மனி­தர்­க­ளு­ட­னான சந்­திப்பு, அவர்­க­ளது கலா­சா­ரம் பற்றி புரிந்­து­கொள்­ளு­தல் போன்­றவை வாய்க்­கா­மல் போயி­ருக்­கும். ஆனால், புது­வித கலா­சா­ரங்­க­ளைப் பற்­றித் தெரிந்­து­கொள்­வது, சுவா­ர­சி­ய­மான மனி­தர்­களை சந்­திப்­பது, அவர்­க­ளது வாழ்க்­கை­ மு­றை­க­ளைப்பற்­றித் தெரிந்து கொள்­வது என இவ்­வித பய­ணத்­தில் பல அம்­சங்­கள் என அனைத்­தை­யும் முழு­மை­யாக அனு­ப­விக்க வேண்­டும் என விரும்­பி­னேன்," என்­றார் கணேஷ்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கன­டா­விற்கு அவர் மேற்­கொண்ட 9 மாத பய­ணத்­திற்கு மொத்­தம் $10,000 செலவு செய்­தி­ருக்­கி­றார்.

 

தின­சரி செல­வுக்கு $25 மட்­டும்

பய­ணம், உணவு மற்­றும் தங்­கு­மி­டம் உள்­ளிட்ட அனைத்து செல­வு­க­ளுக்­கும் தின­சரி $25 மட்­டுமே ஒதுக்கி வைத்­தி­ருந்­தார் கணேஷ். $25ல் சொகு­சான நட்­சத்­திர

விடு­தி­களில் தங்­கு­வதோ, பெரிய உண­வ­கங்­களில் உண்­பதோ முடி­யாத காரி­யம்.

இந்த 9 மாதங்­களில் கணேஷ், வீதி­களில் தூங்கி, மலி­வான பேக் பேக்­கர் ஹாஸ்­டல் அல்­லது உள்­ளூர்­வா­சி­கள் வீடு­களில் இல­வ­ச­மாகத் தங்கி செல­வு­களை கட்­டுக்­குள் வைத்­துக்­கொண்­டார்.

பொது­வாக தெரி­யாத இடங்­களில் பய­ணம் செய்­யும்­போது பாது­காப்பு கருதி முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு பய­ணம் மேற்­கொள்­வது வழக்­கம்.

ஆனால், கணேஷ் தன்­னு­டைய இந்­தப் பய­ணத்­துக்­காக அதி­கம் திட்­ட­மி­ட­வில்­லை­யாம். போகி­ற­போக்­கில் சூழ­லுக்­கேற்ப தன்­னிச்­சை­யாக முடி­வு­களை எடுத்து பய­ணத்­தைத் தொடர்ந்­தி­ருக்­கி­றார்.

 

துணிச்­ச­லுடன் வட­கொ­ரி­யா­வில்

பய­ணத்­திற்­கி­டையே, திடீ­ரென துணிச்­ச­லாக முடி­வெ­டுத்து வட­கொ­ரி­யா­விற்­குச் சென்­றார் கணேஷ்.

ஆனால், அவர் அங்கு இருந்த காலத்­தில், வெளி உல­கத்­து­டன் இருந்த தொடர்பு முழு­மை­யாக துண்­டிக்­கப்­பட்டு இருந்­தது. வட கொரி­யா­வி­லி­ருந்து சீனா­வுக்கு சென்று சேர்ந்­த­தும் வட­கொ­ரி­யா­வில் தமக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­களை சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டார் அவர்.

வட கொரி­யா­வில் 'பாப்' கலா­சா­ரம் 70களின் ஒரு பின்­ன­டை­வாக இருப்­ப­தை­யும், அது பொது­வாக தேச­பக்­தியை பறை­சாற்­றும் வகை­யில் இருப்­ப­தா­க­வும் தமது பதி­வு­களில் குறிப்­பிட்­டி­ருந்­தார். வட­கொ­ரியா போன்ற நாடு­களில் வாழும் மக்­க­ளின் நிலை, வாழ்க்கை முறை­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அவ­ரது சமூக ஊட­கப் பதி­வு­கள் அமைந்­தன.

 

மனம் கவர்ந்த கிர்­கிஸ்­தான்

அழ­கிய நிலப்­ப­ரப்பு, தெற்­கில் பனி மூடிய மலை­கள், வடக்­கில் புல்­வெ­ளி­கள், கனி­வான மக்­கள், மலி­வான விலை என பல நல்ல அம்­சங்­க­ளு­டன் தம் மனங்கவர்ந்த நாடாக கிர்­கிஸ்­தான் அமைந்­தது என்­றார் கணேஷ். ரஷ்ய மொழி தெரி­யும் என்­ப­தால் கிர்­கிஸ்­தா­னில் மக்­க­ளு­டன் உரை­யா­டு­வது அவ­ருக்கு எளி­தாக இருந்­தது.

ரஷ்ய மொழி­யு­டன் தமிழ், ஆங்­கி­லம், பிரெஞ்சு, பார்சி ஆகிய மொழி­க­ளி­லும் புலமை வாய்ந்­த­வர் இவர்.

ஒரு நாட்டை பற்­றிய புரி­த­லுக்­கும் அம்­மக்­க­ளு­ட­னான உரை­யா­டல்­க­ளுக்­கும் மொழி முட்­டுக்­கட்­டை­யாக இருக்­க­லாம். அதைக் களை­யும் நோக்­கில் பல மொழி­க­ளைக் கற்­ப­தில் ஆர்­வம் செலுத்தி வரு­கி­றார் கணேஷ்.

தனது பய­ணங்­களில் தனக்கு மிக­வும் பிடித்­தது தாம் சந்­திக்­கும் சுவா­ர­சி­ய­மான மனி­தர்­கள்­தான் என குறிப்­பிட்ட கணேஷ், இது­வரை சுமார் 40க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்­குச் சென்­றுள்­ளார்.

 

கலங்க வைத்த கருணை உள்­ளம்

உஸ்­பெ­கிஸ்­தா­னில் புகாரா எனும் பகு­தி­யின் கடை வீதி­யில் இரவு நேரத்­தில் கணேஷ் தூங்­கிக் கொண்­டி­ருந்­த­போது ஒரு ரஷ்ய பெண்­மணி (இடது படம்) அவரை எழுப்பி தனது வீட்­டில் வந்து தங்­கும்­படி அழைத்­தா­ராம்.

தம்­மு­டைய நாட்­டுக்கு விருந்­தி­ன­ராக வந்த ஒரு­வர் இப்­படி வீதி­யில் படுத்­து­றங்­கு­வ­தைத் தம்­மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அந்த மாது கூறி­ய­தாக நினைவு கூர்ந்­தார் கணேஷ். இதுபோன்ற கருணை உள்­ளம் கொண்ட பல மனி­தர்­களை தனது பய­ணங்­களில் சந்­திக்­கும் வாய்ப்பு கிடைத்­த­தாக அவர் கூறி­னார்.

"நான் ஈரா­னுக்­குச் சென்ற சம­யத்­தில் அந்­நாடு பொரு­ளா­தார ரீதி­யில் பேர­ழி­வைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருந்­த­போ­தும், அங்­குள்ள மக்­கள் ஒரு நாளைக்கு மூன்று முறை எனக்கு மிக­வும் விலை­ உயர்ந்த நல்ல உணவைச் சமைத்து கொடுத்­த­னர். நான் கிர்­கி­ஸில் உள்ள கிரா­மங்­க­ளுக்­குச் சென்­ற­போது, அங்­குள்ள கடைக்­கா­ரர்­கள் எனக்கு பிஸ்­கட், கைக்­குட்­டை­கள் போன்­ற­வற்றைப் பரி­ச­ளித்­த­னர்," என்று பல­த­ரப்­பட்ட மக்­க­ளின் அன்பு பரி­மா­றல்­கள் பற்­றிக் குறிப்­பிட்­டார் கணேஷ்.

 

வீட்­டி­லி­ருந்து வெளி­யேற விடா­மல் சிறை... திகில் சம்­ப­வம்

கணே­ஷின் பயண அனு­ப­வங்­கள் அனைத்­தும் சுமூ­க­மா­ன­வை­யாக அமைந்­து­வி­ட­வில்லை. பல நல்ல மனி­தர்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் பல அபா­ய­மிக்க அனு­ப­வங்­க­ளை­யும் ஆபத்­தான நபர்­க­ளை­யும்­கூட அவர் எதிர்­கொள்ள நேரிட்­டது.

தஜி­கிஸ்­தா­னில் ஒரு­வ­ரது வீட்­டில் தங்­கி­யி­ருந்தபோது, அந்த வீட்­டின் உரி­மை­யா­ளர் தன்னை அறைக்­குள் வைத்து பூட்­டி­விட்டு

வெளி­யே­விட மறுத்­த­து­டன், கணேஷ் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டா­த­படி கத­வுக்கு வெளியே காவ­லுக்­கும் படுத்­தி­ருந்­தா­ராம்.

இரவு நேரத்­தில் வீட்டு உரி­மை­யா­ளர் ஆழ்ந்த உறக்­கத்­தில் இருந்த நேரத்­தில் அறை­யின் சன்­னல் வழி­யாக வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி தப்­பித்­த­தாக தமது திகில் அனு­ப­வத்­தை­யும் பதிவு செய்­தார் கணேஷ்.

தம்­மு­டைய வீட்­டில் தங்­கா­மல் வேறு ஒரு­வ­ரின் வீட்­டுக்­குச் சென்று கணேஷ் தங்­கி­வி­டக்­கூ­டும் என்­றும் தம்­மு­டைய வரு­மா­னம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்ற அச்­சத்­தால் அந்த நபர் இவ்­வாறு நடந்து கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட கணேஷ், இத்­த­கைய சில கசப்­பான அனு­ப­வங்­கள் தம்­மு­டைய பயண ஆர்­வத்தை சற்­றும்

அசைத்­து­வி­ட­வில்லை என்­றார்.

வியட்­னா­முக்­குச் சென்­றி­ருந்­த­போது அங்­குள்ள ஒரு ஆங்­கில ஆசி­ரி­ய­ரு­டன் தங்­கி­யி­ருந்­தார் கணேஷ். அந்த ஆசி­ரி­ய­ரின் மாண­வர்­கள் ஹூ நகரை கணே­ஷுக்கு சுற்­றிக்­காட்­டி­னர். அப்­போது மாண­வர்­க­ளின் ஆங்­கில மொழி ஆற்­றலை மேம்­ப­டுத்த சில பயிற்­சி­கள் அளித்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார் கணேஷ்.

 

உலக அதி­ச­யத்­தில் மறக்க இய­லாத நீண்ட இரவு

சீனா­வின் பெய்­ஜிங் நக­ருக்­குச் சென்­றி­ருந்­த­போது கணே­ஷுக்கு தங்­கு­வ­தற்கு ஏற்ற இடம் கிடைக்­க­வில்­லை­யாம். அந்த நக­ரி­லி­ருந்து கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரப் பய­ண தூரத்தில் இருக்­கும் சீனப் பெருஞ்­சு­வ­ருக்கு அரு­கில் முகா­மிட்டு அந்த இர­வைக் கழித்­தார் கணேஷ்.

ஆள­ர­வ­மற்ற அந்­தப் பகு­தி­யில் அப்­போ­தைய வெப்­ப­நிலை -20 டிகிரி செல்­சி­யஸ். வீசிய பலத்த காற்று குளிரை மேலும் அதி­க­ரித்­தது. கொடு­மை­யான தனிமை. தாக­மாக இருந்­த­போ­தும் தண்­ணீர்­கூட அருந்­த­மு­டி­ய­வில்லை. அவர் கொண்டு சென்ற தண்­ணீர் போத்­த­லி­லேயே உறைந்து போயி­ருந்­த­தாம்.

"குளி­ரைத் தாங்­கும் விதத்­தில் கன­மான ஆடை­கள் அணிந்­தி­ருந்­தா­லும் சமா­ளிக்க முடி­ய­வில்லை. குளி­ரால் நடுங்­கி­ய­வாறே படுத்

­தி­ருந்­தேன். நான் அங்கு மூட்­டிய தீ சிறி­த­ளவு இத­மான வெப்­ப­தைத் தந்­தது. இரவு முழு­வ­தும் தூங்க முடி­ய­வில்லை. இருந்­தா­லும் அந்த நீண்ட இரவு என் வாழ்க்­கை­யில் மறக்­க­மு­டி­யாத இரவு. உல­கின் ஏழு அதி­ச­யங்­களில் ஒன்­றான சீன பெருஞ்­சு­வ­ரில் ஒரு இரவு தங்­கும் வாய்ப்பு அனை­வ­ருக்­கும்

கிடைத்­து­வி­டாது." என்­றார்.

தனது பய­ணத்தை 31 ஆகஸ்ட் 2019 அன்று நிறைவு செய்­தார். திறந்த மன­து­டன், வரம்­பு­களை உடைத்­தெ­றிந்து முழு­மை­யான அனு­ப­வத்தை இந்­தப் பய­ணத்­தின் போது பெற்­றி­ருக்­கி­றார் கணேஷ்.

தற்­போது கன­டா­வில் பட்­டப் படிப்பு பயின்று வரும் கணேஷ் படிப்பை தொடர சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மீண்­டும் கன­டா­விற்கு சென்­றார்.

கொரோனா தொற்­றுப் பர­வல் குறைந்து பய­ணங்­கள் சாத்­தி­யப்­ ப­டும்­போது கியூபா, வடஆப்பி­ரிக்கா, மேற்கு ஆப்பி­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு செல்­ல­வும் மாண்ட்ரியலில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு விமா­னம் தவிர்த்த பய­ணம் மேற்­கொள்­ள­வும் திட்­ட­மிட்­டுள்­ளார் கணேஷ்.

"சுதந்­தி­ர­மாக உலகைச் சுற்றி பய­ணம் செய்ய கணேஷ் விரும்­பி­ய­தற்­குத் தடை­யாக இருக்­கக்­ கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தோம். அவர் பல நாடு­க­ளுக்குச் சென்று பலரைச் சந்­தித்­தால்­தான் நிறைய கற்­றுக்­கொள்ள முடி­யும். தின­மும் எங்­க­ளு­டன் தொலை­பேசி வழி தொடர்­பு­கொள்ள வேண்­டும் என்ற அன்­புக் கட்­டளை மட்­டும் விதித்­தோம். சில சம­யங்­களில் அது சாத்­தி­ய­மில்­லா­த­போது அடுத்து அவர் பேசிய பிறகே மனம் அமை­தி­ய­டை­யும்," என்­றார் கணே­ஷின் தந்தை திரு பால­கி­ருஷ்­ணன்

பாவா­டை­சாமி.

தனியாகப் பயணத்தைத் தொடங்கிய கணேஷுக்கு தம் மனதில் தோன்றிய எண்ணங்களையும் சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்விதமாக அமைந்த குறிப்புகள் புத்தகமாக உருவெடுத்தன.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க 11 நாட்கள் மேற்கொண்ட கப்பல் பயணத்தின்போது புத்தகத்தை எழுதத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட கணேஷ், 'The Long Direction' என்ற அந்தப் புத்தகத்தை 2018ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!