வயிற்றுப் பிழைப்புக்குப் போன இடத்தில் உயிரைப் பறிகொடுக்கும் ஊழியர்கள்

நச்சுவாயுவை நுகர்­தல் அல்­லது பூமிக்­க­டி­யில் உள்ள சாக்­க­டை­களில் தவறி விழு­வது போன்­ற­வற்­றால் கடந்த டிசம்­பருடன் முடிவடைந்த ஐந்தாண்­டு­களில் இந்­தி­யா­வில் 340 பேர் இறந்­த­னர்.

திரு பெத்­தண்ணா போன்ற ஆயி­ர­க்க­ணக்­கா­னோ­ருக்கு கை, கால்­களில் வெட்­டுக்காயங்­கள், தீராத நாள்­பட்ட உடல் வலி, மூச்­சுத் திண­றல் போன்­றவை ஏற்­ப­டு­வது சாதாரணம்.

“இதில் எது மிகுந்த மன­வ­லி­யைத் தரு­கிறது என்­றால் நாங்­கள் அனு­ப­விக்­கும் அவ­மா­னம்­தான்,” என்று குமு­று­கி­றார் திரு பெத்­தண்ணா.

வசை­பா­டு­வதும் அடிப்பதும் அவருக்கு அவ்வப்போது சாதாரண மாக நிகழும் சம்பவங்கள். “நான் சார்ந்திருக்கும் சாதி­யி­னரை மக்­களில் சிலர் அவ­மா­னப்ப­டுத்­து­வது உண்டு. பேருந்­தில் ஏறி­னால், சிலர் என்னை உட்­காரவிட­மாட்­டார்­கள். ஒரு­வேளை என் மீது துர்­நாற்­றம் வீசு­கி­றதோ என்­னவோ.

“சிலர் குடிக்க, கை கழுவ தண்­ணீர் தர­மாட்­டார்­கள். உண்மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால், இவை எல்லாம் மன­துக்கு மிகுந்த வலி­யைக் கொடுக்­கின்றன. இருப்பினும், வேதனையை வெளிக்காட்டாமல் எல்­லா­வற்­றை­யும் சிரித்த முகத்­து­ட­னேயே தாங்­கிக்ெகாள்­வேன்,

“ஆனால் அன்­றைய பொழு­தின் முடி­வில் மிகுந்த மன­உ­ளைச்­சலுக்கு ஆளா­வேன்,” என்று அழாத குறை­யா­கக் கூறு­கி­றார் இவர்.

மனிதக்கழி­வு­களை மனி­தர்­களே அகற்­று­வது நாக­ரிக இந்­தி­யா­வின் மிகப் பெரிய வெட்­கக்­கேடு. இது ஒரு ­வ­கை­யான அடி­மைத்­த­னம் என்று கூறி இதை இந்­திய அரசு 1993ஆம் ஆண்டு தடை செய்­தது. அப்போது முதல் மனிதக்கழி­வு­களை அகற்ற மனி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது குற்­ற­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இருந்­தும், ஏழ்மை கார­ண­மா­க­வும் தாழ்ந்த சாதி­யி­னர் என்­ப­தாலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் இன்­ன­மும் இந்த வேலையைச் செய்து வருகின்றனர்.

இவர்­க­ளின் படிப்­ப­றி­வின்மை, பேச்­சு­வார்த்தை மூலம் நியா­ய­மான சம்­ப­ளத்தை நிர்­ண­யிக்க முடி­யாத நிலை, சமு­தா­யத்­தில் அபா­யத்தை சந்­திக்­கக்­கூ­டிய நிலை, ஏழ்மை, சட்ட மேலாண்மை இல்­லாத நிலை போன்­ற­வற்­றால் இது­போன்ற மிக மோச­மான, ஆபத்­து­கள் நிறைந்த துப்புரவுப் பணி­கள் தற்­கா­லிக அடிப்­ ப­டை­யில் வேலை இல்­லா­தோ­ரி­டம் வழங்­கப்­ப­டு­கின்றன.

இது­போல் கண்­கா­ணிப்பு முறை ஏதும் இல்­லா­மல் சுயேச்­சை­யா­கப் பணி­பு­ரி­வோ­ருக்கு எவ்­வி­தப் பாது­காப்­பும் இல்லை. கழி­வு­நீர் குழாயை சுத்­தம் செய்து வரும் திரு நாரா­ய­ண­சாமி முனி­யப்பா, 66, இருபது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே பணி­யில் ஈடு­பட்ட தமது 25 வயது மகனை இழந்­தார்.

“பூமிக்­க­டி­யில் உள்ள கழிவுநீர் சாக்­க­டைக்­குள் இறங்க எனது மகனை நக­ராட்சி குத்­த­கைதா­ரர் கட்டா­யப்­ப­டுத்­தி­னார். சாக்கடையில் இருந்து கிளம்பிய நச்சுவாயு­வின் துர்­நாற்­றத்­தால் என் மகனுக்கு மயக்­கம் ஏற்­பட்டு அங்கேயே விழுந்து­விட்­டான். உட­னி­ருந்­த­வர் மீட்­ப­தற்­குள் அவன் இறந்­து­விட்­டான்,” என்று நடந்ததை விவரித்த நாரா­ய­ண­சாமி, மகன் இறந்த கோலத்தை தம்­மால் இன்று வரை மறக்க முடி­யவில்லை என்­றார்.

இந்­தி­யா­வில் திறந்தவெளி­யில் மலம் கழிப்­பதை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரும் நோக்­கில் ‘நாட்டை சுத்­தம் செய்­வோம்’ என்ற நாட­ளா­விய இயக்­கம் 2019ஆம் ஆண்டு விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது. அதன் ஓர் அங்­க­மாக வசதிகுைறந்த பகு­தி­களில் வாழும் மக்­க­ளின் வீடுகளில் கழி­வ­றை­கள் கட்டி இயந்­திர முறை­யில் கழி­வு­களை அகற்­றும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்த நிலை­யி­லும் கழி­வு­நீர்க் குழாய்­க­ளி­லும் கழி­வு­நீர்த் தொட்­டி­க­ளி­லும் தவறி விழுந்து 110 பேர் இறந்­த­னர். இதில் கடந்த பத்­தாண்­டு­களில் வாரம் ஒன்­றுக்கு ஒரு­வர் அல்­லது இரு­வர் கழி­வு­நீர் வாயு துர்­நாற்­றம், அல்­லது பூமிக்­க­டி­யில் உள்ள கழி­வு­நீர் சாக்­க­டை­களில் விழுந்­த­தன் கார­ண­மாக உயிரிழந்த தாக தகவல்கள் கூறுகின்றன.

கடு­மையான சட்ட விதி­மு­றை­கள் இருந்­த­போ­தி­லும் கழி­வு­நீர் அகற்­று­வோர் உயிரிழந்தது பற்றி போலிஸ் புகார் கொடுப்­பது இந்­தி­யா­வில் அரி­தா­கவே உள்­ளது.

இத­னால், பூமிக்­க­டி­யில் உள்ள சாக்­க­டை­களில் பணி­யாளர்­களை சட்­ட­வி­ரோ­த­மாக வேலை செய்யச் சொல்லும் முத­லா­ளி­கள் எவ்­விதத் தண்­ட­னை­யு­மின்றி தப்­பிக்­கின்­ற­னர்.

இதைச் சரி­செய்ய இவர்­க­ளுக்­கென மீட்­சித் தொகுப்­புத் தொகை, திறன் பயிற்­சித் திட்­டங்­கள் போன்­ற­வற்றை இந்­திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு அறி­மு­கம் செய்­தது.

ஒரு­முறை வழங்­கப்­படும் ரூபாய் 40,000 நிதி­யு­த­வி­யு­டன் குறைந்த வட்­டிக் கட­னாக 1.5 மில்­லி­யன் ரூபா­யும் இவர்­க­ளுக்கு வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், கழி­வு­நீர்த் தொட்டி, சாக்­க­டை­கள் போன்­ற­வற்றை இயந்­தி­ரங்­கள் மூலம் சுத்­தம் செய்ய நாட்­டின் 243 நக­ரங்­களில் இம்­மாத இறு­திக்­குள் நடை­மு­றைப்­ப­டுத்­தும் திட்­ட­ம் ஒன்றும் தொடங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இவை யாவும் அடி­மட்­டத்­தில் எந்தவொரு பெரிய தாக்­கத்தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!