கொரோனாவுடன் வாழப் பழகுதல்

உலகில் நிரந்தர கிருமித்தொற்றாக கொவிட்-19 இடம்பிடிக்கப் போகிறது. இந்தக் கொள்ளைநோய் சூழலில்தான் மக்கள் வாழ்க்கை நடத்த வேண்டும். 2019க்கு முன்பிருந்த வாழ்க்கை நடைமுறைகள் இனிமேல் இருக்காது. பள்ளிகள், வேலையிடங்கள், பொழுதுபோக்குகள் என மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மாற்றத்துக்கு உட்பட்டே இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வருங்­கா­லத்­தில் விடு­மு­றைக்கு வெளி­நாட்­டுக்­குச் செல்ல ஆயத்­த­மா­கும்­போது, காலை­யில் லேசான சளி இருப்­ப­து­ போ­லி­ருந்­தால், விமான நிலை­யம் செல்­லு­முன் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்.

காலை உணவை முடித்­த­தும் கொவிட்-19 இருக்­கி­றதா என சுய­மாக பரி­சோ­தனை செய்து, கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறுதி செய்ய வேண்­டும். பிறகு உடன் பய­ணம் செய்­ப­வர்­க­ளை­யும் பரி­சோ­தனை செய்து எவ­ருக்­கும் தொற்று இல்லை என்­பதை உறுதி செய்ய வேண்­டும். விமான நிலை­யத்­துக்கு செல்­லு­முன் முன்அனு­மதி முறை­யில் அனை­வ­ரின் பரி­சோ­தனை முடி­வு­க­ளை­யும் சமர்­பித்து, கூடு­த­லாக மேலும் ஒரு தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டு­மா­னால் அதை­யும் போட்ட பிறகே விமா­னப் பய­ணத்தை தொடங்­க­லாம்.

விமா­னத்­தில் அம­ரும்­போது மலிவு விலை டிக்­கெட் பெற்­றி­ருந்­தா­லும் உங்­கள் இருக்­கைக்­கும் மற்ற இருக்­கை­க­ளுக்­கும் இடை­வெளி எப்­போ­தும் போல் இல்­லா­மல் அதி­க­மா­கவே இருப்­ப­தைக் கவ­னிப்­பீர்­கள்.

பல நிபந்­த­னை­க­ளை­யும் ஏற்று பல­வி­த­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட பின்­னரே வருங்­கா­லத்­தில் பய­ணம் இருக்­கும் என்று தொற்று நோய்­கள், பொதுச் சுகா­தா­ரம், கல்வி, பய­ணத்­துறை ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்கை முறை, விளை­யாட்­டில் இருந்து, கல்வி கற்­பது, வேலை செய்­வது, ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் பழ­கு­வது வரை அனைத்­தி­லும் அடிப்­படை மாற்­றங்­கள் ஏற்­படும் சாத்­தி­யம் தெரி­கிறது.

வருங்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய இந்த வாழ்க்கை முறை மாற்­றத்­தில் தெளி­வின்­மை­யும் நிச்­ச­ய­மற்­ற­தன்­மை­யும் நிறைந்­தி­ருக்­கும். இதை ஏற்­றுக்­கொண்டு சூழ­லுக்கு ஏற்ப நம்மை சரி­செய்து ெகாண்டு வாழ்­வது சவால்­மிக்க ஒன்று. அதற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­களை தயார்ப்­ப­டுத்­திக் ெகாள்ள வேண்­டும்.

இது­பற்றி அண்­மை­யில் உரை­யாற்­றிய பிர­த­மர் லீ சியன் லூங் இந்­தக் கிருமி ஒழி­யும் என தாம் நம்­ப­வில்லை என்­றார். அதே­நே­ரத்­தில் இக்­கி­ருமி தொடர்ந்து ஆட்­டிப் படைக்­கும் என்­றும் அவர் நினைக்­க­வில்லை. கிரு­மி­யோடு வாழப் பழ­கும் புதிய வழக்­க­நிலை பற்றி விளக்­கிய பிர­த­மர் லீ, அவ்­வப்­போது சிறிய அள­வி­லும் பெரி­தா­க­வும் கிரு­மிப் பர­வலை ஏற்­கத் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றார்.

ஓராண்­டின் உயி­ரி­ழப்­பைப் பொறுத்து பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­கள் அமை­யும் என்­பது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்ளி, உலக சுகா­தார பிரி­வின் இணைப் பேரா­சி­ரி­யர் ஜெரமி லிம் கூறும் கருத்து.

கொள்­ளை­நோய்க்கு எதி­ராக, அர­சாங்­கங்­கள் தேவைப்­ப­டும்­போது மட்­டும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கும் போக்கை கைவிட்டு, பொது­வாக சில நட­வ­டிக்­கை­களை எப்­பொ­ழு­தும் மேற்­கொள்­வது சிறந்­தது என்று உலக சுகா­தார அமைப்­பின் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான டாக்­டர் ஆலி­வர் மோர்­கன் கூறி­யுள்­ளார்.

இதில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­டாது. மாறாக, “ஜப்­பா­னி­யர்­க­ளைப்­போல் மூக்­குச் சளி அல்­லது சளிக் காய்ச்­சல் ஒரு­வ­ருக்கு இருக்­கும்­போது, அது மற்­ற­வர்­க­ளுக்கு பர­வா­மல் இருக்க அவர் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்,” என்­றார் சோ சுவீ ஹாக் பொது சகா­தா­ரப் பள்­ளி­யின் மற்­றோர் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக்.

பரி­சோ­தனை செய்­வது, தட­ம­றி­வது, தனி­மைப்­ப­டுத்­து­வது, தடுப்­பூசி போடு­வது, சமூ­கப் பொறுப்­பு­ணர்வு, ஆகிய இவையே நமது முக்­கிய உத்­தி­க­ளாக தொடர்ந்­தி­ருக்க ேவண்­டும் என்­றார் தேசிய தொற்று நோய் மைய பேரா­சி­ரி­யர் லியோ யீ சின்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூ­சியை ஆண்­டு­தோ­றும் போட்­டுக்­கொள்­ளும் சளிக் காய்ச்­சல் தடுப்­பூ­சி­யு­டன் இணைத்­து­வி­ட­லாம் என்­பது ஆசிய-பசி­பிக் மருந்­தக நுண்­கி­ருமி, தொற்­றுச் சங்­கத்­தின் பேரா­சி­ரி­யர் பால் தம்­பை­யா­வின் கருத்து.

சமூக அள­வில் பாது­காப்பு தூர இடை­வெளி போன்­றவை வர்த்­த­கங்­க­ளுக்­குக் கூடு­தல் செலவு வைக்­கும். இதற்­குப் பதி­லாக நகர வடி­வ­மைப்பு, திட்­ட­மி­டல் போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­த­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

குளி­ரூட்­டிக்கு மாற்­றாக, கட்­ட­டங்­களில் உய­ர­மான கூரை­கள், விசா­ல­மான சன்­னல்­கள் இவற்­று­டன் கட்­ட­டங்­க­ளுக்கு உள்­ளும் வெளி­யி­லும் நல்ல காற்ேறாட்­டம் இருக்­கும்­படி செய்­ய­லாம் என்று கருத்­து­ரைத்­தார் பேரா­சி­ரி­யர் லிம்.

காற்றை வடி­கட்­டும் முறை, கடைத் தொகு­தி­களில் கடை­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது, பொதுப் போக்­கு­வ­ரத்து மையங்­களில் நட­மாட்­டத்­தைச் சீர்­ப­டுத்­து­வது போன்­ற­வற்­று­டன் தொற்று உள்­ள­வர்­கள் பாது­காப்­பாக அங்­கி­ருந்து வெளி­யேற வழி செய்­வது ஆகி­யவை என்­யு­எஸ் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் டாக்­டர் வூ ஜுன் ஜீ, முன்­வைக்­கும் பரிந்­து­ரை­கள்.

பள்ளி, வேலை

வீட்­டி­லி­ருந்து கல்வி கற்­பது, வேலை செய்­வது, இவற்­றுக்கு அப்­பா­லும் நிபு­ணர்­கள் சிந்­திக்­கத் தவ­ற­வில்லை.

“குழு விளை­யாட்­டு­கள், வாழ்­நாள் நட்­பு­வட்­டம் போன்­ற­வற்றை அனு­ப­விக்­காத ஒரு தலை­மு­றையை தற்­பொ­ழுது காண்­கி­றோம். இவை­யெல்­லாம் இனி எப்­படி நிக­ழும்,” என்று கேள்வி எழுப்­பி­னார் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் டாக்­டர் குவா.

கல்வி போதிப்­பது என்­பது இதை­விட மேலும் குறு­கிய குறிக்­கோ­ளு­ட­னான ஒன்­றாக இருக்­கும் என்று எச்­ச­ரிக்­கும் இவர், கல்வி என்­பது பாடம் சொல்­லிக் கொடுப்­பது என்ற அள­விற்கு சுருங்­கி­வி­டும். “மனி­தத் தொடர்­பு­கள் இல்லை எனில் கல்வி கற்­பது எப்­படி அர்த்­த­முள்­ள­தாக அைமயும்,” என்­பது இவ­ரின் கேள்வி.

வகுப்­ப­றை­களில் நேர­டி­யா­கக் கல்வி கற்­பதை முடிந்­த­வ­ரை­யில் சாத்­தி­ய­மாக்க புதிய பாது­காப்­பான வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் சென்ற மாதம் கூறி­னார்.

வேலை செய்­வது தொடர்­பாக கருத்­துக்­கூ­றிய சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக சமூ­க­வி­ய­லா­ளர் பேரா­சி­ரி­யர் போலின் ஸ்டி­ரான், அலு­வ­லக முறை காணா­மல் போனா­லும், ஊழி­யர்­கள் மீது நம்­பிக்கை வைத்து செயல்­படும் வர்த்­த­கங்­கள் தழைக்­கும் என்­றார்.

இதை முறை­யா­கக் கையாண்­டால், தனி­ந­பர்­கள் தங்­கள் நேரத்தை பய­னுள்ள வழி­யில் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­லாம் என்­றும் சக ஊழி­யர்­கள், மேலா­ளர்­கள் தங்­க­ளுக்கு இடை­யி­லான உறவு முறையை பய­னுள்ள ஒன்­றாக ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­றும் இவர் சொன்­னார்.

புதிய எல்­லைக்­கோ­டு­கள்

அர­சாங்­கங்­க­ளி­டம் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்வு இராது என்­பதை மக்­களும் ெகாள்கை வகுப்­பா­ளர்­களும் ஏற்­றுக்­கொள்ள வேண்டி வரும் என்றார் டாக்­டர் வ.

இதில், நாடு­கள் ஒன்­று­டன் ஒன்று சேர்ந்து செயல்­பட வேண்­டும் என்­றார் பேரா­சி­ரி­யர் லியோ. “அனை­வ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டிய நிலை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சேவை, தனி­ந­பர் பாது­காப்பு சாத­னம், தடுப்­பூசி மருந்து, தொழில்­நுட்­பம், தக­வல் பரி­மாற்­றம், கண்­கா­ணிப்பு, ஆய்­வு­களை விரை­வு­ப­டுத்­து­வது,” என்று விவ­ரித்­தார் இவர்.

இனி வரக்­கூ­டிய தொற்­று­நோயை எதிர்­கொள்ள, சுற்­றுச்­சூ­ழ­லு­ட­னான மனித உற­வு­கள் மேம்­ப­ட­வேண்­டும் என்­பது உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் டாக்­டர் மோர்­கன் கூறு­வ­தாகும்.

உல­கி­லுள்ள குறை­வான வளங்­களை மனி­தர் சூறை­யா­டு­வது தடுக்­கப்­பட வேண்­டும் என்ற டாக்­டர் குவா, தற்­போது இதைச் சரி­செய்ய உலக சமூகங்­க­ளுக்கு நல்­ல­தொரு வாய்ப்­புக் கிடைத்­துள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!