வாழ்வோடு ஒன்றிணைந்த கொவிட்-19

கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்­குத் திட்­ட­மிட்டு வரு­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் அண்­மை­யில் கூறி­னார்.

"அவ்­வப்­போது சிலர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­பதை ஏற்­றுக்­கொண்டு, ஒட்­டு­மொத்த சமூ­கத்­தை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பதே சிங்­கப்­பூ­ரின் இலக்­காக இருக்க வேண்­டும்," என்­றார் திரு லீ.

கொவிட்-19 சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்­வோடு ஒன்­றி­ணைந்து வாழும் ஒன்­றாக மாறி­வி­டும் என்று அண்மையில் பிரதமர் லீ கூறி­யது, பல வாரங்­க­ளாக இதர அமைச்­சர்­கள் கூறிய அம்­சங்­க­ளு­டன் ஒத்­துப்­போ­வ­தாக இருந்­தது.

கிரு­மிப் பர­வலை சமா­ளிக்க அமைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சு­கள் நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், குறைந்­தது மூன்று முறை­யா­வது கொரோனா கிரு­மித்­தொற்று "வெளி­யே­றப்­போ­வதே இல்லை" என்று கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 உடன் சிங்­கப்­பூர் வாழக் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கடந்த மே மாதம் மத்­தி­யில் கூறி­னார். வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ரு­‌ஷ்­ண­னும் கொவிட்-19 நிரந்­த­ர­மான ஒன்று என்­றும் வரும் ஆண்­டு­களில் கிரு­மித்­தொற்­றின் அலை­கள் இயல்­பான ஒன்­றாகி விடும் என்­றும் கூறி­னார்.

கடந்த ஆண்­டின் இறுதி முதல் உல­கின் பல பொது சுகா­தார நிபு­ணர்­கள் கொவிட்-19 நம்­மு­டன் வாழும் ஒரு நோயாக மாறி­வி­டும் என்­ப­தைக் கூறி­வ­ரு­கின்­ற­னர்.

ஆனால் கொவிட்-19 இன்­னும் உல­க­ள­வில் முழு­வீச்­சில் பரவி வரு­வ­தால் தற்­போதே அதை 'என்­ட­மிக்' என்று சொல்­லக்­கூ­டிய நம்­மு­டன் வாழும் நோயாக வகைப்­ப­டுத்த இய­லாது என்­றும் சில நிபு­ணர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

சார்ஸ், எச்1என்1 நோய்த் தொற்­று­க­ளி­லி­ருந்­தும் டெங்கி, சளிக் காய்ச்­சல் போன்ற சமூ­கத்­தில் எப்­போ­து­மி­ருக்­கும் நோய்­க­ளி­லி­ருந்­தும் பாடம் கற்­றுக்­கொள்­ள­லாம்.

ஒரு குறிப்­பிட்ட நிலப்­ப­ரப்­பில் வாழும் மக்­க­ளைத் தொடர்ந்து ஒரு நோய் அடிக்­கடி பாதித்­தாலோ தொடர்ந்து நீடித்­தாலோ அது நிரந்­த­ர­மான நோயாக கரு­தப்­ப­டு­கிறது என்று தேசிய தொற்று நோய் மையத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் லியோ யீ சின்.

பெரு­ம­ள­வில், அதி­வே­கத்­தில் பெரும்­பான்மை மக்­க­ளைப் பாதித்து வரும் தற்­போ­துள்ள உல­க­ளா­விய நோய்ப் பர­வல் சூழ­லில், சார்ஸ்-கோவ்-2 எனும் கொவிட்-19ன் பின்­பு­லத்­தில் உள்ள கிருமி, என்­ட­மிக் எனும் நிரந்­தர நோய்க்கு இரு படி­கள் கீழே உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்த வாரத் தொடக்­கம் வரை, உல­க­ள­வில் 3.5 மில்­லி­யன் பேருக்கு மேல் கொரோ­னா­வி­னால் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். கடந்த 2019 டிசம்­பர் முதல் 170 மில்­லி­ய­னுக்­கும் மேலான மக்­க­ளுக்கு நோய்த் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தற்­போ­தைய நோய்ப் பர­வல் சூழ­லுக்­கும் நிரந்த நோய்க்­கும் இடை­யில் 'எபி­டெ­மிக்' எனும் நிலை உள்­ளது. திடீ­ரென, எதிர்­பார்க்­காத நிலை­யில் நோய்த் தொற்று அதி­க­ரித்­தால் அதை 'எபி­டெ­மிக்' என்று குறிப்­பி­டு­வர்.

பழக்­கப்­பட்ட நோயா­கக்­கூ­டிய கொவிட்-19

ஜன­வ­ரி­யில் நேச்­சர் எனும் அறி­வி­யல் சஞ்­சிகை மேற்­கொண்ட ஆய்­வில் 100ல் 90 விழுக்­காடு வல் லுநர்­கள், வரும் ஆண்­டு­களில் கொவிட்-19 உலக மக்­க­ளி­டையே அடிக்­கடி ஏற்­படும் நோயாக இருக்­கும் என்று கூறிள்­ள­னர்.

சீனா, நியூ­சி­லாந்து போன்ற சில நாடு­கள் கொவிட்-19ஐ ஒடுக்­கி­னா­லும் பல நாடு­களில் அது கைமீறி போகக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சா சுவி ஹோக் பொதுப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக் கூறி­னார்.

2020 நடுப்­ப­கு­தி­யில் சீனா­வில் வாழ்க்கை வழக்க நிலைக்­குத் திரும்­பி­யுள்­ளது. கொவிட்-19 கிரு­மியை எதிர்த்து உட­ன­டி­யாக செய­லில் இறங்­கும் நியூ­சி­லாந்து, விக்டோ­ரி­யா மாநிலத்தில் தொற்­று ஏற்­பட்­ட­தும் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான விமா­னச் சேவையை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யது.

சிங்­கப்­பூ­ரும் உள்­ளூர் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­த­தால் மே 16 முதல் ஜூன் 13 வரை­யில் மீண்­டும் கட்­டுப்­பா­டு­களை கொண்டு வந்­தது.

இவ்­வே­ளை­யில் முழு­மை­யான நோய் எதிர்ப்பு ஆற்­ற­லைப் பெற 70 முதல் 90 விழுக்­காடு மக்­கள் தொகைக்கு தடுப்­பூசி போடப்பட வேண்­டும் என்று நிபு­ணர்­கள் யோசனை கூறி­யுள்­ள­னர்.

ஆசிய-பசி­பிக் நுண்­ணு­யிர்­உ­யி­ரி­யல் தொற்­று­நோய் சமூ­கத்­தின் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா, கிருமி உரு­மா­று­வது மெது­வ­டைந்­துள்­ளதை சுட்­டிக்­காட்­டி­னார்.

மற்ற ஆய்­வா­ளர்­கள், சாதா­ரண சளிக்­காய்ச்­சல் போல தொற்று நீடித்­தி­ருக்­கும் என்றும் பர­வ­லாக இருக்­கும் நம்­பு­கின்­ற­னர்.

உல­கில் மில்­லி­யன் கணக்­கான மக்­களை பாதிக்­கும் சளிக் காய்ச்­சலால் ஆண்­டொன்­றுக்கு 650,000 பேர் உயி­ரி­ழக்­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் ஆண்டு முழு­வ­தும் சளிக்­காய்ச்­சல் இருந்து வரு­கிறது. ஆண்­டுக்கு 600 பேர் அதற்கு இரை­யா­கின்­ற­னர் என்று அண்­மைய புள்ளி விவ­ரங்­கள் காட்டு­கின்­றன.

எனவே, இந்நோய் அடிக்கடி வரக்கூடிய ஒரு நோயாக இருக்கும் என்பதும் அதனுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதும் பலர் நிபுணர்களின் கருத்து.

சிங்­கப்­பூ­ரில் நிரந்­த­ர­மாக உள்ள தொற்­று­க­ளாக, சளிக் காய்ச்­சல், டெங்கி, கை, கால், வாய்ப் புண் நோய், காச­நோய், ஹெப்­ப­டை­டிஸ் ஏ, பி, சி, இ ஆகிய ஐந்­தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

சளிக் காய்ச்­சல் தொற்று ஆண்டு முழு­தும் ஏற்­ப­டு­கிறது. ஆண்­டின் தொடக்­கத்­தி­லும் மத்­தி­யி­லும் இறு­தி­யி­லும் அதன் தொற்று மேலோங்­கி­யி­ருக்­கும்.

ஆண்டு முழு­தும் டெங்கித் தொற்று ஏற்­பட்­ட­வாறே உள்­ளது. சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் ஆக அதி­க­மாக 35,315 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்­பட்டு அவர்­களில் 32 பேர் இறந்­துள்­ள­னர்.

ஆண்டு முழு­வ­தும் பாலர் பரு­வத்­தி­ன­ருக்­குப் பொது­வாக ஏற்­படும் கை, கால், வாய்ப் புண் நோய் பெரி­ய­வர்­க­ளுக்­கும் தொற்­றும் அபா­யத்தை விளை­விக்­கிறது. திடீ­ரென 2000ஆம் ஆண்டு செப்­டம்­பர் முதல் அக்­டோ­பர் வரை ஏற்­பட்ட அந்த நோயால் 3,790 பேர் பாதிக்­கப்­பட்டு இரு வாரங்­க­ளுக்­குப் பாலர் பள்­ளி­கள் மூடப்­பட்­டன. அந்த ஆண்டு நால்­வ­ரும் 2001ஆம் ஆண்டு இந்­நோ­யால் மூவ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

முதியோரில் 30 விழுக்­காட்­டி­ன­ருக்கு காச­நோய் ஏற்­ப­டு­கிறது. அறி­கு­றி­கள் தென்­ப­டா­ம­லும் தொற்­றும் அபா­யம் இல்­லா­ம­லும் இருக்­கும் பட்­சத்­தில் பின்­னர் 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு அதன் வீரி­யம் கூடு­கிறது. ஹெப்­ப­டை­டிஸ் நோய்­களில் புதிய சம்­ப­வங்­கள் அடிக்­கடி ஏற்­படு­வ ­தில்லை எனினும் 2015ல் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் ஹெப்­ப­டை­டிஸ் சி தொற்று ஏற்­பட்­டது.

தக­வல்­கள் தேசிய தொற்று நோய் மையத்­தி­லும், சுகா­தார அமைச்­சி­லும், உலக சுகா­தார நிறு­வ­னத்­தி­லும் பெறப்­பட்­டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் ஜஸ்டின் ஓங் எழுதிய கட்டுரையின் சுருக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!