இனவாதம் ஒழிய மனம் விட்டுப் பேசுவோம்

திரு­மதி தேன்­மொழி ராஜன் வேலையை விடு­வ­தற்கு நிறு­வ­னத்­தில் நில­விய இனப் பாகு­பாடு கார­ண­மாக இருந்­தது. அவர் வேலை­யி­லி­ருந்து வில­கி­ய­போது, அவ­ரது மிக நெருங்­கிய சீனத் தோழி­யான ப்ரி­சில்லா ஆங்­கும் நிறு­வ­னத்­தின் போக்கு பிடிக்­கா­மல் உடன் வில­கி­னார்.

அவ­ருக்­கும் குடும்பதினருக்கும் பல சீன நண்­பர்­கள் இருக்­கி­றார்­கள். இவர் குழம்­பும் பிரி­யா­ணி­யும் சமைத்து சீன நண்­பர்­க­ளுக்­குக் கொடுப்­பார். சீனப் புத்­தாண்­டுக்கு தேன்மொழி குடும்பம் அவர்கள் வீட்டுக்குச் செல்லும். எனி­னும் பேருந்­தில் அரு­கில் அம­ரும்போது சிலர் மூக்கை மூடிக் கொள்­வ­தும், நிறம் குறித்த கிண்­டல்­களும் பள்ளிக் காலத்­தில் அவர் அனு­ப­வித்­தவை.

“இலை­ம­றை­கா­யாக எப்போதும் இருந்து வரும் இனவாதம் பற்றிய விழிப்­பு­ணர்வு அவ­சி­யம். அதே­நே­ரத்­தில் இதைச் சர்ச்­சை­யாக்­கக்­கூ­டாது என்­பது இரு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான திரு­மதி தேன்­மொழி­யின் கருத்து.

இன­வா­தம் பெரி­தும் தலை­தூக்­கா­மல் இங்­குள்ள சிறு­பான்­மை­யி­ன­ரின் வாழ்­வும் வாய்ப்­பு­களும் பெரு­ம­ளவு பாதிக்­கப்­ப­டா­மல் இது­வரை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் நாட்­டின் பல இன பல மொழி பல சம­யச் சூழலை மிக­வும் நுணுக்­க­மாக சமா­ளித்து வந்­துள்­ளது. தொழில்­நுட்ப வளர்ச்­சி­யும் வெளித்­தாக்­கங்­களும் மிக­வும் அதி­க­ரித்­துள்ள இன்­றைய சூழ­லில், இது­கு­றித்து பொது­வெளி­யில் விரி­வா­க­வும் ஆழ­மா­க­வும் பேசப்­ப­டா­மல் இருப்­பது தேவையற்ற ஊகங்­க­ளுக்கும் அனு­மா­னங்­களுக்கும் வழிவிட்டுள்ளதாக சமூ­க­வி­யல் அறி­ஞர்­கள் கூறுகிறார்கள்.

திறன்­பே­சி­க­ளின் மூலம் வளர்ந்­துள்ள கண்­கா­ணிப்­புத் தொழில்­நுட்­ப­மும் இனம் குறித்த பொது கலந்­து­ரை­யா­டல்­கள் ஏற்­றக்­கொள்­ளக் கூடி­யவை என்ற அதி­க­ரித்து வரும் எண்­ண­மும் இன­வாத போக்கை அதி­கம் வெளிப்­ப­டுத்­து­கிறது என்­­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சமூக அறி­வி­யல் பள்­ளி­யின் உத­விப் பேரா­சி­ரி­ய­ரான முனை­வர் லாவண்யா கதி­ர­வேலு.

சமூக ஊட­கங்களின் தாக்கம்

தற்­போது இன, சமய பாகு­பாடு­கள் தொடர்­பான சம்­ப­வங்­கள் அதி­க­மாகி இருப்­ப­தா­கத் தெரி­வதற்கு சமூக ஊட­கங்­கள்­தான் முக்­கிய கார­ணம். முன்பு பெரிய இனக்­க­ல­வ­ரம் போன்ற விஷ­யங்­கள்­தான் செய்­தி­யா­கும். தற்­போது சிறிய விஷ­யங்­கள்­கூட செய்­தி­யா­கி­விடு கிறது என்று குறிப்­பிட்­டார் சமூ­க­வி­ய­லா­ளர் முனை­வர் அ.வீர­மணி.

இதற்கு பல கார­ணங்­களைச் சொல்லலாம் என்றார் அவர்.

“ஒன்று, 1979ல் அறி­மு­க­மான சிறப்பு உத­வித்­திட்­டப் பள்­ளி­களில் ஆங்­கி­லத்­தை­யும் மாண்­ட­ரி­னை­யும் உயர்­த­ரத்­தில் படித்த கல்வியில் உயர்­பிரிவு மாணவர்கள் பலருக்கு இந்­தி­யர், மலாய்க்­கார்­க­ளின் பண்­பா­டும் கலா­சா­ர­மும் பெரி­தா­கத் தெரி­யாது. அதே­போல், தற்­போது இங்­குள்ள இந்­தி­யப் பள்­ளி­களில் வளர்­ப­வர்­களுக்கு சீன கலா­சா­ரமோ, மலாய் பண்­பாடோ தெரி­யாது. இத்­த­கைய தனித்­த­னிக் குழு­மங்­க­ளாக சமூகப் பிரி­வு­கள் உரு­வா­கிறது.

“மற்­றது, சீனா­வின் துரித வளர்ச்சி சிங்­கப்­பூர் சீனர்­க­ளுக்கு உயர்­வு­ணர்ச்­சி­யைத் தந்­துள்­ளது. மேலும் சீனா, இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் இங்கே புதி­தா­கக் குடி­யே­று­ப­வர்­க­ளுக்கு இந்­நாட்­டின் வர­லாறு, போக்கு, கலா­சா­ராம், இன உற­வு­கள் குறித்த புரி­தல் குறைவு,” என்­றார் முனை­வர் அ.வீர­மணி.

கேலிப் பேச்சு பழக்கமாகிறது

இன­வா­தக் கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­ப­வர்­கள் அவ்­வாறு செய்­வ­தால் ஒரு­வித அதி­கா­ரம் பெற்­ற­வர்­க­ளாக உணர்கின்றனர். அதனால் அவ்­வா­றான போக்­கை கைக்கொள்­கின்­ற­னர் என்று கூறினார் ‘கிளப் டு கேர்’ எனும் இந்­திய சமூ­கத்­தி­ன­ருக்­கான மன­நல ஆலோ­சனை சமூ­கக் குழு­வின் தலை­வ­ரான மன­நல ஆலோ­ச­கர் திரு­வாட்டி ‌‌‌ஷர்­மினி என். ராம­சந்­திரா, 49.

வன்­மு­றை மிகுந்த குடும்­பத்­தில் வளர்ந்த ஒரு­வ­ருக்கு அத்­த­கைய செயல்­கள் சாதா­ர­ண­மான செய­லா­கத் தெரி­யும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­பது போன்றே இது வும். சிறு வய­தில் கேலி­யா­கப் பேசும், கேட்­கும் இன­வா­தக் கருத்து­கள் திருத்­தப்­ப­டா­த­போது பெரி­ய­வரான பின்­னர் சாதாரணமாகப் பேசு­கிறார்­கள் என்று அவர் விளக்­கி­னார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி முன்­னாள் விரி­வு­ரை­யா­ளர் தொடர்­பான இன­வாத செய­லைச் சுட்டி கருத்­து­ரைத்த அவர், பெரும்­பான்மை சமூ­கத்­து­டன் ஈடு­ப­டு­வ­தன் மூலம் சிறு­பான்­மை­யி­னர் ஏற்­றம் பெரும் நிலை உரு­வா­கிறது என்ற மனப்­போக்­கைக் கொண்­டி­ருப்­பார் என்­றார். சிறு­பான்­மை­யி­னர் தமது சக்­தி­யைத் தட்­டிச்­செல்­வார்­கள் என்ற மன­நிலை அந்­தச் செய­லுக்­குக் கார­ணம் என்­கி­றார்.

பயமே அடிப்படை

வெங்­கா­யத்தை உரித்­துப்­பார்ப்­ப­து­போல் இந்த விஷ­யத்­தை பார்க்­கும்போது, கோபம், எரிச்­சல், வெறுப்பு எல்­லா­வற்­றுக்­கும் அடிப்­ப­டை­யாக இருப்­பது பயம் என்­பது புரி­யும் என்று கூறு­கி­றார் மனோ­தத்­துவ நிபு­ணர் டாக்­டர் சீதா.

இதில் அடிப்­ப­டை­யா­னது பயம்­தான். பயத்­தின் வெளிப்­பா­டு­தான் மற்ற எல்­லாம். எல்லா வகை­யி­லும் தன்­னைப் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டும் என்று நினைப்­பது மனித இயல்பு. இந்­தப் பாது­காப்­புக்கு ஆபத்து வரும்­போது அல்­லது சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டும்­போது ஒன்று தப்­பித்து ஓடுவது அல்­லது எதிர்த்து நிற்­பதே மூளை­யின் இயல்பு. இதில் எந்­தச் செயல் வெற்­றி­பெ­றும் என்­ப­தைப் பொறுத்து மூளை முடி­வெ­டுக்­கும்.

கொள்­ளை­நோய் போன்ற சூழல் வாழ்க்­கையை சிர­ம­மாக்­கு­கிறது. இந்­தச் சிர­மத்­துக்­கான கார­ணத்தை நமது மூளை எவ்­வாறு பதிவு செய்­தி­ருக்­கிறது என்­ப­தைப் பொறுத்து, அது செய­லாற்­று­கிறது என்ற அவர், மூளை­யின் செயல்­பாட்டை அண்­மைய தொற்று சம்­ப­வம் மூலம் விளக்­கி­னார்.

“எடுத்­துக்­காட்­டாக, இந்­தி­யா­வில் இருந்து வைரஸ் வரு­கிறது. என்­னைப் பாது­காத்­துக்­கொள்ள இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளி­டம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்­டும். என்­பது மூளை­யில் பதி­கிறது. இவ்­வாறு பதிவு செய்­வது சரியா என்று மூளை­யி­டம் கேட்க வேண்­டும். அதை கேள்வி கேட்­கா­விட்­டால், மூளை தவ­றாக யோசிக்­கத் தொடங்­கி­வி­டும். மூளை ஒரு சிறந்த இயந்­தி­ரம். அது தன்­னி­யல்­பில் செயல்­படும். அது இர­வில் தூங்­கும்­போது தக­வல்­க­ளைச் சேக­ரிக்­கிறது. தூக்­கத்­தின் ஆழத்­தைப் பொறுத்தே, மூளை தக­வல்­கள் சேமிப்­பும் சரி­யான வரை­ய­றை­யில் இருக்­கும்,” என்று விவ­ரித்­தார் டாக்­டர் சீதா.

நமக்­குத் தெரி­யாத ஒன்று பயத்தை ஏற்­ப­டுத்­து­கிறது. பாது­காப்பு இல்லை என மூளை உண­ரும்­போது, இயற்­கை­யான குணம் வெளிப்­படும். தக­வல்­கள் அதி­க­ரிக்க அதி­க­ரிக்க சவால்­களும் கூடு­கின்­றன என்­றார் டாக்டர் சீதா.

இந்தியராகவும் தலை அங்கி அணியும் பெண்ணாகவும் இனவாதத்தை எதிர்நோக்குவதாகக் கூறிய குமாரி நஸிமா பேகம், 28, சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் என்றார். இந்தியர்களே தம்மை விலக்கி வைத்த சம்பவங்களும் உண்டு என்றார் அவர்.

பேசாததால் வரும் பிரச்சினை

இந்­தி­யர் வீட்­டில் சாம்­பி­ராணி போடு­வது அரு­கில் வசித்த மலாய் குடும்­பத்­துக்கு பல ஆண்­டு­கா­ல­மாக தீராத பிரச்­சி­னை­யாக இருந்­தது. கூப்­பிட்­டுப் பேசி­ய­போது, மலாய்­கா­ரர் வீட்­டில் இருந்த வயதான அம்­மா­வுக்கு சாம்­பி­ரா­ணிப் புகை­யால் ஆஸ்­து­மா அதி­க­ரிப்­பது தெரி­ய­வந்­தது. அது­வ­ரை­யில் இந்­தி­யக் குடும்­பத்­துக்கு இது தெரி­யா­மல் இருந்­தது. சாமி குடும்­பி­டு­வ­தைத் தடுக்­கி­றார்­கள் என்ற வெறுப்பே அவர்­க­ளி­டம் வளர்ந்­தது.

இதற்கு கார­ணம் இரு­வ­ருக்­கும் இடையே தொடர்பு இல்­லா­த­து­தான் என்று தமது அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார் கடந்த 22 ஆண்டு­க­ளாக சம­ரச மன்­றத்­தின் நடு­வ­ரா­கப் பணி­யாற்றி வரும் 59 வயது திரு ப. திரு­நா­வுக்­க­ரசு.

பக்­கத்து வீட்­டுக்­கா­ர­ரு­டன் சண்டை வரு­வ­தற்கு முக்­கிய கார­ணம் தொடர்பு இல்­லா­த­து­தான். அக்­கம்­பக்­கத்­தி­ன­ரு­டன் பேசி, அவர்­க­ளைத் தெரிந்­து­கொள்ள அவர்­கள் பேச வேண்­டும் என்று காத்­தி­ருக்­கி­றோம். தொடர்பு இல்­லா­த­போது, நம்­பிக்கை குறை­கிறது. இத­னால் பேதங்­களும் பாகு­பா­டு­களும் வளர்­கின்­றன என்று குறிப்­பிட்­டார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!