கனவு இல்லம் கைகூடும் காலம் நீள்கிறது

கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள மனி­த­வ­ளத் தட்டுப்­பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று. இதனால் பல வீடமைப்புத் திட்டங்கள் தாமதமாகியுள்ளன. 40,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இவர்களில் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இளையர்களும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகும் இளம் தம்பதியர்களும் அடங்குவர்.

பிடித்ததுபோல் வீடு கிடைப்பதே கடினம். மறுவிற்பனை வீடுகள் பார்வையிட்ட மறுநாளே விற்பனையாகி விடுகின்றன. மேலும் இப்போது மறுவிற்பனை வீடுகளுக்கு கைக்காசாக $50,000லிருந்து $70,000வரை கேட்கின்றனர். படிப்பை முடித்து மணவாழ்க்கையை துவங்கும் எங்களைப் போன்றவர்க்கு இது மிக அதிகமான தொகை.



அ. ராஜமோகன்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிடிஓ வீடுகளுக்கும் எஞ்சியுள்ள வீட்டு விற்பனைத் திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்து வருகின்றனர் தொலைத்தொடர்பு ஆலோசகரான 32 வயது அ. ராஜமோகனும் அவரது மனைவியும்.

இந்து இளங்­கோ­வன்

பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் பிட­டா­ரி­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக்­ க­ழ­கம் கட்­டிய 'அல்­காஃப் ஒய­சிஸ்'இல் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் குடி­யேற ஆவ­லு­டன் காத்­தி­ருந்­த­னர் 31 வயது காயத்ரி இளங்கோ, 33 வயது புவ­னேஸ்­வ­ரன் லெட்சு­மணன் தம்­பதி. ஆனால் கொவிட்-19 சூழல் காரணமாக ஏற்பட்ட முடக்கநிலை, பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மனிதவளத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் கட்­டு­மா­னம் தாம­த­மாகி, கடந்த வாரம்­தான் அவர்­கள் புதிய வீட்­டில் தங்­கள் வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னர்.

"திரு­ம­ண­மா­ன­தும் புது வீட்­டில், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தோம். ஆனால், தாம­தமா­கி­விட்­டது. இரு­வ­ருக்­கும் வயது அதி­க­ரித்­துக்­கொண்டே போகிறது. விரை­வில் குழந்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற கவலை ஏற்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார் சிறப்­புத் தேவை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் காயத்ரி.

மண­மா­ன­தும் சொந்த வீட்­டில் வாழ்க்­கை­யைத் துவங்­கு­வது புது­மண தம்­ப­தி­யர் பல­ருக்கு ஒரு பெரிய கனவு. சொந்த வீட்­டில் நண்­பர்­க­ளுக்கு விருந்­து­வைப்­பது, வீட்டை புதுப்­பிப்­பது, குழந்தை பிறப்­புக்கு திட்­ட­மி­டு­வது என பல திட்­டங்­க­ளைத் தள்­ளி­வைக்க வேண்­டிய நிலைக்கு தம்­ப­தி­யர்­களை ஆளாக்­கி­யுள்­ளது கிரு­மித்­தொற்­றால் தாம­த­மா­கி­யுள்ள 'பிடிஓ' வீடு­களின் கட்­டு­மா­னம்.

சரா­ச­ரி­யாக மூன்று முதல் நான்கு ஆண்­டு­களில் நிறை­வ­டைந்து­வி­டக்­கூ­டிய பிடிஓ கட்­டு­மா­னத்­தில், ஏறக்­கு­றைய 85% திட்­டங்­கள் நிறை­வ­டைய ஆறு முதல் ஒன்­பது மாதங்­கள் தாம­த­மா­க­லாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கடந்த ஏப்­ரல் மாதம் அறி­வித்­தது.

சொந்த வீடு இருந்­தால்­தான் குடும்ப வாழ்க்­கையை தொடங்­கு­வதற்கு ஏது­வாக இருக்­கும் என்று பலர் கரு­தி­னா­லும் சிலரோ, புது வீட்டுக்கான தாம­தம் தங்களது வாழ்க்கைத் திட்­டங்­களைப் பாதிக்­க­வி­டு­வ­தில்லை.

"வீடு இருந்­தால்­தான் குடும்­பத்தை துவங்க முடி­யும் என்று காத்­தி­ருந்­தால் காலம் ஓடி­வி­டும். எங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் திரு­மண வாழ்க்­கை­யின் ஆரம்­பம் சொந்த வீட்­டில் இருக்­க­வேண்­டும் என்­றில்லை," என்­பது ஒரு வயது குழந்­தைக்கு தாயான 29 வயது மோ.சரண்­யா­வின் கருத்து.

கடந்த 2018ல் மணம்­பு­ரிந்து இவ­ருக்கு சென்ற ஆண்டு குழந்தை பிறந்­தது. தற்­போது பெற்­றோர்­ வீட்­டில் வசிக்­கும் இவ­ரும் இவ­ரது கண­வ­ரும் பிட­டாரி பிடிஓ குடி­யிருப்­பில், நான்­கறை வீட்­டிற்கு இவ்­வாண்டு குடி­புக உள்­ள­னர்.

புது வீட்டுக்குக் காத்திருப்பதில் தம்பதியர் எதிர்நோக்கும் சிரமங்கள்

காத்­தி­ருக்­கும் காலத்­தில் தற்­கா­லிக வசிப்­பி­டத்தை முடி­வு­செய்­வதே மண­மான தம்­ப­தி­யர் பல­ருக்கு சிக்­க­லான விஷ­ய­மாக உள்­ளது.

பெற்­றோர் வீட்­டில் தங்­கி­னால் போதிய தனி­மை­யும் சுதந்­தி­ர­மும் கிடைப்­ப­தில்லை. வாடகைக்கு எடுத்தால் சம்­ப­ளத்­தில் பெரும்­பகுதி அதற்கே செல­வா­கி­வி­டு­கிறது.

சொத்­துச் சந்­தைத் தள­மான எஸ்­ஆர்­எக்ஸ் மார்ச் மாதம் வெளி­யிட்ட தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், கொண்டோமீனிய வாடகை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இவ்­வாண்டு 2.4 விழுக்­காடு கூடி­யுள்­ளது. வீவக வாடகை கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் 3.4 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. இது தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தை­யும் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

வரும் 2026ல் கட்­டி­மு­டிக்­கப்­ப­ட­வுள்ள தங்­க­ளது பீஷான் பிடிஓ வீட்­டிற்கு காத்­தி­ருக்­கும் புது­மண தம்­ப­தி­ய­ரான 25 வயது சம்­யுக்தா வெங்­கட்­ரா­ம­னும் 28 வயது பார்­கவ் ஸ்ரீக­ணே­ஷும், தங்­ளி­னில் உள்ள தனி­யார் குடி­யி­ருப்­பில் வாட­கைக்கு தங்­கி­யி­ருக்­கின்­ற­னர்.

மாதம் $2,500 வாடகை செலுத்­து­வ­தால், சேமிப்பு பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார் சம்­யுக்தா. என்­றா­லும் கண­வ­ரு­டன் தனி வீட்­டில் இருப்­பது இவ­ருக்கு மன­நி­றைவை தரு­கிறது. திரு­ம­ணத்­திற்கு முன்பு வரை தனி­மை­யில் இருந்து பழ­கிய சம்­யுக்­தா­விற்கு திரு­ம­ண­மான பின் எட்டு மாத காலம் கண­வ­ரின் வீட்­டில், அவ­ரு­டைய குடும்­பத்­து­டன் வசித்த அனு­ப­வம் சற்று சங்­க­ட­மா­னா­தாக அமைந்­துள்­ளது.

வாட­கைக்கு செல­வ­ழிக்­கும் பணத்தை புது­வீட்­டைப் புதுப்­பிக்­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்று சிலர் கருது­கின்­ற­னர்.

புது வீட்­டுக்கு நான்கு ஆண்டு ­க­ளுக்கு மேலா­க காத்­தி­ருப்­ப­தை­விட எஞ்­சி­யுள்ள வீட்டு விற்­ப­னைத் திட்­டத்­தின்­கீழ் வீடு வாங்க (Sale of Balance Flats) விண்­ணப்­பித்­தார் மருந்து தர நிர்­வா­கி­யான 24 வயது ரோஸியா பர்­வீன். பொங்­கோல் வட்­டா­ரத்­தில் வீடு கிடைத்­தது. சென்ற ஆண்டு குழந்தை பிறந்த கையோடு செப்­டம்­ப­ரில் புதிய வீட்­டில் குடி­யே­றத் தயா­ராக இருந்தார். ஆனால் கட்­டு­மா­னப் பணி­களில் ஏற்பட்ட தாம­தத்தால் வீடு இன்னும் கிடைக்கவில்லை.

பெற்­றோர் வீட்­டில் தங்­கி­யி­ருந்த இவர், குழந்தை பிறந்­ததும் பெற்­றோருக்கு பார­மாக இருக்­கக்­கூ­டாது என்ற எண்­ணத்­தி­னா­லும் இடப்­பற்­றாக்­கு­றை­யா­லும் நண்­ப­ரின் வீட்­டில் $750 மாத வாட­கை­யில் ஓர் அறை­யில் வசிக்­கிறார். இம்­மாத இறு­தி­யில் கண­வ­ரின் பெற்­றோர் வீட்­டிற்கு இடம் மாற­வி­ருக்­கிறது இக்­கு­டும்­பம்.

"­ம­ண­மா­னதி­லி­ருந்து நிரந்­த­ர­மான வீடில்­லா­மல் மாறிக்­கொண்டே இருப்­பது சோர்­வ­ளிக்­கிறது," என்றார் ரோஸியா.

சென்ற ஆண்டே வீடு கிடைக்க இருந்­த­தால், பொங்­கோ­லில் உள்ள குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒன்­றில் தனது மகன் ஆஹில் ரட்­மானை சேர்த்­துள்­ளார் ரோஸியா. தற்­போ­தைய வேலைக்கு செல்­வ­தற்கு முன்பு மகனை குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் கொண்­டு ­விட தோ பாயோ­வி­லி­ருந்து பொங்­கோ­லுக்­குச் செல்­வ­தாக கூறி­னார்.

இதில் இன்­னும் வீடு கிடைக்­கா­மல் அல்­லா­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மா­னது.

மறுவிற்பனை வீடுகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இதற்­கி­டையே, கட்­டு­மா­னத் தாம­தத்­தி­னால் மறு­விற்­பனை வீடு­களை தேர்­வு­செய்­யும் தம்­ப­தி­யி­ன­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த ஆண்டு, வீவக மறு­விற்­பனை விலைக் குறி­யீடு ஆண்டு அடிப்­ப­டை­யில் 5 விழுக்­காடு கூடி­யுள்­ளது. மறு­விற்­பனை பரி­வர்த்­தனை எண்­ணிக்கை 4.4 விழுக்­காடு உயர்ந்து 24,748 வீடு­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

இவ்­வாண்டு மார்ச்­சில் மணம் முடித்­த­னர் 25 வயது முத்­தையா வான்­ம­தி­யும் 27 வயது ராம­கிருஷ்ணா சந்­திர சேக­ர­னும். ம­ண­மா­ன­தும் புது­வீட்­டில் குடி­யே­றும் நோக்­கில் மறு­விற்­பனை வீட்டை இவர்­கள் வாங்­கி­னர்.

"பிடிஓ வீடு­க­ளுக்கு குறைந்­தது ஐந்து ஆண்­டு­கள் வரை காத்­தி­ருக்க வேண்­டும். நாங்­கள் வாங்­கி­யி­ருக்­கும் $420,000 மதிப்­பி­லான நான்­கறை மறு­விற்­பனை வீட்டு விலை­யை­யும் பிடிஓ வீடு­களில் சரா­சரி விலை­யை­யும் ஒப்­பி­டு­கை­யில் பெரிய வித்­தி­யா­சம் இல்லை என்று நினைத்­தோம்," என்­றார் வான்­மதி.

ஆனா­லும், மறு­விற்­பனை வீடு­களின் விலை பல தம்­ப­தி­களை நிலை­குத்­தச் செய்­துள்­ளது. இதற்கு முக்­கிய கார­ண­மாக விளங்­கு­வது கைக்­காசு (சிஒவி) எனும் 'மதிப்­பீட்­டிற்கு மேலான ரொக்­கம்'.

நிதி நிர்­வா­கி­யாக பணி­பு­ரி­யும் 27 வயது ராஷி­தா­வுக்கு கடந்த ஆண்டு திறந்த முன்­ப­தி­வுத் (open booking) திட்­டத்­தின் வழி தெம்பனிசில் 'பிடிஓ' வீடு கிடைத்­தது. இந்த ஆண்டு டிசம்­ப­ரில் சாவியை பெற­வி­ருந்த ராஷிதா, தற்­போது அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை காத்­தி­ருக்க வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

முன்­னர் கேன்­பெரா வட்­டா­ரத்­தில் உள்ள பீடிஓ திட்­டத்­தில் வீடு கிடைத்­த­போது 2025 வரை காத்­தி­ருக்­க­வேண்­டும் என்­ப­தால் அந்த வாய்ப்பை நிரா­க­ரித்­தி­ருந்­தார்.

மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை தலை­சுற்ற வைக்­கிறது என்­று­கூ­றும் இவர், இந்த தெம்­ப­னிஸ் பிடிஓ-வை ஒரு முத­லீ­டா­கப் பார்க்­கி­றார். ஐந்து வரு­டங்­க­ளுக்கு பிறகு வேறொரு இடத்­திற்கு மாறத் திட்­ட­மிட்­டி­ருக்­கின்­ற­னர் ராஷி­தா­வும் அவ­ரது கண­வ­ரும்.

தண்டம் செலுத்தாமல் புது வீட்டு பதிவை ரத்து செய்­யும் சலுகை

கொவிட்-19 சூழ­லில் பிடிஓ வீடு­க­ளின் கட்­டு­மா­னம் தாம­த­ம­டைந்­தால் அதற்­கான பதிவை ரத்து செய்­ய­ தண்­டத்­தொகை செலுத்த வேண்­டி­ய­தில்லை என்ற அண்­மைய அறி­விப்பை பல­ரும் வர­வேற்­ற­னர்.

"என்­னு­டைய நண்­பர் ஒரு­வ­ருக்கு அண்­மை­யில் குழந்தை பிறந்­துள்­ளது. தெங்­கா­ வீட்­டுக்கு இவர் ஏழு ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தா­யிற்று. பெற்­றோர் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் இவர் பல பிரச்­னை­களை எதிர்­கொள்­கி­றார். இந்­த­நே­ரத்­தில், தண்­டம் செலுத்­தா­மல் புது வீட்­டு முன்­ப­திவை ரத்­து­செய்­யும் வாய்ப்பு அவ­ருக்கு உத­வும். அவர்­கள் மறு­விற்­பனை வீட்டை வாங்­க­ வசதியாக இருக்கும்," என்று கூறி­னார் ராஷிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!