சொத்து முகவர்கள் வழங்கும் ஆலோசனை

ப.பாலசுப்பிரமணியம்

சிங்­கப்­பூர் ரியல்­டர்ஸ் இன்­கோப்­ப­ரே­ஷன் நிறு­வன இணை பிரிவு இயக்­கு­நர் 34 வயது திரு தங்­க­மணி கணே­சன், தற்­போது மறு­விற்­பனை வீவக வீடு­க­ளின் தேவை இந்த கட்­டு­மான தாம­தங்­க­ளால் மேலும் அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­வித்­தார்.

தற்­போ­தைய சூழ­லில் அதி­க­மா­னோர், புது வீடு­க­ளுக்­கான முன்­ப­திவை ரத்­து­செய்­து­விட்டு மறு­விற்­பனை வீடு­களை வாங்­கக்­கூ­டும் சாத்­தி­யம் அதி­கம் உண்டு என்று இவர் கரு­து­கி­றார்.

வீவக மறு­விற்­பனை வீடு­களை வாங்க, பெற்­றோ­ருக்கு அரு­கில் வீடு வாங்­கு­வ­தற்­கான மானி­யம் (Proximity Housing Grant) போன்ற கூடு­த­லான மானி­யங்­க­ளை­யும் உள்­ள­டக்க முடி­வ­தால் மறு­விற்­பனை வீவக வீடு­களை வாங்­கும் வாய்ப்­பை­யும் அதி­க­மா­னோர் பரி­சீ­லிப்­பர் என்­றார் அவர்.

இத­னால் முதல்­முறை வீடு வாங்­கு­வோர் கூடு­தல் மானி­யங்­க­ளுக்கு தகு­தி­பெ­றும் வகை­யில் மறு­விற்­பனை வீவக வீடு­களை தேர்­தெ­டுக்­க­லாம் என்று சொன்னார் திரு கணேசன்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு முன்பு ஏறக்­கு­றைய ஐந்து வாடிக்­கை­யா­ளர்­களே வீட்டை நேரில் பார்க்க வரு­வர். தற்­போது அந்த எண்­ணிக்கை நான்­கி­லி­ருந்து ஐந்து மடங்கு பெரு­கி­யுள்­ளது," என்­று தெரிவித்தார் புரொப்­நெக்ஸ் நிறு­வ­னத்­தின் குழும இயக்­கு­ந­ரான சொத்து முக­வர் திரு­மதி சி.இந்திராணி.

இத­னால் வீடு விற்­ப­வர் சாத­க­மான நிலை­யில் உள்­ளார் என்­றும் கைக்­காசு (சிஒவி) தரும் நிலை­யில் வீடு வாங்­கு­ப­வர்­கள் உள்­ள­னர் என்­றார்.

அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு மறு­விற்­பனை வீட்டு பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருக்­கும் என்று 41 வயது திரு­மதி இந்­தி­ராணி தெரி­வித்­தார்.

பதி­வு­செய்த புதிய வீட்­டுக்­கா­கக் காத்­தி­ருப்­பதா அல்­லது அதை ரத்து செய்­து­விட்டு மறு­விற்­பனை வீட்டை வாங்­கு­வதா என்று யோசிப்­ப­வர்­கள், காத்தி­ருக்­கும் காலத்தில் தங்குவதற்கு தற்­கா­லிக இடம் உள்­ளதா, அடுத்த ஓரிரு ஆண்­டு­களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்­ணம் இருந்தால், குழந்தையை வளர்ப்பதற்கான இட­வ­சதி உள்­ளதா போன்­ற­வற்றை அலசி ஆராய வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

சில தம்பதியர் விரைவிலேயே புதிய வீட்டைப் பெற விரும்புகின்றனர். வாடகை வீட்டுக்கு அதிக செலவாகும் என்பதாலும் பெற்றோர், மாமியார்- மாமனார் வீடுகளில் அல்லது உடன்பிறந்தவர் வீடுகளில் கூடுதல் காலம் வசிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாலும் திருமணமானதும் புதிய வீட்டுக்குப் போக இவர்கள் நினைக்கின்றனர்.

அப்­ப­டிக் காத்­தி­ருக்க முடி­யாத பட்­சத்­தில், வீவக மறு­விற்­பனை வீடு­கள், கூட்­டு­ரிமை, தனி­யார் வீடு­களை வாங்­கு­வது குறித்து அவர்­கள் பரி­சீலிக்­க­லாம் என்று கூறினார் திருமதி இந்திராணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!