தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாக பேசினால் அது தனது எதிர்காலத்தைப் பாதித்துவிடும் என்று சிலர் தனக்கு அறிவுரை கூறியதாக 22 வயது சக்தி மேகனா பகிர்ந்துகொண்டார்.
பேசாமல் இருந்தால் பாதிக்கப்பட்டவருக்குத்தான் பாதுகாப்பு என்று இருப்பது தவறு. அது குற்றவாளிக்குத்தான் சாதகமாக அமைகிறது.
சமூகம் என்ன நினைக்கும் என்பதை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டுப் பாதிக்கப்பட்டவரின் மனநலனில் அக்கறை செலுத்துவது முக்கியமாகும்.
ஒவ்வொருவரும் தங்களது மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவதற்கு வெவ்வேறு உத்திமுறைகள் இருக்கும்.
ஆனால், இதற்கு முதல் படி உதவி நாடுவதே என்றார் சக்தி மேகனா.
நான்கு வருடங்களாக 'DFISTS' (Dark Skinned Female Indian Singaporean Tamil) எனும் தனது டிக் டாக் பக்கத்தில் நகைச்சுவை, ஆடல், சமூகக் கருத்துகள் போன்ற அம்சங்கள் கொண்ட பல காணொளிகளை உருவாக்கி வெளியிட்டு வரும் இவர், தனக்கு நடந்த பாலியல் கொடுமையைப் பற்றி கூறி, அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.