ஆண்களுக்கும் பாலியல் கொடுமை நேரலாம்

தனக்கு நேர்ந்த பாலி­யல் துன்­பு­றுத்­தல் அனுபவத்தைப் பற்றி புகார் செய்­யவோ அதைப் பற்றி நண்பர்களிடம் சொல்­லவோ முடி­யாத நிலைக்கு 24 வயது ஷர்­வேஷ் லக்ஷ்ம­ணன் ஆளானார். அவர் சொல்­வதை நம்­பு­வார்­களா என்ற அச்­சமே அதற்குக் காரணம். தற்­போது பாலின, பாலி­யல் மற்­றும் பெண்­கள் சார்ந்த முது­நிலைப் படிப்பை வான்­கூ­வர் நக­ரில் மேற்கொண்டு வரும் இந்த சிங்­கப்­பூ­ரர், சிங்­கப்­பூ­ரின் பிர­பல அமைப்­பான 'மைனோ­ரிட்டி வொய்ஸ்­' இணை நிறு­வ­னர்.

நண்­பரால் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான இவர், 'என்ன செய்­வது? எப்படி உதவி நாடு­வது? மருத்­துவ உத­வியை நாட வேண்­டுமா?' போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை தெரி­யாமல் தவித்­தார். பெற்­றோரிடம் நடந்­ததைக் கூறி­ய­போது, "ஆண்­களை எப்­படி பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­ய­மு­டி­யும்? அதை நிறுத்த நீ ஏதா­வது செய்­தி­ருக்க வேண்­டும்!" என்ற பதில் வந்தது, இன்­றும் ஷர்­வே­ஷின் மன­தில் நிற்­கிறது.

சுற்­றி­யி­ருப்­போர் முத­லில் பாதிக்­கப்­பட்­ட­வர் கூறு­வதை நம்­ப­வேண்­டும். பாதிக்­கப்­பட்­டவரின் நலனை உறுதி செய்­ய­வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் பாலி­யல் சார்ந்த கல்வி சிறு­வயதி­லி­ருந்தே துவங்க வேண்­டும் என்று நம்பு­கி­றார் ஷர்வேஷ். இளை­யர்­க­ளுக்குத் தகுந்த, போதிய தக­வல்­க­ளை­த் தரு­வது அவ­சி­யம் என்­றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!