பிடிஓ வீட்டுத் திட்டத் தாமதத்துக்காக இழப்பீடு

பொங்­கோல் வட்­டா­ரத்­தில் உள்ள பிடிஓ வீட்­டுத் திட்­டம் முடி­யும் தேதி ஓராண்­டுக்கு மேலாக தாம­தம் அடைந்­த­தால் அதில் வீடு­களை வாங்­கி­யோ­ருக்கு இழப்­பீடு வழங்­கப்­படும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) கூறி­யுள்­ளது.

வாட்­டர்வே சன்­ரைஸ் 2 எனும் அத்­திட்­டத்­தில் ஏழு அடுக்­கு­மாடி புளோக்­கு­களும் அவற்­றில் 1,014 வீடு­கள் அமைந்­தி­ருக்­கும். தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் 94 பிடிஓ திட்­டங்­களில் ஓராண்­டுக்கு மேல் தாம­தம் அடைந்­தி­ருப்­பது இத்­திட்­டம் மட்­டுமே.

வீட்­டின் விலை, ஒப்­பந்­தத்­தின்­படி வீட்­டுச்­சாவி ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்­டிய தேதி­யை­விட எவ்­வ­ளவு காலம் தாம­தம் ஏற்­பட்­டது என்­ப­தைப் பொறுத்து இழப்­பீடு தீர்­மா­னிக்­கப்­ப­படும் என்று வீவக நேற்று ஸ்ட்­ரெட்ய்ஸ் டைம்­சி­டம் கூறி­யது.

இழப்­பீட்­டுத் தொகை $700க்கும் $10,500க்கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்­றும் சரா­சரி இழப்­பீட்­டுத் தொகை $5,000 ஆக இருக்­கும் என்­றும் வீவக தெரி­வித்­தது.

அடுத்த ஆண்டு நான்­காம் காலாண்­டுக்­கும் 2023ஆம் ஆண்டு முதல் காலாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வீடு­கள் ஒப்­ப­டைக்­கப்­படும்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் தொடங்­கப்­பட்ட வாட்­டர்வே சன்­ரைஸ் 2 திட்­டம், இவ்­வாண்டு முதல் அல்­லது இரண்­டா­வது காலாண்­டில் முடிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

ஆனால் திட்­டத்­தைக் குத்­த­கைக்கு எடுத்த லியன் ஹோ லீ கட்­டு­மான நிறு­வ­னத்­தின் மோசான செயல்­பாட்­டால் அதை அடுத்த ஆண்டு முதல் இரண்டு காலாண்­டு­க­ளுக்­குள் முடிப்­ப­தற்கு முடிவு செய்­யப்­பட்­டது. குத்­தகை எக்ஸ்­பேண்ட் கன்ஸ்ட்­ரக்ட்­ஷன் எனும் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

ஆனால் கொவிட்-19 சூழல் ஏற்­ப­டுத்­திய ஊழி­யர் பற்­றாக்­குறை, வேண்­டிய கட்­டு­மா­னப் பொருட்­கள் கிடைக்­கா­தது போன்ற கார­ணங்­க­ளால் மேலும் தாம­தம் ஆனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!