இந்தியர் அனுபவித்தது சாதா‘ரணமல்ல’

சீனர்­கள்

அனு­ப­வித்த அளவுக்கு வன்­மு­றையை இந்­தி­யர்­கள் அனு­ப­விக்­க­வில்லை என்றாலும் இந்­தி­யர்­கள் அடைந்த

துன்­பத்தை சாதா­ர­ண­மாக எண்­ணி­வி­டக்

­கூ­டாது என்று தமிழ் முர­சி­டம் பகிர்ந்துகொண்டார் சிங்­கப்­பூர் தேசி­ய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த வர­லாற்­றுப் பேரா­சி­ரி­யர் ராஜேஷ் ராய் (படம்).

"தங்­க­ளது இயக்­கத்­தில் இந்­தி­யர்­களை ஈடு­ப­டுத்த விரும்­பிய ஜப்­பா­னி­யர்­கள், தாய்­லாந்து, மலே­சியா, இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­களில் தங்­க­ளது கட்­டு­மா­னத்­திட்­டங்­களில் இவர்­களை வலுக்­கட்­டா­ய­மாக வேலை­யில் அமர்த்­தி­னர்.

"சீனர்­களை வேலை­யில் சேர்த்­தால் கட்­டு­மா­னங்­க­ளுக்கு குண்டு வைத்து­வி­டு­வர் என்றெண்ணி இந்த வேலை­க்கு இந்­தி­யர்­க­ளையே தேர்ந்­தெ­டுத்­த­னர்," என்று பேரா­சி­ரி­யர் ராஜேஷ் கூறி­னார்.

களைப்பு, பசி, நோய், நச்சு விலங்­கு­கள் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இந்தியர்கள் தங்­க­ளது உயிரை இழந்­த­னர்.

"நோய்­வாய்ப்­பட்ட சிலர், குடி­சை­களில் வைக்­கப்­பட்டு தீயில் இடப்­பட்­ட­னர்," என்று அவர் கூறி­னார்

போருக்கு முன்­ன­தாக சிங்­கப்­பூ­ரில் தமி­ழர்­கள்

லிட்­டில் இந்­தியா, ஃபேரர் பார்க் மட்­டு­மின்றி கெப்­பல் ரோடு, செம்­ப­வாங் கடற்

­ப­டைத்­த­ளப் பகுதி, அட்­மி­ரல்டி போன்ற இடங்­களிலும் அதி­கம் இருந்­த­தை அவர் நினைவூட்டினார்.

ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்­புக்கு முன்­ன­தாக சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யர்­க­ளின் எண்­ணிக்கை கூடி இருந்­த­போ­தும் படை­யெ­டுப்பு முடி­வு­பெ­றும் கால­கட்­டத்­தில் அந்த எண்ணிக்கை 19 விழுக்­காடு குறைந்தது. அதேநேரம் சீனர்களின் எண்ணிக்கை இதற்கு நேர்­மா­றாக 9 விழுக்­காடு கூடி­ய­தா­க­வும் மலாய்க்­கா­ரர்­க­ளின் எண்ணிக்கை 11 விழுக்­காடு கூடி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"ஜப்­பா­னி­யர்­க­ளால் கணிச­ மான இந்­தி­யர்­கள் பலர் மடிந்­தது இதன்மூலம் தெரிய வரு­கிறது.

"நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ் தலை­மை­யில் இருந்த இந்­திய தேசிய ராணு­வம் தமி­ழர்­களை ஒருங்­கி­ணைக்க பாடு­பட்­டது. அந்த இயக்­கத்­தில் இந்துஸ்தானி முக்­கிய பயன்­பாட்டு மொழி­யாக இருந்­த­போ­தும் உரை­க­ளுக்­கும் ஆவ­ணங்­க­ளுக்­கும் தமிழ் மொழி­பெ­யர்ப்பு இருப்பதை உறுதி செய்­வ­தில் திரு சந்­தி­ர­போஸ் கண்­ணும் கருத்­து­மாக இருந்­தார்.

"தொடக்­கத்­தில் இந்த இயக்­கம் இந்­திய இனத்­த­வ­ருக்­குத் தெம்பு தந்­தது. ஆனால் பசி, வறுமை ஆகி­யவை அதி­க­ரித்து வந்­த­தால் காலப்­போக்­கில் ஜப்­பா­னிய ஆட்சி கசப்­பு­ணர்வை ஏற்­

ப­டுத்­தி­ய­து," என்று 'சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யர்­கள்' என்ற தமது நூலில் குறிப்­பிட்­டுள்­ளார் பேராசிரியர் ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!