குழந்தைகளால் கிடைத்த புதிய வாய்ப்பு

மீனாக்‌ஷி அர்ச்­சனா அண்­ணா­மலை, 30, 2020ஆம் ஆண்­டில் இரட்­டைக் குழந்­தை­க­ளுக்­குத் தாயா­னார்.

குழந்தை பெற்ற பிறகு வேலை­யில் தொடர்ந்து பணி­யாற்ற முடி­யுமா என்­பது அவ­ருக்­குத் தொடக்­கத்­தி­லி­ருந்தே யோச­னை­யாக இருந்­தது.

முழு நேர வேலை­யைப் பார்த்துக் கொண்டு, கைக்குழந்தைகளை­யும் பார்த்­துக்­கொள்­வது எளி­தல்ல. அதி­லும் இரட்­டைக் குழந்­தை­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வது அவ்­வ­ளவு எளி­தல்ல.

கொவிட்-19 காலத்­தில் கண­வர் இந்­தி­யா­வி­லும் இவர் சிங்­கப்­பூ­ரி­லும் இருக்­க­வேண்­டிய சூழ் நிலை­யில் வேலை­யை­யும் பிள்ளை களை­யும் சமா­ளிப்­பது மீனாக்­‌ஷிக்குப் பெரும் சவா­லாக இருந்­தது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் தனக்கு ஏற்ற, பொருத்­த­மான ஒரு வேலை யை அவர் தேடி­னார்.

சில மாதங்­களில் கூகல் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தில் கணக்கு மேலா­ள­ரா­கப் பணி­யாற்றும் வாய்ப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது.

அங்கே தாய்­மார்­க­ளுக்­குப் பல வச­தி­களும் சலு­கை­களும் தரப் படுகின்­றன. வீட்­டி­லி­ருந்­தும் பணி­பு­ரி­ய­லாம். பிள்­ளை­களை அலு­வ­ல­கத்­திற்­கும் அழைத்­துச் செல்­ல­லாம். அலு­வ­ல­கத்­தில் பிள்­ளை­கள் விளை­யா­டு­வ­தற்­காக ஒரு விளை­யாட்­டுத் திட­லும் இருக்­கிறது.

"வேலையை செய்­து­கொண்டே பிள்­ளை­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யா­க­வும் இருக்­க­வேண்­டும் என்ற என்னுடைய ஆசையை நிறை­வேற்ற வும் இந்த வேலை எனக்கு சிறந்த வாய்ப்­பாக அமைந்­தது," என்­கி­றார் மீனாக்‌ஷி.

"எத்­த­கைய வேலை­யாக இருந்­தா­லும், குடும்­பத்­தின் ஆத­ரவு இல்­லா­மல் ஒரு தாயால் தம் பணி­யில் மேம்­பட முடி­யாது," என்ற மீனாக்‌ஷி தன் இரட்­டைப் பிள்­ளை­களை பார்த்துக்­கொள்­வ­தில் பெற்­றோ­ரும் மாம­னார், மாமி­யா­ரும் பேரு­த­வி­யாக இருந்­ததை நன்­றி­யோடு குறிப் பிட்­டார்.

வேலைக்­குச் செல்­லும் அனைத்­துத் தாய்­மார்­க­ளுக்­கும் மன­தோரத்­ தில் ஒரு குற்­றவுணர்ச்சி எழும்.

"வேலை­யில் நாம் நூறு விழுக்­காடு முயற்­சி­யைத் தரு­கி­றோமா? அதே சம­யத்­தில் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்­கி­றோமா? போன்ற பல சிந்­த­னை­கள் நம் மன­தில் ஓடும்.

"ஒவ்­வொ­ரு­வ­ரின் வாழ்க்­கைச் சூழ­லும் வேறு­பட்­ட­தா­கவே இருக்­கும். ஆகவே, நம்­மால் முடிந்­த­தைத் தவ­றா­மல் செய்­ய­வேண்­டும். செய்ய இய­லா­த­வற்­றுக்கு நாம் நம்­மையே மன்­னித்­துக்­கொள்­ள­வேண்­டும்.

"அப்­போ­து­தான், நான் மன உளைச்சல் இல்­லா­மல் வேலை­யி­டத்­தில் மேம்­பட்டு பிள்­ளை­க­ளை­யும் சிறந்த வகை­யில் பரா­ம­ரிக்க முடி­யும்," என்­கிறார் மீனாக்‌ஷி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!