அவசரம், ஆள்பற்றாக்குறை

கொவிட்-19 தொற்று காலத்­திற்கு முன்­னர்­வரை வேலை­யி­டப் பாது­காப்பு சிறப்­பா­ன­தாக இருந்­தது என்று ஜேஓ­ஹெச் பாது­காப்பு ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலைமை ஆலோ­ச­கர் ஜேசன் ஓஹ் தெரி­விக்­கி­றார். கடந்த ஆண்டு வரை­யி­லான மூன்­றாண்டு கால வேலை­யி­டப் பாது­காப்பு நில­வ­ரத்தை அவர் ஒப்­பிட்­டார். இந்த மூன்­றாண்­டு­களில் 100,000 ஊழி­யர்­க­ளுக்கு ஒரு மர­ணம் என்று ஆகக் கீழ்­மட்­டத்­தில் சரா­சரி மரண விகி­தம் இருந்­த­தாக அவர் கூறு­கி­றார்.

அதன் கார­ண­மாக, 2028ஆம் ஆண்­டுக்­குள் 100,000 ஊழி­யர்­

க­ளுக்கு ஒன்­றுக்­கும் கீழ் மர­ணம் என்­னும் சிங்­கப்­பூ­ரின் இலக்கை நெருங்­கி­விட்­ட­தைப்­போல கடந்த ஆண்டு தோன்­றி­யது. நெதர்­லாந்து, சுவீ­டன், ஜெர்­மனி, பிரிட்­டன் போன்ற நாடு­களில் வேலை­யிட மர­ணம் இந்த அள­வி­லேயே உள்­ளது.

இந்த ஆண்டு வேலை­யிட மர­ணங்­கள் அதி­க­ரிப்­புக்கு ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யும் வேலையை முடிப்­ப­தற்­கான காலக்­கெ­டு­வும் முக்­கிய கார­ணங்­கள் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொவிட்-19க்குப் பின்­னர் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டை­யும் வேளை­யில் நிறு­வ­னங்­க­ளி­டம் அவ­ச­ரம் காணப்­ப­டு­கின்­றன. தேங்­கிக் கிடந்த வேலை­களை விரைந்து முடிக்­க­வேண்­டிய கட்­டா­யம் பல நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கிறது.

ஆனால், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக இருந்­த­போது தங்­கு­வி­டு­தி­க­ளுக்­குள் முடங்­கிக் கிடந்த ஊழி­யர்­கள் பலர், கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தும் அவர்­க­ளின் சொந்த நாடு­க­ளுக்­குத் திரும்­பி­விட்­ட­னர். இத­னால் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் பல நிறு­வ­னங்­கள் திண்­டா­டும் நிலை­யும் உள்­ளது.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் வேலை­யி­டங்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களில் பெரும்­பா­லா­னோர் அனு­பவ ஊழி­யர்­கள். எனவே, இந்த ஆண்­டின் மர­ணத்­திற்­கும் வேலை, பயிற்சி அனு­ப­வத்­திற்­கும் தொடர்­பில்­லா­தது­போ­லத் தெரி­கிறது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் கடந்த மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் கூறி­யி­ருந்­தார்.

அலட்­சி­யப் போக்­கு­டன் நடந்து­ கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில், இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் மனி­த­வள அமைச்சு புதி­தாக ஒரு நட­வ­டிக்கை எடுத்­தது.

வேலை­யி­டப் பாது­காப்­பில் கவ­னக்­கு­றை­வாக நடந்­த­தற்­காக சிஏடி அசோ­ஸி­யேட்ஸ், கேஹெச்சி டெவ­லப்­மெண்ட் ஆகிய நிறு­வ­னங்­க­ளின் பெயர்­களை அமைச்சு தனது ஃபேஸ்புக்­கில் அம்­ப­லப்­

ப­டுத்­தி­யது. மோச­மான, ஏற்­றுக்­கொள்ள இய­லாத நிலை­யில் அவற்­றின் வேலைத்­த­ளங்­கள் இருந்­த­தாக அமைச்சு அப்­ப­தி வில் கூறியது. அடிப்­படை பாது­காப்பு அம்­சங்­கள் கடைப்பிடிக்­கப்­ப­டா­தது அவற்­றில் நடத்­தப்­பட்ட சோத­னை­களில் தெரியவந்ததால் இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு எதிராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!