ஆடைகளுக்கு மறுவாழ்வு

மகன் நிவா­னின் முதல் பிறந்­த­

நா­ளுக்குப் பிறகு, கிட்­டத்­தட்ட ஐம்­பது கிலோ எடை­யி­லான துணி­கள் வீட்டை அடைத்­துக்­கொண்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­யுற்­றார் திரு­மதி கிரித்தி குப்தா.

ஓராண்­டி­லேயே நான்கு அள­வு ­க­ளைக் கடந்து வளர்ந்­து­விட்ட நிவா­னுக்கு ஆடை­கள் வாங்­கு­வது விலை­ அதி­க­மா­க­வும் இருந்­தது. இளம்­பெற்­றோர்­கள் எதிர்­நோக்­கும் இந்தச் சிக்கலைக் களைய, மறு­ப­ய­னீட்டு முறை­யில் இயங்­கும் 'நிம்பு' நிறு­வ­னத்தை திரு­மதி கிரித்தி தொடங்­கி­னார். இந்நிறு­வ­னம் புதிய ஆடை­க­ளை­யும், பயன்­ப­டுத்­திய ஆடை­க­ளை­யும் விற்­கிறது. தங்­க­ளி­டம் வாங்­கிய உடை­க­ளைப் பயன்­ப­டுத்­திய பின்­னர் தங்­க­ளி­டமே திரும்­பக் கொடுக்­க­வும் சலு­கைத் திட்­டத்­தின்­மூ­லம் பெற்றோரை ஊக்­கு­விக்­கின்­றது இந்­நி­று­வ­னம். திருப்­பிக் கொடுக்­கப்­படும் ஆடை­கள் பயன்­ப­டுத்­திய 'ப்ரீ-லவ்ட்' (Pre-loved) ஆடை­க­ளாக விற்­கப்­

ப­டு­கின்­றன. தொடக்கத்தில், பயன்­

ப­டுத்­திய ஆடை­கள் சுகா­த­ர­மற்­ற­வை­யாக, பழை­ய­தாக இருக்­கக்­கூ­டும் என்ற எண்­ணத்தை மாற்­று­வது இந்­நி­று­வ­னத்­தின் சவா­லாக இருந்­தது. நிம்பு கொவிட்-19 கால­கட்­டத்­தில் தொடங்­கப்­பட்­ட­தால், சுகா­தா­ரம் குறித்த அக்­கறை­கள் அதி­கம் இருந்­தன. பயன்­ப­டுத்­திய ஆடை­ களை முத­லில் விரும்­பாத சில இந்­தி­யப் பெற்­றோர்­கள், நிம்­பு­வின் மறு­ப­ய­னீட்டு முறை­யில் பய­ன­டைந்­த­பின் மனம் மாறி­யுள்­ள­தாகக் கூறி­னார் திரு­மதி கிரித்தி, 35.

அவ்­வாறு மனம் மாறி­ய­வர்­க­ளுள் ஒரு­வர், திரு­மதி ஷ்ருதி ராஸ்­தோகி, 34.

"எங்­க­ளது முதல் குழந்­தைக்கு எல்­லாம் புதி­தாக இருக்­க­வேண்­டும் என்று எண்ணி, போன தீபா­வ­ளிக்கு நிம்­பு­வில் ஒரு புது ஷெரா­ராவை வாங்­கி­னோம். ஆனால், நிம்­பு­வின் இணை­யத்­த­ளத்­தில் புதி­து­போல் உள்ள மறு­ப­ய­னீட்டு ஆடை­களை மற்­ற பிள்­ளை­கள் அணி­வதைக் கண்டு வியந்­தேன். இவ்­வாண்டு, எனது மக­ளின் முதல் பிறந்­த­

நா­ளுக்கு நிம்­பு­வி­லி­ருந்து பயன்­

ப­டுத்­திய ஆடையை வாங்­கி­னேன். நிலைத்­தன்­மை­யைக் கருத்­தில்­கொண்டு அவள் வளர்­வ­தற்கு இது ஒரு தொடக்­கம்," என்­றார் திரு­மதி ஷ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!