ஒருநாள் கூத்துக்கு விடை; வாடகைக்கு உடை

ஒரு­நாள் கூத்­துக்கு புத்­தாடை வாங்­கு­வா­னேன் என்­கின்­ற­னர் திரு­மண ஆடை, ஆப­ரண வாடகை சேவை­களை வழங்­கும் நிறுவனங்களின் உரி­மை­யா­ளர்­கள். திரு­ம­ணச் சேலை­களும் ஜிப்­பாக்­களும் பொது­வாக வேலைப்­பா­டு­கள் நிறைந்­த­தா­க­வும் கன­மா­ன­தா­க­வும் இருக்­கும். அவற்றை அணி­வ­தற்கு ஏற்ற வேறு இடங்­களும் விழாக்­களும் பெரும்­பா­லும் அமை­

வ­தில்லை. எனவே, ஒரு­மு­றைப் பயன்­பாட்­டுக்கு முழு­வி­லை­யும் கொடுத்து உடை­களை வாங்­கா­மல் வாடகை எடுக்­கும் வச­தியை வழங்­கு­கின்­ற­னர் இவர்­கள்.

லிட்­டில் இந்­தி­யா­வின் கஃப் ரோட்­டி­லி­ருக்­கும் 'மஸ்­தானி பிரை­டல்' கடை­யின் திரு­மண ஆடை வாடகை சேவையை ஈராண்­டு­க­ளுக்கு முன் தொடங்­கி­னார் திரு­மதி சகிலா. லெஹங்கா, ஷெர்­வானி உடை­களை அவற்­றுக்­குப் பொருத்­த­மான ஆப­ர­ணங்­க­ளோடு இக்­க­டை­யில் வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ள­லாம்.

பல­முறை பயன்­ப­டுத்­திய லெஹங்­காக்­க­ளின் சரி­கை­கள் முத­லி­ய­வற்றை அகற்­றி­விட்டு, அவற்றை புதிய பாணி­யி­லான ஆடை­க­ளா­க­வும் மஸ்­தானி பிரை­டல் தயா­ரிக்­கின்­றது. சில சம­யங்­களில் மீத­முள்ள துணி­யைக் கொண்டு, உடல் பரு­ம­னான பெண்­க­ளுக்கு ஆடை­கள் தயா­ரிப்­ப­தும் உண்டு என்­றார் கடை மேலா­ளர் செல்வி சுஜிதா நாயர், 33.

"எதிர்­கா­லத்­தில் மஸ்­தானி பிரை­டலை விரி­வு­ப­டுத்­தி­னா­லும், அது நிச்­ச­யம் நிலைத் ­தன்­மையை மைய­மாகக் கொண்­டி­ருக்­கும்," என்று கூறினார் திரு­மதி சகிலா.

திருமணம், விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஆடைகளை வாடகைக்குக் கொடுக்கும் மற்றுமொரு நிறுவனமான 'கிளேமர்டால்', 2018ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு தீபாவளியின்போதும் புதுப்புது வடிவமைப்புகள் பிரபல மாவதால் மிக விரைவில் இந்தியப் பாரம்பரிய ஆடை கள் களை இழந்துவிடுகின்றன. அதனால், புதிய ஆடைகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போகின்றன. இவ்வாறு அதிகம் பயன்படுத்தப்படாத ஆடைகளை 'கிளேமர்டால்' வாடகைக்குக் கொடுக்கி றது. ஒரு லெஹங்காவை எட்டிலிருந்து பத்து முறை வாடகைக்குக் கொடுக்கின்றது. வேறொருவர் அணிந்த ஆடைகள் வாங்குவதை கௌரவக்குறை வாக சிலர் நினைப்பதை சுட்டிய கடை உரிமையாளர் திருமதி ஃபரிதா ஷப்பர், 42, (படம்), "ஆடைகளை தகுதியின் சின்னமாகக் கருதுவது மாறினாலே, துணி விரயத்தைக் குறைப்பது எளிதாகிவிடும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!