அழிப்பின்றி செழிப்பு காண விழிப்படைவோம்

இன்று தொடங்கவுள்ள ஐக்கிய நாட்டு அமைப்பின் பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP27) பசுமை இலக்குகளை எட்டு வதன் தொடர்பில் உலகத் தலைவர்கள் கூடிப் பேச உள்ளனர். பருவநிலை மாற்றம் உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், நீடித்த நிலைத்தன்மையுடைய ஓர் எதிர்காலத்தை உருவாக்க, சிங்கப்பூரும் ‘பசுமைத் திட்டம் 2030’ போன்ற பெருமுயற்சி களில் ஈடுபட்டு வருகிறது. பசுமைத் திட்டங் களுக்குக் கைகொடுக்கும் வகையில், இயற்கை வளங்களின் மீள்திறனை உணர்ந்து தங்களின் நிறுவனங்களின் மூலம் பசுமைப் புரட்சி புரியும் நால்வரைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.

ஆர்­வமே ஒரு­வ­ரது ஆற்­றலை வெளிப்­

ப­டுத்­தும் கருவி என்­கி­றார் பசு­மை­யாக்­கு­தலை வாழ்க்­கைத்­தொ­ழி­லா­கக் கொண்­டுள்ள திரு வீர­சே­க­ரன். நகர்ப்­பு­றங்­க­ளைப் பசு­மை­யாக்­கும் ‘கிரீ­னோ­லஜி’ (Greenology) நிறு­வ­னத்­தைக் கடந்த 15 ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கி­றார் இவர்.

பாலர் பரு­வத்­தில் வறு­மை­யின் பிடி­யில் சிக்­கி­ய­வர்­தான் வீரா. இவர் ஐந்து வய­தாக இருந்­த­போது துப்­பு­ர­வுத் தொழி­லா­ளி­யா­க­வும் தோட்­டக்­கா­ர­ரா­க­வும் வேலை பார்த்த இவ­ரின் தந்தை உயி­ரி­ழந்­தார். எட்டு சகோ­த­ரர்­க­ளு­டன் வளர்ந்த இவ­ருக்கு, பள்­ளிப்­ப­ரு­வத்­தில் புதிய கரும்­

ப­லகை, புத்­த­கம், சீருடை இவை­யெல்­லாமே எட்­டாக்­க­னி­க­ளா­கவே இருந்­தன. இருப்­பி­னும் விடா­மு­யற்­சி­யைக் கைவி­டாது தமது கல்­வியை மட்­டுமே நம்பி முன்­னே­றி­னார்.

தற்­போது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்து வரும் வீரா, 60, இன்­ற­ள­வும் தன்னை ஒரு மாணவனா­கவே கரு­து­கி­றார்.

இயற்கை ஆர்­வ­ல­ரான இவர், ஒவ்­வொரு நாளும் பசு­மை­யி­யல் துறை­யில் புத்­தாக்­கத்­தை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் புகுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். ஒரு­வர் தமது அறி­வை­யும் அனுபவத்­தை­யும் அடுத்­த­வர் நல­னுக்­காக பயன்­ப­டுத்­தத் தவ­று­வது பொறுப்­பற்ற செயல் என்று கூறு­கி­றார்.

தனது ‘கிரீ­னோ­லஜி’ வர்த்­த­கத்­தின் மூலம் சிங்­கப்­பூ­ரின் குறைந்த நிலப்­ப­ரப்­புக்­குத் தீர்­வாக, ‘செங்­குத்­துப் பசுமை’ (Vertical Greening) எனப்­படும் செங்­குத்­தான சுவர்­களில் செடி­களை வளர்க்­கும் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­னார்.

இவ­ரின் நிறு­வ­னத்­தின் மூலம் வீடு­கள், அர­சாங்க, தனி­யார் நிறு­வ­னங்­கள், வணிக வளா­கங்­கள், பள்­ளிக்­கூ­டங்­கள், கல்­லூரி வளா­கங்­கள், நில உரி­மை­யா­ளர்­கள் என சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு தரப்­பி­ன­ருக்­குச் செங்­குத்­தான செடி­வ­ளர்ப்பு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தானி­யங்கி சொட்­டு­நீர் பாசன முறை­யில் செடி­க­ளுக்­குப் போது­மான தண்­ணீர் பாய்ச்­சப்­ப­டு­வ­தால் செடி­க­ளைப் பரா­ம­ரிப்­பது எளி­மை­யா­கி­யுள்­ளது. அதோடு பல­

வ­கை­யான ஊட்­டச்­சத்­து­க­ளைக் கொண்ட தனித்­துவ மணல் கல­வை­யும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. பசுமை சார்ந்த துறை­கள் பல­வற்­றில் இவ­ரின் இணை நிறு­வ­னங்­களும் கால்­ப­தித்து வரு­கின்­றன.

‘வெர்­டி­வெ­ஜிஸ்’ (Vertiveggies) எனும் இவ­ரின் இணை நிறு­வ­னம், நகர்ப்­புற விவ­சா­யத்­தின்­வழி கட்­ட­டங்­க­ளின் உட்­பு­றச் சூழ­லில் காய்கறி­களை வளர்க்­கிறது. நிலத்­தில் வள­ரும் காய்­க­றி­களில் உள்ள அதே ஊட்­டச்­சத்­து­களை ‘வெர்­டி­வெ­ஜிஸ்’ வளர்க்­கும் காய்­க­றி­களும் கொண்­டி­ருக்­கின்­றன.

மண்­ணின் ஈரப்­ப­தம், பயன்படுத்­த­ வேண்­டிய உரம், தேவை­யான தண்­ணீர் உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்­க­ளைச் செயற்கை நுண்­ண­றி­வின் வழி­யா­க­வும் ‘சென்­சார்’ அடிப்­ப­டை­யி­லான தொழில்­நுட்­பங்களின் வழி­யா­க­வும் அறிந்­து­கொள்­ளும் வச­தி­யும் உண்டு.

திரு வீரா­வின் பசுமை நுண்­ண­றி­வுக் கட்­ட­மைப்பு, இயற்­கைச் சூழ­லைப் புரிந்­து­ கொள்­வ­தற்­குத் தேவை­யான தர­வு­க­ளைத் தொழில்­நுட்ப ரீதி­யா­கச் சேக­ரித்து அவற்­றைப் பகுப்­பாய்­வும் செய்து தரு­கிறது.

தனது பசு­மைப் புரட்­சிப் பய­ணத்­தில் சிங்­கப்­பூர் மட்­டு­மன்றி பாகிஸ்­தான், மொராக்கோ, சீஷெல்ஸ், ஆப்­பி­ரிக்கா, வியட்­னாம், சீனா, இந்­தியா, மலே­சியா, இந்­தோ­னீ­சியா, கம்­போ­டியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் பரந்த அள­வி­லான இயற்கை ஆலோ­ச­னைத் திட்­டங்­களை திரு வீரா வழங்கி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!