தோற்றமும் சுவையும் மட்டுமே அசைவம்

தோல்வி அடை­வீர்­கள், நிறைய இழப்பீர்கள் என்பன போன்ற முன்னேற்றத் தடை வார்த்தை களை தவி­டு

­பொ­டி­யாக்கி­ முன்னேறியவர் சந்­தியா ஸ்ரீராம், 37.

'செல்' அடிப்­ப­டை­யிலான இறைச்சியைத் தயாரிக்கும் 'ஷோக் மீட்ஸ்' (Shiok Meats) நிறு­வ­னத்தின் இணை நிறுவனர் இவர். 2018ல் தொடங்­கப்­பட்ட இந்­நி­று­வ­னம், தென்­கி­ழக்­கா­சி­யா­வில் முதல் 'செல்' அடிப்­ப­டை­யி­லான இறைச்சி தயாரிப்பு நிறு­வ­னம் என்­ற பெரு­மைக்­கு­ரி­யது.

தோழி­யு­டன் இணைந்து தொடங்­கிய­ நி­று­வ­னத்­தில் தற்­போது 30க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் பணி­பு­ரி­கின்­ற­னர். மூல உயி­ரணு (ஸ்டெம் செல்) விஞ்­ஞா­னி­யான சந்­தியா, இந்­நி­று­வ­னத்­தைத் தொடங்­கிய நேரத்­தில் சிங்­கப்­பூ­ரின் அறி­வி­யல், தொழில்­நுட்­பம் மற்­றும் ஆராய்ச்சி நிறு­வ­னத்­தில் அதிக ஊதி­யம் ஈட்டித்­தந்த முழு­நே­ரப் பணி­யி­லி­ருந்து வில­கி­னார்.

ஆராய்ச்­சி­யா­ள­ரா­கப் பணியாற்றி யபோது உயி­ரணு அடிப்­ப­டை­யி­லான இறைச்­சி­க­ளைப் பற்றி இவர் அறிந்து­கொண்­டார். உண­வுப்­பி­ரி­ ய­ரான இவர், தமது அறி­வி­யல் திற­னை­யும் உண­வின் மீதுள்ள விருப்­பத்­தை­யும் இ­ணைக்க எண்­ணி­னார். அதுவே 'ஷோக் மீட்ஸ்' தொடங்­க பாதை போட்டது.

நண்டு, இறால், சிவப்பு இறைச்சி போன்­ற­வற்­றைப்போல் உள்ள அசைவ உணவு வகை­கள் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­

ப­டுத்தி உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. இந்த உயி­ரி­னங்­க­ளின் மூல உயி­ர­ணுக்­கள் பெரிய தொட்­டி­களில் வளர்க்­கப்­ப­டு­கின்­றன. ரத்­தம் உள்­பட செயற்கை முறை­யில் அவ்­வ­ணுக்­களில் ஊட்­டச்­சத்­து­களும் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. நான்­கி­லி­ருந்து ஆறு வாரங்­

க­ளுக்­குப் பிறகு உரு­வா­கும் இறைச்சி, தோற்­றத்­தி­லும் ருசி­யி­லும் அச­லான இறைச்சி போலவே இருக்­கும்.

'ஷோக் மீட்ஸ்' நிறு­வ­னத்­தைத் தொடங்­கு­வ­தற்கு முன் ஒரு முத­லீட்­டா­ள­ரு­டன் நடந்த சந்­திப்பே சாதிக்க வேண்­டும் என்ற உற்­சா­கத்­தைத் தமக்­குத் தந்­த­தாக சந்­தியா கூறினார். தமது பாலி­னத்­தை­க் குறிப்பிட்டு மதிப்­பீடு செய்த போது அந்த முத­லீட்­டா­ள­ரைப் போன்­ற­வர்களே வியப்படையும் வகையில் வெற்றிபெற வேண்­டும் என்ற வேட்கையை தாம் பெற்­றதாக நினை­வு­கூர்ந்­தார் சந்­தியா (படம்).

தொழில்­மு­னை­வ­ராக இருக்­கும் அதே­நே­ரத்­தில் தமது தாய்மைப் பொறுப்­புக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றார் இவர். வெவ்­வேறு பணி­களை மேற்­கொள்­ளு­தல், திட்­ட­மி­டல், சுறு­சு­றுப்­பு­டன் செயல்­ப­டு­தல், பிறரை அணு­கு­தல் போன்ற தலை­மைத்­து­வப் பண்­பு­கள்தான் ஒரு தாயான பிறகு தனக்­குள் உரு­வா­ன­தா­கப் பெரு­மி­தத்­து­டன் பகிர்ந்­தார்.

இவர் 2021ஆம் ஆண்­டிற்­கான 'பீக் பவர்' பட்­டி­ய­லி­லும் 'புளூம்­பெர்க் நியூ எக்க­னாமி கேட்­ட­லிஸ்ட்ஸ்' பட்­டி­ய­லி­லும் இடம்­பெற்­றுள்­ளார். மேலும் தொழில்­மு­னை­வர்­க­ளுக்­கான 'நிக்கி ஏஷியா'வின் விரு­தை­யும் வென்­றுள்­ளார் சந்தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!