குப்பை வடிவில் இயற்கைவளப் புதையல்

நாம் குப்­பை­ என தின­மும் தூக்­கி­யெ­றி­யும் பொருள்களின் மதிப்­பை­யும் பய­னை­யும் பலர் அறி­வ­தில்லை என்கிறார், கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­யும் 'ஷனாயா' குழு­மத்­தின் நிறு­வ­னரான திரு முஹம்­மது கனி முஹம்­மது அன்­சாரி.

25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக கழி­வு­க­ளால் சுற்­றுப்­பு­றம்மீது ஏற்­படும் தாக்­கத்­தைக் குறைக்­க­வும் சுற்­றுச்­சூ­ழலை மேம்­ப­டுத்­த­வும் பல உத்­தி­க­ளை இவர் கையாண்டு வரு­கி­றார். தொழிற்­சா­லை­க­ளி­லும் நிறு­வ­னங்­க­ளி­லும் சேக­ரிக்­கப்­படும் கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்து அகற்­று­வதே ஷனாயா குழு­மத்­தின் முக்­கி­யப் பணி­. குறிப்­பாக, இக் ­கு­ழு­மத்­தின் 'ஷனாயா என்­வாய்­ர­மெண்­டல் சர்­வீ­சஸ்' நிறு­வ­னம், கப்­பல்­களில் கழி­வு­க­ளைச் சேக­ரித்து அவற்றை மறு­சு­ழற்­சிக்­குத் தயார் செய்­கிறது.

"இன்­றைய சூழ­லில் இயற்­கை­யைப் பாது­காக்­க­வும் வளங்­க­ளின் நிலைத்­தன்­மையை தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் கழிவு நிர்­வா­கம் அத்தி­ யா­வ­சி­ய­மா­னது. புள்­ளி­வி­வ­ரங்­

க­ளின்­படி சரா­ச­ரி­யாக நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு நாளில் அரை கிலோ வரை கழி­வு­கள் உரு­வா­கக் கார­ண­மாக இருக்­கி­றோம்.

"இக்­க­ழி­வு­க­ளை சரி­யானமுறை­யில் கையாண்டு அவற்­றுக்கு மறு­சு­ழற்சி மூலம் புத்­து­யிர் தந்து கழிவு நிர்­வா­கக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வதே எனது வாழ்­நாள் லட்­சி­யம்," என்று கூறு­கி­றார் திரு அன்­சாரி.

சவூதி அரே­பி­யா­வில் விளம்­பர மேலா­ள­ராகப் பணிபுரிந்த இவர், 12 ஆண்­டு­க­ளுக்­குப் பின் இயற்கை மீதும் அதன் பாது­காப்­பின்மீதும் கொண்ட நாட்­டத்­தால் முழு­நே­ரச் சுற்­றுச்­சூ­ழல் நிபு­ணராக உரு வெடுக்க முடி­வெ­டுத்­தார். நிலை­யான மாத வரு­மா­னம் ஈட்­டும் வேலையை உத­றித் தள்­ளி­விட்டு, இந்­தத் தொழிலை திரு அன்­சாரி தேர்ந்­தெ­டுத்­த­போது பலரும் கேலி செய்­த­னர்.

பெரும்­பா­லா­னோர் இதனை அசுத்­த­மான ஒரு தொழி­லா­கப் பார்த்­த­போது இவர் மட்­டும் இதை இயற்கைவளங்­களை மீட்­டெ­டுக்­கும் ஒரு புதையலாகக் கரு­தி­னார்.

மனை­வி­யு­டன் சிறிய வாடகை இடத்­தில் ஒரே ஒரு கொள்­க­லன் கொண்டு இந்­நி­று­வ­னத்­தைத் தொடங்­கி­னார். இன்று இந்­நி­று­

வ­னம் 30க்கும் அதி­க­மான ஊழி­யர்­க­ளு­டன் ஏறத்­தாழ 113,000 சதுர அடி நிலப்­ப­ரப்­பில் கழிவு நிர்­வா­கம் மற்­றும் சுத்­தி­க­ரிப்பு வச­தி­க­ளைக் கொண்ட வளா­க­மாக இயங்­கி­வ­ரு­கிறது. கப்­பல்­க­ளி­லி­ருந்து பெறப்­படும் கழி­வு­கள் மட்­டும் 29 வகை­கள் உள்­ளன. இக்­க­ழி­வு­களை வகைப்­ப­டுத்­தும் கட்­ட­மைப்பை நிறு­வ­னம் கொண்­டுள்­ளது. தற்­போது இந்­நி­று­வ­னம் 'கேஎ­ஃப்சி' உண­வ­கம் மற்­றும் 'டிஆர்­ஐஏ' என்ற உள்­ளூர் தொடக்க நிறு­

வ­னத்­து­டன் இணைந்து கழி­வு­களை இயற்கை விவ­சாய உர­மாக மாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கிறது. சிங்­கப்­பூ­ரின் இரு கேஎ­ஃப்சி கிளை­களில் இதற்­கான சோத­னைத் திட்­டம் நடந்­து­வ­ரு­கிறது.

சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்­காக கழி­வு­க­ளின் தாக்­கத்­தைக் குறைப்­பது அவ­சி­யம் என்று கூறும் திரு அன்­சாரி, சரி­யான தொழில்­நுட்­ப­மும் திற­மை­யான நிர்­வா­கத்­தி­ற­னும் இருந்­தால் இத்­தொ­ழி­லில் நிச்­ச­யம் சாதிக்க முடி­யும் என்று நம்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!