குடும்ப ஆதரவால் குறை நிறையாகலாம்

பிறந்த சில மாதங்­க­ளி­லேயே லுக்­கஸ் வருண் புடிக்­கிற்கு (படம்) பெரு­மூளை வாதம் ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது. தற்­போது ஏழு வய­தா­கும் இவர், பாலர் பள்­ளி­யில் பயில்­கி­றார்.

பிர­ச­வத்­தின்­போது தனக்கு ஏற்­பட்ட ஆக்­சி­ஜன் குறை­பாடு இதற்­குக் கார­ணா­மாக இருக்­க­லாம் என மருத்­து­வர் குறிப்­பிட்­ட­தா­கக் கூறி­னார் வரு­ணின் தாயார் ஹேமா கந்­த­சாமி.

தந்தை மைக்­கல் புடிக், ஆஸ்ட்­ரிய நாட்­டைச் சேர்ந்­த­வர். இரு­வ­ருக்­கும் கியாரா புடிக் என்ற மூன்று வயது மகளும் இருக்­கி­றார்.

தங்­கை­யால் ஓட முடி­கிறது தன்­னால் ஏன் முடி­ய­வில்லை என்று ஒப்­பிட்­டுப் பார்த்து வருண் வருந்­து­வ­தாகக் கூறி­னார் ஹேமா.

பாலர் பள்­ளி­யில் சில சம்­ப­வங்­கள் தன்­னம்­பிக்­கை­யைக் குலைத்­தா­லும் வரு­ணுக்­குத் தேவை­யான ஊக்­கத்­தைத் தொடர்ந்து பெற்­றோர் இரு­வ­ரும் தரு­கின்­ற­னர். தமிழ், ஆங்­கி­லம், ஜெர்­மன், மாண்­ட­ரின் உள்­ளிட்ட மொழி­களை வருண் புரிந்­து­கொண்டு பேச வல்­ல­வர். தாள வாத்­தி­யங்­களை வாசிப்­ப­தி­லும் நீச்­ச­ல­டிப்­ப­தி­லும் அதிக ஆர்­வம் உண்டு. அவற்­றுக்­கான பயிற்சி வகுப்­பு­க­ளின்­போது வருண் கற்­றுக்­கொள்­ளும் வேகம் அதி­க­ரித்­துள்­ள­தா­கப் பயிற்சி ஆசி­ரி­யர்­கள் கூறி­னர்.

முடிந்­த­வரை மக­னுக்­கும் மக­ளுக்­கும் இடையே வேறு­பாடு பாராட்­டா­மல் வளர்ப்­ப­து­டன் தன்­னம்­பிக்­கையை ஊட்டி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் தந்தை மைக்­கல்.

நடை­வண்டி உத­வி­யோடு நடக்­கும் வருண் இயக்­கத்­தி­றன் சிகிச்சை, உட­லி­யக்க சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்கிறார்.

'ஹீலிங் வித் ஹார்­சஸ்' அமைப்பு வழங்­கும் குதி­ரை­களை மையப்­படுத்­தும் சிகிச்சை மூலம் வருணின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ­ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் கூறினர்.

எதிர்­கா­லத்­தில் யாருடைய தய­வு­மின்றி வாழ்­வ­தற்கு இவ­ரைத் தயா­ர்ப்­ப­டுத்தி, அனைத்து வகை­யி­லும் உகந்த சூழலை ஏற்­ப­டுத்­தித் தரு­வதே தங்­க­ளின் நோக்­கம் என்­கின்­ற­னர் வரு­ணின் பெற்­றோர்.

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாங்க முயற்சிகளில் சில:

1973: சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மன்றம்.

1980: கார்ப்பேட்டை வில்லை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள்.

1991: முன்னணி மருத்துவமனைகளில் வளர்ச்சிக் குறைபாடுகளை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதற்குச் சிறப்பு மதிப்பீட்டுப் பிரிவுகள் தொடக்கம்.

1999: மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில்நுட்பச் சாதனங்களை வாங்க 'துணைபுரியும் தொழில்நுட்ப நிதி' திட்டம்.

2005: குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்காக சிறப்பு மாற்றுத்திறனாளிகள் தகவல், பரிந்துரை மையம்.

2006: பொதுப் பேருந்தில் சக்கர நாற்காலியில் செல்ல வசதி.

2007: மாற்றுத்திறனாளிகள் வழக்கநிலை உயர்நிலைக் கல்வியை முடிப்பதற்கான வயதுவரம்பு 21க்கு உயர்வு.

2014: மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்துச் சலுகை அட்டை.

2019: பெருவிரைவு ரயில் நிலையங்கள், இலகு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் குறைந்தது ஒரு தடையற்ற அணுகல் வழி.

2022: மதியிறுக்க பாதிப்பு உள்ளோருக்கான ஏழு சிறப்புப் பள்ளிகள் அறிவிப்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!