உலக எறியம்பு (Darts) வெற்றியாளராவதற்கான அரிய வாய்ப்பை நழுவ விட்டாலும், 70 வயதாகும் சிங்கப்பூரரான பால் லிம், அப்போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆக வயது மூத்தவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார்.
இறுதிப் போட்டியில் திரு லிம், அயர்லாந்தின் ஷேன் மெக்குயர்க்கிடம் 6-3 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வி கண்டு, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். அவருக்கு 16,000 பவுண்ட் (S$27,300) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
“நான் தோற்றாலும், விட்டுக்கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு போட்டியிலும் நான் பங்கேற்பேன்,” என்று உற்சாகத்துடன் கூறினார் திரு லிம்.


