லண்டன்: கான்ஃபரன்ஸ் லீக் கிண்ணத்தில் செல்சி அணி ஆர்மினியாவைச் சேர்ந்த நோவா அணியை 8-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது.
நவம்பர் 7ஆம் தேதி பின்னிரவுக்கு பின் நடந்த இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே செல்சி அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 12, 13, 18, 21 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்த செல்சி அணி நோவா அணியை சிதைத்தது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கோல் ஏதும் கொடுக்காமல் விளையாடிய நோவா குழு 39, 41வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் போட விட்டுக்கொடுத்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்று முன்னிலை பெற்றது செல்சி. இரண்டாவது பாதியிலும் கோல் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் நோவா குழு சற்று தாக்குப்பிடித்து விளையாடியது. ஆனாலும் அதனால் கோல்களை தடுக்க முடியவில்லை. 69வது நிமிடத்தில் ஏழாவது கோலை அடித்த செல்சி 76வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பையும் கோலாக மாற்றியது.
செல்சியின் ஜோ ஃபெலிக்ஸ், கிறிஸ்ஃடபர் குன்கு தலா இரண்டு கோல்கள் அடித்தனர்.
கான்ஃபரன்ஸ் லீக் கிண்ணத்தின் புள்ளிப் பட்டியலில் செல்சி அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

