பெங்களூரு: இரு வாரங்களுக்குமுன் கொரோனாவிடம் தாயை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி இப்போது மூத்த சகோதரியையும் பறிகொடுத்துவிட்டார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி இவரின் தாயார் செலுவம்பா தேவி மரணமடைந்தார்.
இந்நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக கர்நாடக மாநிலம், சிக்கமளூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேதாவின் சகோதரி வத்சலா, 45, கடந்த புதனன்று உயிரிழந்தார்.
அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்குமுன் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.
அத்தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 48 ஒருநாள் போட்டிகளிலும் 76 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள வேதாவிற்குத் 'கொவிட்-19 தொற்று இல்லை’ எனப் பரிசோதனையில் உறுதியானது.