இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் மகேந்திர சிங் டோனியின் அரண்மனை போன்ற பண்ணை வீட்டுப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த வீட்டின் படங்களை டோனியும் அவரின் மனைவி சாக்ஷியும் அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில்தான் தன் மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் டோனி வசித்து வருகிறார். படம்: டிஎன்ஏ இந்தியா

பெரிய படுக்கையைக் கொண்ட படுக்கையறையில் நவீன வசதிகளும் உள்ளன. படம்: டிஎன்ஏ இந்தியா

கண்கவர் தொங்குவிளக்குகளுடன் அரண்மனையில் இருப்பது போன்ற உள்அலங்காரத்துடன் காட்சியளிக்கும் டோனியின் பண்ணை வீட்டில் ஒரு பெருந்தோட்டமும் உள்ளது. படம்: டிஎன்ஏ இந்தியா

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், விருந்தினர்களுடன் செலவிடத் தனி இடமும் இந்தப் பண்ணை வீட்டில் உண்டு. படம்: டிஎன்ஏ இந்தியா