இந்தியப் பெண்கள் அணி உலகக் கிண்ணத்தை வென்றவுடன் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை, டெல்லி, சென்னை, பஞ்சாப் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள ரசிகர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விளையாட்டு அரங்கிலும் ரசிகர்கள் உணர்ச்சி பொங்க ஏ.ஆர். ரகுமானின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி மகிழ்ந்தனர். நவி மும்பையின் டிஒய் பாட்டில் விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தைக் கிட்டத்தட்ட 45,000 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
“இந்த வெற்றி பல பெண் விளையாட்டாளர்களை உருவாக்கும். பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபட இது ஊக்கம் தரும். கிரிக்கெட் மட்டுமல்லாது மற்ற விளையாட்டுகளும் விரைவில் பிரபலமாகும்,” என்று ரசிகர்கள் கூறினர்.

