காற்பந்து: உஸ்பெகிஸ்தானிடம் லயன்ஸ் குழு தோல்வி

சவூதி அரேபியா: குழுவின் முதுகெலும்பாக விளங்கும் முக்கிய வீரர்களின்றி காற்பந்து உலக தரவரிசையில் 159ஆம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூரின் லயன்ஸ் குழு 86ஆம் நிலையில் இருக்கும் உஸ்பெகிஸ்தானுடன் இன்று அதிகாலை மோதியது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம் இது. தரவரிசையில் உள்ள பெரிய வித்தியாசம் ஆட்டத்திலும் தெரிய, அதிக நேரம் எடுக்கவில்லை.

பாலஸ்தீனக் குழுவிடம் சென்ற வியாழக்கிழமை 0-4 என்ற கோல் எண்ணிக்கையில் லயன்ஸ் குழு தோற்ற பிறகு, குழுவில் ஐந்து மாற்றங்களைச் செய்தார் பயிற்றுநர் டாட்சுமா யொஷிடா.

தற்காப்பு அரணாக மூன்று வீரர்களை நிறுத்தி தாக்குதலுக்கு இல்ஹான் ஃபாண்டிக்குப் பதில் ஃபாரிஸ் ராம்லியை விளையாட வைத்தார்.

ஆனால், முடிவு என்னவோ பாலஸ்தீனத்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்ததைப் போன்றே இருந்தது பலருக்கு வியப்பை அளிக்கவில்லை.

முதல் பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்களை விட்டுக்கொடுத்த லயன்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த தற்காப்பு ஆட்டக்காரர் சஃபுவான் பகருதின், முனைப்புடன் விளையாடக்கூடிய மத்திய திடல் ஆட்டக்காரர் ஹாரிஸ் ஹருண், சமயம் பார்த்து தாக்குதல் நடத்தக்கூடிய இக்சான் ஃபாண்டி போன்றோர் இல்லாமல் தவித்தது ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தது.

அந்த மூன்று வீரர்களும் காயம் காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களாலும் விளையாட இயலாமல் போனது.

ஆட்டம் பற்றிக் கருத்துரைத்த யொஷிடா, முன்னைய ஆட்டத்தைக் காட்டிலும் லயன்ஸ் குழுவினர் நன்றாக விளையாடியபோதும் எதிரணியிடம் இருந்த தரத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றார்.

ஆட்டம் தொடங்கியவுடன் தாக்குதலில் லயன்ஸ் குழு சிறிது முனைப்புக் காட்டியபோதிலும் உஸ்பெகிஸ்தான் குழு தனது முதல் கோலை போட ஆறு நிமிடங்களே எடுத்துக்கொண்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் ஃபாஹ்த் அனைத்துலக அரங்கில் இக்ரோம்ஜோன் அலிபாயேஃப் குறி பார்த்து கொடுத்த பந்தை ஜலோலிடின் மாஷரிபோவ் என்ற வீரர் அதை லாவகமாக லயன்ஸ் கோல் வலைக்குள் செலுத்தினார்.

இவரே பின்னர் ஆட்டத்தின் 36ஆம் நிமிடத்தில் உதைத்த பந்து மது மோகனாவின் கால்களுக்கு நடுவே சென்று கோல் வலைக்குள் புகுந்தது. இதைத் தொடர்ந்து முதல் பாதி கூடுதல் நேரத்தில் தொடர, எல்டோர் ஷோமுரோடோவ் என்பவர் தமது பங்குக்கு மேலும் ஒரு கோல் போட்டார்.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே உஸ்பெகிஸ்தான் அணித் தலைவர் ஒடில் அகமடோவ், கோல் போட்டு 4-0 என கோல் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆட்ட முடிவில், 89ஆம் நிமிடத்தில் இர்ஃபான் ஃபாண்டியின் மேல் மோதி பந்து வலைக்குள் விழ ஆட்டம் 0-5 என லயன்ஸ் குழுவுக்கு எதிராக முடிந்தது.

லயன்ஸ் குழுவுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு பெனால்டி வாய்ப்பை தர மறுத்தார் ஆட்ட நடுவர்.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் அடுத்ததாக சவூதி அரேபியா அணியை வரும் ஜூன் 12ஆம் தேதி லயன்ஸ் குழு சந்திக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!