மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கிறிஸ் கெயில்

சிட்னி: சிறந்த அதி­ரடி பந்த­டிப்­பா­ளர்­களில் ஒரு­வர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்­டீசை சேர்ந்த இவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்போர்னில் நடை­பெற்று வரும் பிக்­பாஷ் 20 ஓவர் போட்­டி­யில் விளை­யாடி வரு­கிறார். இந்தப் போட்­டி­யின் இடையே ஆஸ்­தி­ரே­லிய தொலைக்­காட்சி ஒன்­றின் பெண் நிரு­பர், மெக்­மெக்­லின் கெய்­லி­டம் பேட்டி எடுத்­தார். அப்­போது கிரிக்கெட் வீரர் கெய்ல், அவரைப் பேட்டி கண்ட அழகான பெண் நிருபரின் அழகை வர்ணித்த­தோடு அவரை மது விருந்துக்கும் அழைத்திருக்கிறார். கெய்லின் இந்தச் செய்கையால் செய்தியாளர் அதிர்ச்சிக் குள்ளானார். இதற்காக கெய்லுக்கு 7,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வேடிக்கைக்காகத்தான் அவ்வாறு அந்தச் செய்தியாளரிடம் பேசினேன். அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன் என்று பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் வகையில் கெய்ல், சக நாட்டு வீரர் பிரா­வோ­வு­டன் தான் இருக்­கும் ஒரு புகைப்­ப­டத்தை கெயில் இணை­யத்­தில் பகிர்ந்­துள்­ளார். அதில் ‘செக்ஸ்­செல்ஸ்’ என்று எழு­தப்­பட்­டுள்ள ‘டி சர்டை’ அணிந்­துள்­ளார். மேலும் தனக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்தை கிண்டல் செய்­யும் வித­மாக “என் பணப் பை காலி­யாக உள்­ளது. எனவே இன்று இரவு உண­வுக்­கான பணத்தை பிரா­வோ­வின் கொடுக்­கிறார்,” என்று எழு­தி­யுள்­ளார்.2016-01-07 00:36:05 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி