இந்தியாவிற்குச் சாதகமல்ல - ஜவகல் ஸ்ரீநாத்

புதுடெல்லி: மிச்செல் ஸ்டார்க், கோல்ட்டர் நைல், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணிப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாவிட்டாலும் அது இந்திய கிரிக்கெட் அணிக்குச் சாதகமாக இராது என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடை யிலான முதல் ஒருநாள் ஆட்டம் வரும் 12ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஆஸ்தி ரேலிய அணியின் பந்து வீச்சு வரிசை அனுபவம் குன்றியதாகக் காணப்படுகிறது.

ஃபால்க்னர், ஹேசல்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்காட் போலண்ட், ஜோயல் பாரிஸ் ஆகியோர் அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் களாக இடம்பெற்றுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்